06-21-2003, 10:07 AM
வேட்டைக்காரர் வந்தபோதும்...
வந்த பின்பும்...
இனிப் போகும் வரையும்...
புூ சிலிர்த்த வனத்தில்
பனி தடவிய காலையிருந்தது.
இருள் புணர்ந்த காடெங்கும்
சௌந்தர்யத்தின் ஜொலிப்பு.
நாசி துளைத்தேகியது வாசம் சுமந்த காற்று.
வனப் பறவைகளின் வாயிலிருந்து
பாடலாய் வழிந்தது அமிர்ததாரை.
சலசலத்து நடந்து போயிற்று
நிறைமாதத் தாயாய் ஒரு குளவாய்க்கால்.
நாணற்புல், சடைத்த கரைமருங்கெங்கும்
மோனத் தவமிருந்தன
அடிமண்ணை நீரரித்துப் போக
தாடி முளைத்த மரவேர்கள்.
இராமுழுவதும் இன்பம் துய்த்தோய்ந்த மான்கள்
கரையிறங்கி மறுகரையேறிப் புழுதி கிளப்பிப் போயின.
பகலுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தி
நதிக்கரையில் சுவடுவிட்டு
நகர்ந்திருந்தன யானைகள்.
வேட்டைக்காரர் வராத காலை
இப்படிக் காடுறைந்து கிடந்தது
அந்த நொடிவரை.
அவரவர் அவரவர் கூட்டிலும் வீட்டிலுமாக
தத்தம் சுயத்தையும் இருப்பையும் எழுதியபடி
இருந்தது அவரவருக்கான வாழ்வு.
1505இல் முதல் வேட்டைக்காரன்
படகேறி வந்திறங்கினான் பீரங்கிகளோடு
கரையெங்கும் சாதாளை நெடிலு}
மணலெங்கும் பிணமெரிக்கும் வாடை
காடு கலங்கி முதன்முதல் கண்ணீர் விட்டது.
பிறகு இன்னொருவன்
அதன் பிறகு வேறொருவன்
வேட்டைக்காரரின் வருகை தொடர்ந்த போது
காடு கன்னிமைகிழிந்து கதறியது.
வேட்டைக்காரரின் நிறங்கள் மாறின
மொழிகள் மாறின
ஆயினும் காடு அழிவுறலானது இன்றுவரை.
ஒரு நாள் தென்திசைக் காட்டுக்கு தீமூட்டி விட்டனர்
அகதியாயின மான்களும் மயில்களும்
இன்னும் பேசாதிருந்தால் காடே எரிந்துபோம்
போராடப் போயின புலிகள்
புள்ளி மான்களும் புலியாகிப் போயின
இப்போ வனமெங்கும்
வேட்டைக்காரர்களுக்கும் மூத்த குடிமக்களுக்குமான போர்.
இந்த முதிர்காடு பறவைகளுக்கான தொட்டில்;
மிருகங்களுக்கான மரபுவழி முற்றம்;
யாருக்கும் குத்தகைக்கு கொடுக்காத கொடிக்கால்;
விட்டுக்கொடுப்புகளுக்கு இடமற்ற உரிமம்
காடு புகுந்த வேட்டைக்காரர்கள்
ஆதிக்குடிகளை பேச்சுக்கு அழைக்கும் அவலம்
காடு மீளும் வரை
வேட்டைக்காரருடன் போர் தொடரும்
புலிகள் உறுதியுரைத்துள்ளன
புள்ளிமான்களும் வரித்தோல் போர்த்துள்ளன.
மான்களின் கண்களில் இப்போ மையில்லை
கால்கள் வலுக் கொண்டுள்ளன
புூச்சிகளின் வாயிற் கூடப் போர்ப்பாட்டு
காடு கிளர்ந்தெழுந்து விட்டது
வேட்டைக் காரரெல்லாம் காடுவிட்டேகும் வரை
பாட்டின் சுருதி பிசகாது.
