Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சைப்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 121 பேர் பலி
#3
<b>சைப்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 121 பேர் பலி</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40688000/jpg/_40688076_afp_helios203.jpg' border='0' alt='user posted image'>
சைப்பிரஸ் நாட்டு விமானம் ஒன்றின் விமானிகள் இருவரும் விமானத்தில் செயலற்றுப் போனதாகக் கூறப்படுவதையடுத்து அந்த விமானம் கிரேக்கத் தலைநகர் எதென்ஸ் நகரின் வடக்கே மலைப்பகுதியில் வீழ்ந்ததில் 121 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

மோதி வெடித்த இந்த விமானத்தின் சிதிலங்கள் ஒரு பெரிய பரப்பளவுக்கு சிதறின.

இந்த விபத்தில் எவரும் உயிர் தப்பியிருபார்கள் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கிரேக்க மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த விமானம் ஒரு விபத்திலேயே வீழ்ந்திருக்க வேண்டும் என்று நிர்வாகம் கூறுகிறது.

விமானத்தின் ஒட்சிசன் வழங்கும் தொகுதியில் அல்லது அழுத்தத்தை மேம்படுத்தும் தொகுதியில் ஏற்பட்ட பழுதே இதற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இந்த விமானம் இழந்த பின்னர்இ அந்த விமானத்துக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய அதனுடன் அனுப்பப்பட்ட போர் விமானங்களின் தகவல்களின்படிஇ விபத்துக்குள்ளான விமானத்தின் விமானிகள்இ அவர்களுக்கான அறையில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும் அல்லது அவர்கள் சுயநினைவை இழந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
BBC
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 08-14-2005, 02:22 PM
[No subject] - by AJeevan - 08-14-2005, 06:11 PM
[No subject] - by கீதா - 08-14-2005, 07:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)