Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" சுட்டுக் கொலை
#66
பாதுகாப்பு ஓட்டையை இனங்கண்டு செயற்பட்ட துப்பாக்கிதாரிகள்

<b>அமைச்சர் கதிர்காமரின் கொலையால் பேரதிர்ச்சியடைந்துள்ள படையினர்</b>

வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு அடுத்தபடியாக அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த கதிர்காமர் அவரது வீட்டில் வைத்து சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டமை, அவரது பாதுகாப்பு ஏற்பாட்டில் பாரிய ஓட்டையிருந்ததை அப்பட்டமாக்கியுள்ளது.



வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் கதிர்காமர் இலங்கை அரசுக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அவரது ஒவ்வொரு செயற்பாடும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்த அதேநேரம் சிங்களவர்கள் மத்தியில் இது அவருக்குப் பெரும் புகழைத் தேடிக்கொடுத்தது.

இதனால் நாளுக்கு நாள் அவரது முக்கியத்துவம் தென்பகுதியில் உணரப்பட்டு அதற்கேற்ப அவரது பாதுகாப்பும் பலமடங்காக அதிகரிக்கப்பட்டது.

அமைச்சர் கதிர்காமரின் கொலைக்கு இதுவரை எவருமே உரிமை கோராத போதிலும் விடுதலைப் புலிகளே இந்தக் கொலையைச் செய்ததாக அரசும், பொலிஸ் தரப்பும் கூறுகின்றன. புலிகளைத் தவிர இந்தக் கொலையை வேறு எவரும் செய்திருக்க மாட்டார்களென்றும் செய்யவேண்டிய தேவையில்லை எனவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

சம்பவம் நடைபெற்றதை அறிந்த உடனேயே, தனது பாதுகாப்பைப் பற்றியும் கருதாது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு காரில் வந்துள்ளார். அந்தளவிற்கு இந்தச் செய்தி ஜனாதிபதியை நிலைகுலையச் செய்தது. கதிர்காமரின் இழப்பானது, ஜனாதிபதியை பொறுத்தவரை ஈடிணையற்றது. அந்தளவிற்கு கதிர்காமர் ஜனாதிபதிக்கு விசுவாசமாகவும் தனது இனத்திற்கு எதிராகவும் செயற்பட்டிருந்தார்.

அமைச்சர் கதிர்காமரின் கொலையை அடுத்து, வடக்கு - கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான `ஏ-9' பாதைகூட நேற்றுச் சனிக்கிழமை நண்பகல் வரை திறக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளே இந்தக் கொலையைச் செய்ததாகக் கருதும் அரசு, கதிர்காமரைச் சுட்டவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான பாதைகளை மூடினர்.

அமைச்சர் கதிர்காமருக்கு கொழும்பு - 7 இல் இரு வாசஸ்தலங்களுள்ளன. புல்லர்ஸ் லேனில் தனிப்பட்ட தங்ககமும் விஜயராம மாவத்தையில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் உள்ளது. புல்லர்ஸ் லேனிலுள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிருந்தும், அதையும் தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை, அமைச்சர் கதிர்காமரின் நூல்வெளியீடு நடைபெற்றது. நூலின் முதற் பிரதியை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் பெற்றார். இந்த விழா முடிவடைந்த பின்னர், விஜயராம மாவத்தையிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குப் புறப்பட்ட அவர், அதற்கு முன்னர் புல்லர்ஸ் லேன் வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்திற்கு மனைவியுடன் சென்றுள்ளார்.

இங்கு நீச்சலை முடித்துக்கொண்டு விஜயராம மாவத்தை வீட்டிற்குச் செல்வதற்காக அமைச்சர் கதிர்காமர் மனைவியுடன் புறப்பட்டு காரில் ஏறுவதற்காக நடந்து வந்துகொண்டிருந்த போதே அடுத்தடுத்து இரு குண்டுகள் கதிர்காமரின் தலையையும், மார்பையும் துளைத்தன. தலையில் ஒரு குண்டும் மார்பில் ஒரு குண்டும் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடன் ஒன்றாக (அருகே) நடந்து வந்த கதிர்காமர் திடீரென பின்புறமாகச் சரிந்து வீழ்வதை, உடன் வந்த மனைவி அவதானித்துள்ளார். எந்தவிதச் சத்தமும் கேட்காததால் மயக்கமடைந்துதான் அவர் வீழ்ந்ததாக நினைத்த மனைவி, ஓடிச்சென்று பார்த்தபோது தலையிலிருந்தும், மார்பிலிருந்தும் இரத்தம் பாய்வதை அவதானித்து அலறவே படையினர் விரைந்து வந்து தூக்கி அவரை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் சில மணிநேரத்தில் அங்கு அவர் மரணமானார்.

அமைச்சர் கதிர்காமர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதைப் படையினர் உணர்ந்து கொண்டாலும் `சினைப்பர்' தாக்குதல் தான் அது என்பதை கண்டுபிடிக்க சில நிமிடநேரங்கள் பிடித்துள்ளது. `சைலன்சர்' பொருத்தப்பட்ட துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருந்தால் கூட, சுட்டவர்கள் அந்த வீட்டு வளவினுள் இருந்திருக்க வேண்டும். ஆனால், உடனடித் தேடுதலில் எவரும் சிக்காததாலும், தாக்குதலின் பாணியும் சினைப்பர் தாக்குதலே நடத்தப்பட்டுள்ளதென்பது தெரிய வந்தது.

