10-23-2003, 07:11 AM
எனது கருத்துப் படி திரைபடங்கள் (எத் தேயத்ததுவானாலும்) தமிழ் கற்க உதவுவதில்லை. அதுவும், இக்காலகட்டத்தில் வெளிவரும் தென்னிதியப் திரைகள், சிறிதேனும் உதவாது, மாறக பார்க்கும் குழந்தைகளின் தமிழ் அறிவைக் கெடுக்க வல்லது. எடுத்துக்காட்டாக 'போய்சு' (Boys) படத்தில் வரும் இள நடிகர்கள் ஆங்கில உச்சரிப்பில் தமிழ் பேசுவது, மூத்தவருடன் ஒருமையில் பேசுவது, 'போடாங்கோ' போன்ற பண்பிலாச் சொற்பயன்பாடு, முதலியன்.
'கொப்பன்' என்பது யாழ் மாவட்டத்து வட்டார வழக்கில் மட்டும் பயன்பட்டுத்தப்படும் சொல், ஆதலால் அது தெனிந்தியத்திரைப்படத்தின் பாதிப்பு அல்ல. சிலவேலை அந்தப் பிள்ளை வளரும் சூழலின் பாதிப்பாக இருக்கலாம்.
வீட்டில் தமிழில் உரையாடினால் மட்டும் போதாது, அது உரையாடல் மொழித் திறமையை மட்டும் வளர்கும் (அதுவும் பல இல்லக்கணப் பிழைகளுடனும், பிற மொழிச்சொற்கலபுடனும்). சிறந்த ஒரு தமிழ்ப் பாடசாலையிற் சேர்த்துவிட வேண்டும். அதோடுமடுமல்லாமல் கிழமையில் அல்லது, திங்களில் ஒருமுறையாவது தமிழ்ப் பாடங்களில் பெறோர் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும். திணிப்பது...என்பது பிழையான பார்வை, ஏனெனில் ஒரு குழந்தைக்கு பெற்றோர் வழிகாட்டும் பொருட்டு சில சமயம் சிலவற்றில் கட்டாயப் படுத்தி ஈடுபடுத்த வைக்கவேண்டும். அதேன் பாடசாலை போவதையோ, கணிதம், உடொச்சு போன்ற பாடங்களைத் திணிப்பதாகக் கருதுவதில்லை. அதேனேரம் தமிழ் பயில்வதை பெறோரும் தமிழ்ப் பள்ளிகளும் சுவயாக்கலாம், அதன் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தைக் கூட்டி, எளிதில் அவர்கள் தமிழ் கற்க உதவலாம். படுக்கைக்கு முன் தமிழ்க் கதை கூறல், பரிசில் வழங்கும் தமிழ் விளையாட்டுக்கள் முதலியன மூலம் தமிழ்ப் பாடத்திற்கு சுவையூட்டலாம்.
பி.கு:
தமிழ்நாட்டுத்திரையுலகு தமிழ் நாட்டுக்கு மட்டுமல்லாமல் தமிழ் கூறும் நல் உலகதிற்கே தமிழ்த் திரைகளைப் படைக்கின்றனர். ஆனால் நற்றமிழையும் நற்றமிழ்ப்பண்பாட்டையும் கலை என்ற பெயரில் காசுக்காக சீரழிக்கின்றனர்.
இவர்களின் இத்தகைய சீரழிப்பால், இவர்களெ ஃகொலிவூட்டை வரவழைத்து தெரியாமற் தற்கொலை செய்யப்போகிறார்கள். :?
