08-14-2005, 06:09 PM
விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தையார் இயக்கிய படங்களில் சிறுவனாக நடித்தும் கலக்கியிருக்கின்றார். பின்பு அவர் கதாநாயகனாகக நடித்து வந்த முதல் படத்திற்கு குமுதம் பத்திரிகை மிகவும் கேவலமாக இவங்களையெல்லாம் யார் நடிக்கச் சொன்னது இவங்களெல்லாம் நடித்து ஏன் எம் உயிரை எடுக்கிறாங்க என்று எழுதியது இன்றும் என் ஞாபகத்திலுள்ளது.. வேறு யாராவது நடிகரெண்டால் இப்படியான விமர்சனங்களைப் பார்த்து துவண்டு போயிருப்பார்கள். ஆனால் விஜய் சோர்ந்து விடாமல் தன் திறைமைகளை வளர்த்து வெற்றி கண்டிருப்பது அவர் மனோ திடத்தைக் குறிக்கின்றது.

