08-16-2005, 03:36 PM
காட்சி 3
(சமையல்காரன் சின்னா சங்கிலிகளால் பிணைத்தபடி மன்னன் முன் நிறுத்தபடுகிறான்)
டண்கன் : மன்னா இதோ சின்னா ஊர் எல்லையில் சோமபானம் அருந்திகொண்டிருந்தார் பிளாவும் கையுமாய் பிடித்து வந்தேன்
மன்னன் :ஒ நீர்தான் சமையல் சின்னாவோ
சின்னா : ஆ நீர்தான் மங்களாபுரி மக்கு மன்னரோ?
மன்னன் : உமக்கு கொழுப்பு அதிகம்
சின்னா : என்றுதான் வைத்தியரும் சொன்னார் அதனால் தான் உணவில் நான் எண்ணெய் சேர்ப்பதில்லை
மன்னர் : ஆ நான் யார் தெரியுமா?
சின்னா : எனக்கென்ன கண்பார்வை குறைவா அதுதான் சொன்னேனெ மக்கு மன்னர் என்று
மன்னர் :நக்கல் நளினம் உமக்கு
சின்னா அது என் கூட பிறந்த குணம் அதை மாற்ற மனைவி சின்னாச்சியால் கூட முடியாது
மன்னர் :என் தோள்கள் துடி துடிக்கிறது கைகள் படபடக்கிறது உம்மை என்ன செய்கிறேன் பாரும்
சின்னா : அது விற்றமின் குறைபாடாக இருக்கும் நல்ல வைத்தியராய் பாரும்
மன்னர் : யாரங்கே இவன் திருடியது மட்டுமல்லாமல் திமிராக வேறு பேசுகிறான் எனவே இவனை தூக்கிலிடுங்கள்
சின்னா : வாழ்வில் புன்னகையை மட்டுமே தெரிந்த எனக்கு பொன்நகை திருடிய குற்றமா யக்கம்மா
மந்திரி :மனைவி பெயர் சின்னாச்சியென்றீர் யாரது யக்கம்மா
சின்னா : பக்கத்து வீட்டுகாரி யோவ் உம்மடை சகா எனக்கு தூக்க எண்டிட்டார் உமக்கு நக்கலா
மந்திரி : உம்மை தூக்கிலை போட்டாலும் திருந்த மாட்டீர். மன்னா எதை செய்தாலும் நாம் நல்ல நேரம் பாத்து தானே செய்வது வழமை எனவே சின்னாவை தூக்கிலிட சுப நேரம் பார்க்க வேண்டுமே
மன்னர் :அடடா மறந்து விட்டேன் இதுக்குதான் உம்மை மாதிரி அறிவுள்ள மந்திரி அருகில் வேண்டும் என்ற சொல்வது எங்கே எமது அரண்மனை சாத்திரியாரை அழைத்து வாருங்கள்
(சாத்திரியார் கையில் ஒரு வெத்திலை பெட்டி சில ஏடுகள் என்பனவற்றுடன் அரண்மனைக்குள் தாண்டி தாண்டி நுழைகிறார்)
சாத்திரி :வணக்கம் மன்னாஅழைத்தீர்களாமே
மன்னர் : ஆமாம் சாத்திரியாரே ஏன் தாண்டி தாண்டி நடக்கிறீர்கள்
சாத்திரி : ஓ அதுவா வா வாழ்க்கையெண்றால் பல துன்பங்கள் வரும் அதையெல்லாம் தாண்டி நடக்கவேண்டும் என்று எனது தந்தை சொன்னார் அதுதான்
மந்திரி : நல்லது இதோ இங்கு நிக்கும் சின்னாவை தூக்கில்போட நீங்கள் ஒரு சுப முகூர்த்தம் குறித்து கொடுங்கள்
சர்த்திரி : நல்ல விடயம் (சாத்திரி வெத்திலை பெட்டியை திறந்து ஒரு வெத்திலையை எடுத்து அதில் மையை தடவி உத்து பாக்கிறார்) ஆகா இன்றிரவு சாமம் 12 மணிக்கு ராகுவும் கேதுவும் சந்திக்கின்றனர் நல்ல நேரம் அப்போ தூக்கில் போடலாம்.
மன்னர் : யாரய்யா அது ராகு கேது அவங்கள் சாமத்திலை சந்திக்கும்வரை நான் நித்திரை முழிக்கேலாது அவன்களை நேரத்திற்கு வரச்:சொல்லும்
மந்திரி : மன்னா ராகு கேது என்பது கிரகங்கள் அதை தான் நம் மட சாத்திரியார் வெத்திலையிலை பாத்து செல்லுறார்
மன்னன் : ஓ அப்படியா அண்ட வெளியில் உள்ள கிரகங்களை உந்த அழுகின வெத்திலையிலை பாக்கலாமா?? அப்ப ஏன் மொக்குதனமா உந்த உலக நாடுகள் கஸ்ர பட்டு காசு செலவழிச்சு விண்வெளிக்கு போகினம்
சாத்திரி : மன்னா எனது தொழிலை கேவலமாக போசாதீர்கள் பின்னர் சாமி குத்தம் வந்து உம்மடை கண்ணை அம்மாளாச்சி நோண்டி போடுவா
மன்னர் : அப்படியா மன்னிக்கவும் ( எழுந்து தோப்புகரணம் போட்டு கடவுளிடம் மன்னிப்பு கேக்கிறார்)
சாத்திரி : மன்னா உந்த சமையல் சின்னா சரியான கேடி ஒருமுறை எனக்குசாம்பாறில் பேதி மருந்து கலந்து கொடுத்தவன் எனவே மன்னித்து விட்டு விடாதீர்கள்.
மன்னர் : ஆகட்டும் யாரங்கே இரவு வரும்வரை சின்னாவை வீதியால் போவோர் வருவோர் எல்லோரும் பாக்கும் படியாக வெளியில் கட்டி வையுங்கள். சின்னா உனது கடைசி ஆசை எதும் இருந்தால் கூறலாம்
சின்னா : ஆமாம் மன்னா ஒரு அஞ்சு நிமிசம் என்னை அவிட்டு விடுங்கோ உந்த குறுக்காலை போன சாத்திரியை தொண்டையிலை கடிச்சு கொண்டிட்டு நானும் சாகிறன்
( பயத்தில் மன்னர் மந்திரி சாத்திரி எல்லோரும் கதிரையின் பின்னால் ஒளிந்து கொள்ள காவலர்கள் சின்னாவை இழுத்து போகிறார்கள்) திரை...................
உறவுகளே சில அலுவல்கள்காரணமாக களத்திற்கு 4 நாட்கள் வர மடியாத காரணத்தால் அவசரமாக் இதனை இணைத்து போகிறேன் அடுத்த தொடரில் சின்னாவை தூக்கில் போடலாமா அல்லது காப்பாத்தி விடலாமா?? என்பதை நீங்களே சொல்லுங்கள்

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/