வந்த பின்பும்...
இனிப் போகும் வரையும்...
புூ சிலிர்த்த வனத்தில்
பனி தடவிய காலையிருந்தது.
இருள் புணர்ந்த காடெங்கும்
சௌந்தர்யத்தின் ஜொலிப்பு.
நாசி துளைத்தேகியது வாசம் சுமந்த காற்று.
வனப் பறவைகளின் வாயிலிருந்து
பாடலாய் வழிந்தது அமிர்ததாரை.
சலசலத்து நடந்து போயிற்று
நிறைமாதத் தாயாய் ஒரு குளவாய்க்கால்.
நாணற்புல், சடைத்த கரைமருங்கெங்கும்
மோனத் தவமிருந்தன
அடிமண்ணை நீரரித்துப் போக
தாடி முளைத்த மரவேர்கள்.
இராமுழுவதும் இன்பம் துய்த்தோய்ந்த மான்கள்
கரையிறங்கி மறுகரையேறிப் புழுதி கிளப்பிப் போயின.
பகலுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தி
நதிக்கரையில் சுவடுவிட்டு
நகர்ந்திருந்தன யானைகள்.
வேட்டைக்காரர் வராத காலை
இப்படிக் காடுறைந்து கிடந்தது
அந்த நொடிவரை.
அவரவர் அவரவர் கூட்டிலும் வீட்டிலுமாக
தத்தம் சுயத்தையும் இருப்பையும் எழுதியபடி
இருந்தது அவரவருக்கான வாழ்வு.
1505இல் முதல் வேட்டைக்காரன்
படகேறி வந்திறங்கினான் பீரங்கிகளோடு
கரையெங்கும் சாதாளை நெடிலு}
மணலெங்கும் பிணமெரிக்கும் வாடை
காடு கலங்கி முதன்முதல் கண்ணீர் விட்டது.
பிறகு இன்னொருவன்
அதன் பிறகு வேறொருவன்
வேட்டைக்காரரின் வருகை தொடர்ந்த போது
காடு கன்னிமைகிழிந்து கதறியது.
வேட்டைக்காரரின் நிறங்கள் மாறின
மொழிகள் மாறின
ஆயினும் காடு அழிவுறலானது இன்றுவரை.
ஒரு நாள் தென்திசைக் காட்டுக்கு தீமூட்டி விட்டனர்
அகதியாயின மான்களும் மயில்களும்
இன்னும் பேசாதிருந்தால் காடே எரிந்துபோம்
போராடப் போயின புலிகள்
புள்ளி மான்களும் புலியாகிப் போயின
இப்போ வனமெங்கும்
வேட்டைக்காரர்களுக்கும் மூத்த குடிமக்களுக்குமான போர்.
இந்த முதிர்காடு பறவைகளுக்கான தொட்டில்;
மிருகங்களுக்கான மரபுவழி முற்றம்;
யாருக்கும் குத்தகைக்கு கொடுக்காத கொடிக்கால்;
விட்டுக்கொடுப்புகளுக்கு இடமற்ற உரிமம்
காடு புகுந்த வேட்டைக்காரர்கள்
ஆதிக்குடிகளை பேச்சுக்கு அழைக்கும் அவலம்
காடு மீளும் வரை
வேட்டைக்காரருடன் போர் தொடரும்
புலிகள் உறுதியுரைத்துள்ளன
புள்ளிமான்களும் வரித்தோல் போர்த்துள்ளன.
மான்களின் கண்களில் இப்போ மையில்லை
கால்கள் வலுக் கொண்டுள்ளன
புூச்சிகளின் வாயிற் கூடப் போர்ப்பாட்டு
காடு கிளர்ந்தெழுந்து விட்டது
வேட்டைக் காரரெல்லாம் காடுவிட்டேகும் வரை
பாட்டின் சுருதி பிசகாது.

