08-14-2005, 10:44 PM
ஒரு மாபெரும் கூட்டம்
இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய
பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று.
கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு
அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி
விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு
பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர்
எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை
அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார்.
அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர்
அந்தக் குறிப்புகளைப் படித்துவிட்டார். அந்தக்
குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக
இருந்தது.
கூட்டம் துவங்கியது.
அடுத்தவர் குறிப்பை பார்த்தவருக்குத்தான் முதலில்
பேச வாய்ப்பு. எதிர் பேச்சாளர் எழுதி வைத்திருந்த
குறிப்புகளையெல்லாம் எடுத்து தன்னுடைய
கருத்துக்கள் போல் பேசினார்.
ஏக கைதட்டல்.
எதிரி பேச்சாளருக்கு விஷயம் புரிந்துவிட்டது.
அடுத்து அவர் பேசவேண்டும். ஆனால் பேசுவதற்கு
ஒன்றும் இல்லை. என்ன செய்வது?
எழுந்தார். மைக்கைப் பிடித்தார்.
''முதலில் எனக்கு முன்னால் பேசிய நண்பருக்கு நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தொண்டைக் கட்டு
சரியா பேசமுடியாது. என்னுடைய உரையை நீங்கள்
வாசிக்க முடியுமா என்று கூட்டம் துவங்குவதற்கு
முன்பு கேட்டேன். அவர் பெருந் தன்மையாக
ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்'' என்று
கூறி அமர்ந்தார்.
[size=18]<b>நீதி:</b> சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுபவன்தான் புத்திசாலி
நன்றி
குமுதம்