10-22-2003, 08:24 PM
இன்னும் கொஞ்சநாளில் செல்லுலாய், உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிற துணிச்சலான இளம் ஹீரோயின் ஷெர்லீ.... யெஸ்! வேலுபிரபாகரன் தயாரிக்கும் "காதல் அரங்கம்" படத்தின் ஹீரோயின். படத்தைப் பாருங்கள்... "இவ்வளவு துணிச்சலாக எப்படி நடிக்க சம்மதித்தீர்கள்?" என்று ஷெர்லீயிடம் கேட்டோம்.
"நான் சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான். ஆனால், நாகலாந்தில் சித்தியின் வீட்டில் செல்லமாக வளர்ந்தேன். பத்தாவதுவரை அங்கு படித்தேன். பிறகு பெங்களூரிலிருக்கும் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்பா ஏர்வேஸில் வேலை செய்கிறார். ஒரே ஒரு அக்கா.
ஷெர்லீ என்ற பெயர்கூட சித்தி வைத்ததுதான். பெங்களூருக்கு வந்தபிறகு சில விளம்பரப் படங்களில் நடித்தேன். பேஷன் டெக்னாலஜி படித்து பெரிய டிசைனர் ஆவதுதான் என் விருப்பமாக இருந்தது. இங்கு சென்னையிலே படிக்க சீட் கிடைத்தது.
சென்னையில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் ஃப்ரெண்ட் வீட்டில் உள்ள என் போட்டோவைப் பார்த்துவிட்டு வேலுபிரபாகரன் சார் ஆபீசுக்கு அழைத்துப் பேசினார். கதையைச் சொன்னார். "கதைப்படி செக்ஸியாகவும், சிலசமயம் நியூடாகவும் நடிக்க வேண்டியது இருக்கும். சம்மதமா என்று யோசித்து சொல்லு" என்றார்.
எனக்கு மற்ற பெண்களைவிட தைரியம் அதிகம். முதலில் வீட்டில் சம்மதிக்கவில்லை. "நான் நடிக்கத் தயார்" என்று துணிந்து சொல்லிவிட்டேன்.
கதைக்கு எது தேவையோ அதைத்தான் செய்கிறேன். வேறு எந்தத் தவறும் செய்யவில்லை.
"படம் வெளிவந்தபிறகு பாராட்டுவார்களா, விமர்சிப்பார்களா, திட்டுவார்களா... தெரியவில்லை. ஆனால், எந்த ஒரு புரட்சி செய்யும்போதும் எதிர்ப்பு கண்டிப்பாக இருக்கும். அதைச் சந்திக்க துணிவு வேண்டும். நான் துணிந்துவிட்டேன். அவ்வளவுதான்" என்கிறார் ஷெர்லீ.
நன்றி
_ வீ. மீனாட்சிசுந்தரம்
படங்கள்: "காதல் அரங்கம்"
................

