08-16-2005, 12:24 PM
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/cryingface9qa_329.gif' border='0' alt='user posted image'>
மெளனமாய் மங்கையிவள்
கடுந்தவம் புரிகிறாள்.
காதலன் வரவிற்காய்.
கண்ணீருடன்..!
மெல்லப்பேசுங்கள்
மெளனமே இங்கு
மொழியானது
மெளனம் கலைத்து
சாபத்தை வாங்கிக்கட்டாதீர்கள்..!
கண்ணால் கதை பேசியவள்
கண்ணீரால் பேசுறாள்
கண்ணா காதலா
கரம் சேராயோ என்று
காத்திருந்து
கடும் தவமும் புரிகிறாள்..!
கண்கள் கொண்டு
கண்ட கண்ணாளன் மட்டும்
கலங்காமலா இருப்பான்..???!
கணமும் அவள் நினைவில்
கரைந்திடுவான் அவளோடு..!
காத்திருப்பும் கண்ணீரும்
காதலியே உனக்கு
காதலின் ஆழம் சொல்லி இருக்குமே
காதல் பள்ளியில்
கனிவான குழந்தைகள் நாம்
கண்ணீருக்கு கலங்குதல் ஆகுமோ....
காதல் பாடம் ஒன்றும்
கல்விக்கூடம் சொல்லும் இலகு பாடமல்ல
மெளனமே மொழியாகி
பரீட்சை எழுதுகிறது
நிச்சயம் வெற்றி எமக்கே..!
காதலிக்கா காதலன் குரல்....காதலனுக்காக குருவிகளின் குரல்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