திருவாளர் சனியன் (உங்கள் பயனர்ப்பெயரை உரியமுறையில் தான் உச்சரிகிறேனோ?) அவர்களே,
நீங்கள் உங்கள் இடம் (Location) அம்பாறை என எழுதியிருக்கிறீர்கள். இங்கு நீங்கள் 'பனங்கொட்டைத் தமிழ்' எனக் குறிபிடுவது யாழ் மாவட்டத் தமிழையோ? நீங்கள் நகைச்சுவையெனக் கருதிக் கூறியிருக்கலாம், ஆனால் அது எனக்கு நகைச்சுவையாகப் படவில்லை. தயவுசெய்து எதிர்வரும் இடுகைகளில், யாழை, 'பனங்கொட்டை' எனச் சிங்களவர் போல் ஏளனஞ்செய்யாதீர்கள்.
Quote:" அவன் என்னுடைய நண்பன் - அவனுக்குப் பக்கத்தில் நிப்பது அவனுடைய கொப்பன்."
தமிழ்ப் படம் பார்த்து இப்படித் தான் கதைப்பார்கள்
'கொப்பன்' என்பது யாழ் மாவட்டத்து வட்டார வழக்கில் மட்டும் பயன்பட்டுத்தப்படும் சொல், ஆதலால் அது தெனிந்தியத்திரைப்படத்தின் பாதிப்பு அல்ல. சிலவேலை அந்தப் பிள்ளை வளரும் சூழலின் பாதிப்பாக இருக்கலாம்.
Quote:எங்கு அனுப்பினாலும் எதைப்பாற்தாலும் வீட்டில் பெற்றோர் பிள்ளைகளோடு தமிழில் உரையாடினாலே போதுமானது.
திணித்தல் என்பது தமிழை அறவே வெறுக்க வைத்து விடும்
வீட்டில் தமிழில் உரையாடினால் மட்டும் போதாது, அது உரையாடல் மொழித் திறமையை மட்டும் வளர்கும் (அதுவும் பல இல்லக்கணப் பிழைகளுடனும், பிற மொழிச்சொற்கலபுடனும்). சிறந்த ஒரு தமிழ்ப் பாடசாலையிற் சேர்த்துவிட வேண்டும். அதோடுமடுமல்லாமல் கிழமையில் அல்லது, திங்களில் ஒருமுறையாவது தமிழ்ப் பாடங்களில் பெறோர் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும். திணிப்பது...என்பது பிழையான பார்வை, ஏனெனில் ஒரு குழந்தைக்கு பெற்றோர் வழிகாட்டும் பொருட்டு சில சமயம் சிலவற்றில் கட்டாயப் படுத்தி ஈடுபடுத்த வைக்கவேண்டும். அதேன் பாடசாலை போவதையோ, கணிதம், உடொச்சு போன்ற பாடங்களைத் திணிப்பதாகக் கருதுவதில்லை. அதேனேரம் தமிழ் பயில்வதை பெறோரும் தமிழ்ப் பள்ளிகளும் சுவயாக்கலாம், அதன் மூலம் குழந்தைகளின் ஆர்வத்தைக் கூட்டி, எளிதில் அவர்கள் தமிழ் கற்க உதவலாம். படுக்கைக்கு முன் தமிழ்க் கதை கூறல், பரிசில் வழங்கும் தமிழ் விளையாட்டுக்கள் முதலியன மூலம் தமிழ்ப் பாடத்திற்கு சுவையூட்டலாம்.
பி.கு:
தமிழ்நாட்டுத்திரையுலகு தமிழ் நாட்டுக்கு மட்டுமல்லாமல் தமிழ் கூறும் நல் உலகதிற்கே தமிழ்த் திரைகளைப் படைக்கின்றனர். ஆனால் நற்றமிழையும் நற்றமிழ்ப்பண்பாட்டையும் கலை என்ற பெயரில் காசுக்காக சீரழிக்கின்றனர்.
இவர்களின் இத்தகைய சீரழிப்பால், இவர்களெ ஃகொலிவூட்டை வரவழைத்து தெரியாமற் தற்கொலை செய்யப்போகிறார்கள். :? திருவாளர் சனியன் (உங்கள் பயனர்ப்பெயரை உரியமுறையில் தான் உச்சரிகிறேனோ?) அவர்களே,

-