08-15-2005, 07:30 AM
கஜினி
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2005/augest/kajini02.jpg' border='0' alt='user posted image'>
எழுதி வச்சுக்கங்க, கஜினி எத்தனை நாள் ஓடிச்சுன்னு நான் 100-வது நாளில் இருந்துதான் எண்ண ஆரம்பிப்பேன் என்கிறார் அப்படத்தின் டைரக்டர் முருகதாஸ். அதாவது 101-வது நாளைதான் இவரு 1-வது நாள் என்றே கணக்கில் வைப்பாராம். நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். அதுக்காக இம்புட்டு நம்பிக்கையா என்று கேட்டாலும், முருகதாஸ் பட்ட வேதனை அம்புட்டு இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் கதையை சொல்ல அவர் முன்னணி ஹீரோக்களை தேடி போகும் போது அவர்கள் தந்த அவமானத்தில்தான் இப்படி வெறியோடு பேசுகிறாராம் முருகதாஸ். இதற்கு முன் கஜினி கதையை எத்தனை ஹீரோக்கள் கேட்டிருக்கிறார்கள் தெரியுமா? 12 பேர்! அத்தனை பேரையும் ஓட வைத்தது எது தெரியுமா? படத்தின் ஹீரோ மொட்டை போட வேண்டும் என்ற விஷயம்தான்.
<img src='http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2005/augest/kajini03.jpg' border='0' alt='user posted image'>
இந்த கதையும் மனநோய் கதை போல தெரிகிறதே...? கேட்டால், அதே விறைப்போடு பேசுகிறார் முருகர்.
ரமணா மாதிரி நிறைய கதைகள் தமிழில் வந்திருக்கு. ஆனால் ரமணாவுக்குன்னு தனி ஸ்டைல் இருந்திச்சு. படமும் பெரிய ஹிட் ஆச்சு. அதே மாதிரிதான் கஜினியும். சந்திரமுகி, அந்நியன்னு மனநோய் சம்பந்தப்பட்ட கதைகள் வெளிவந்திருந்தாலும் கஜினி வேற மாதிரி இருக்கும். ஒரு படத்திற்கு திரைக்கதைதான் முக்கியம். கஜினியின் திரைக்கதையை ரொம்ப சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் அமைச்சிருக்கோம். அந்த நம்பிக்கையில்தான் இப்படி பேசுறேன்.
தன்னம்பிக்கைக்கு உதாரணமா சொல்ற பேருதான் கஜினி. உலகில் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவரா இருக்கிற சஞ்சய் ராமசாமி தன்னால் சாதிக்க முடியாது என்று எதிரிகள் சொல்கிற ஒரு காரியத்தை செய்து முடிப்பதுதான் கதையின் கரு. இதை அடிதடி ஆக்ஷன், அழகான லவ் என்று கலந்து கட்டி சொல்லியிருக்கேன் என்கிறார் முருகதாஸ்.
கஜினி சூர்யாவோடு டூயட் ஆடுவது மட்டுமல்ல... நடிப்பிலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறாராம் அசின். சுள்ளான், பிப்ரவரி-14 என்று இரண்டு படங்களை எடுத்து, வேறு மாதிரியான அதிர்ச்சியில் இருக்கிற தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரை கஜினி காப்பாற்றுவான் என்று நம்புகிறது கோலிவுட்! கூடவே நாமும்!
தமிழ் சினிமா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>