08-17-2005, 11:27 AM
[/size]அம்மா[size=12]
அம்மா என்காத உயிர் இல்லையே
அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!
எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்
எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!
எம்மை காக்க அரும்பாடுபட்டாள்
எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!
திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்
நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!
எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள்
எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!
தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க
தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு!
நாம் உண்ணும் அழகு கண்டு
தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்!
தன் உயிர் கொடுத்து
எம் உயிர் வளர்த்தாள் அன்னை!
அவள்தான் நான் உலகில் வந்து
கண்ட முதல் தெய்வம்.
அம்மா என்காத உயிர் இல்லையே
அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!
எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்
எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!
எம்மை காக்க அரும்பாடுபட்டாள்
எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!
திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்
நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!
எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள்
எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!
தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க
தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு!
நாம் உண்ணும் அழகு கண்டு
தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்!
தன் உயிர் கொடுத்து
எம் உயிர் வளர்த்தாள் அன்னை!
அவள்தான் நான் உலகில் வந்து
கண்ட முதல் தெய்வம்.
.
.
.

