06-21-2003, 10:04 AM
சித்தாந்தன்
துப்பாக்கி முகமணிந்த அவர்கள்
நெருப்புத் தெறிக்கும் சொற்களை
காற்றில் எழுதுகிறார்கள்.
நீண்டு கிடக்கும் மனித வரிசையில்
அவஸ்தையுறுகிறது.
என் மனமும் கனவுகளும்
பீதியிலுறைந்த விழிகளை
கொடூர முகங்களிலிருந்து விலக்கி
பார்வையை திருப்ப முடியாதபடி
சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
தோழில் மாட்டியிருக்கிற தோற்பையின்
ஒடுங்கியபட்டி
மனதை இறுக்கிக்கொண்டிருக்கிறது.
நட்சத்திரங்களை வருடிவரும்
இனிய என் பாடல்
கால்களுக்கிடையில் அழுந்தி சிதைகிறது.
கிரகணங்களை அள்ளியுூற்றும்
சூரிய நடுப்பகலில்
என இளமை கருகி எரிகிறது.
ஒவ வொரு மனித முகத்தையும்
துப்பாக்கி முகங்கள் சந்தேகமெழ
பார்ப்பதாய்
உயிரை உறுத்தும் வலி
மனதைத் துண்டுகளாக உடைக்கின்றது.
இந்த உயிர்த்தொடுகை வரிசையில்
வாழ்வு அறுபடும் கணம்
என் தலையில் எழுதப்பட்டிருக்கலாம்.
படபடப்பு நிறைந்த கைகளால்
அடையாள அட்டையை எடுக்கிறேன்
அதில்
இப்போதுள்ள என்முகம் இல்லையென
எல்லோரும் சொல்கிறார்கள்.
துப்பாக்கி முகமணிந்த அவர்கள்
நெருப்புத் தெறிக்கும் சொற்களை
காற்றில் எழுதுகிறார்கள்.
நீண்டு கிடக்கும் மனித வரிசையில்
அவஸ்தையுறுகிறது.
என் மனமும் கனவுகளும்
பீதியிலுறைந்த விழிகளை
கொடூர முகங்களிலிருந்து விலக்கி
பார்வையை திருப்ப முடியாதபடி
சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
தோழில் மாட்டியிருக்கிற தோற்பையின்
ஒடுங்கியபட்டி
மனதை இறுக்கிக்கொண்டிருக்கிறது.
நட்சத்திரங்களை வருடிவரும்
இனிய என் பாடல்
கால்களுக்கிடையில் அழுந்தி சிதைகிறது.
கிரகணங்களை அள்ளியுூற்றும்
சூரிய நடுப்பகலில்
என இளமை கருகி எரிகிறது.
ஒவ வொரு மனித முகத்தையும்
துப்பாக்கி முகங்கள் சந்தேகமெழ
பார்ப்பதாய்
உயிரை உறுத்தும் வலி
மனதைத் துண்டுகளாக உடைக்கின்றது.
இந்த உயிர்த்தொடுகை வரிசையில்
வாழ்வு அறுபடும் கணம்
என் தலையில் எழுதப்பட்டிருக்கலாம்.
படபடப்பு நிறைந்த கைகளால்
அடையாள அட்டையை எடுக்கிறேன்
அதில்
இப்போதுள்ள என்முகம் இல்லையென
எல்லோரும் சொல்கிறார்கள்.