ஆனாலும், எங்கிருந்து எவ்வாறு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை உடனடியாக அவர்களால் அறிய முடியாதபோதும், கதிர்காமரின் வீட்டின் நான்கு புறத்திலுமுள்ள ஏதாவதொரு வீட்டிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கவேண்டுமென்பதைப் படையினர் உணர்ந்தனர். கதிர்காமரின் வீட்டைச் சுற்றியுள்ள வீடுகள் மேல்வீடுகளென்பதால் உடனடியாகவே சகல வீடுகளுக்குள்ளும் தேடுதலுக்கான பெருமளவு படையினர் சென்றனர்.

குண்டுத் தாக்குதலுக்கிலக்கானவரோ அல்லது கதிர்காமரின் மனைவியோ அல்லது கதிர்காமரின் வீட்டின் நான்கு புறங்களிலும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினருக்கோ, குண்டு எங்கிருந்து வந்ததெனத் தெரிந்திருக்கவில்லை. இதனால் கதிர்காமரின் வீட்டைச் சுற்றியிருந்த மாடிவீடுகளில் படையினர் தீவிர தேடுதல்களை நடத்தினர்.

அவ்வேளையில் கதிர்காமரது வீட்டின் வலது புறமாக உள்ள இரு மாடிகளைக் கொண்ட வீட்டின் குளியல் அறையினுள், சினைப்பரை பொருத்தி தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக மேடையொன்றும் `ஸ்ரான்ட்' ஒன்றுமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் பயன்படுத்திய சில பொருட்களும் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த வீட்டில் வயோதிப தமிழ்த் தம்பதியர் இருவரே இருந்துள்ளனர். படையினர் அவர்களது வீட்டைத் தட்டித் திறந்து உள்ளே சென்றபின்னர்தான் என்ன நடந்ததென அவர்கள் அறிந்துகொண்டனர். அவர்களது வீட்டின் மேல் மாடியில் குளியலறையில்` ஸ்ரான்ட்'டும் வேறுபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகவே தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

வீட்டின் 2ஆவது மாடியில் குளியலறையில் ஜன்னலுக்கு மேலேயுள்ள `கிறில்' கல்லு உடைக்கப்பட்டு சிறு ஓட்டையொன்றை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தினூடாக சினைப்பரை ஸ்ரான்டில் பொருத்தியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குளியலறைக்குள் இரும்புக் கம்பிகளைப் பொருத்தி சுமார் ஏழு அடி உயரத்திற்கு மேடையொன்று அமைக்கப்பட்டு அதன் நடுவில், மெல்லிய இரு இரும்புக் கேடர்கள் அமைத்து அதன் குறுக்கே ஒரு கேடரை பொருத்தி அதில் ஒருவர், சைக்கிள் சீற்றில் இருப்பது போன்று வசதியாக இருக்கும் வகையில் சீற் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னால், ஜன்னல் கிறிலினூடாக சினைப்பரை வெளியே நீட்டி வைப்பதற்கு வசதியாக ஸ்ரான்ட் ஒன்றும் பொருத்தப்பட்டு அதில் சினைப்பரைப் பொருத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரு குண்டுகள் கதிர்காமரின் தலையிலும், மார்பிலும் பாய்ந்துள்ளன.

சினைப்பரைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் ஒரு தடவையே சுடமுடியும். இயந்திரத் துப்பாக்கிகள் போன்று பல சுற்றுக்கள் சுடமுடியாது. ஒரு தடவை சினைப்பர் குண்டு பாய்ந்தால், மீண்டும் அதில் குண்டை நிரப்பி விட்டே மறுமுறை சுடமுடியும். இவ்வாறான வேளைகளில் குண்டை மீண்டும் சினைப்பரில் நிரப்பி சுடுவதென்பது சாத்தியப்படாததொன்றென்பதால் சினைப்பரை கையாள்வதில் மிகவும் தேர்ச்சியுள்ள இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

ஆனால், குளியலறை ஜன்னலின் மேலுள்ள கிறிலில் ஒரு சினைப்பரை நுழைத்துச் சுடுவதற்கேற்பவே துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தச் சினைப்பரின் இலக்கு குறிதவறாமல் கதிர்காமரைத் தாக்க வேண்டுமென்பதற்காக வசதியாக `ஸ்ரான்ட்' ஒன்றும் அங்கு வைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்ட சினைப்பர் மூலம் முதல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

அதேநேரம், இந்தத் தாக்குதலில் குறிதப்பினால் இலக்கை உடனடியாகத் தாக்குவதற்காக அந்தக் கட்டிடத்தில் இன்னொரு பகுதியில் இன்னொருவர் சினைப்பருடன் நின்று அவரும் கதிர்காமர் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் விசாரணையாளர்கள் கருதுகின்றனர். இதனால் இந்தத் தாக்குதலிலிருந்து (இரு சினைப்பர்காரர்களினதும்) கதிர்காமர் தப்பிவிடக் கூடாதென்பதில் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் மிகக் கவனமாயிருந்துள்ளனர்.

தற்செயலாக இந்தத் தாக்குதலில் குறிதவறியிருந்தால் தாக்குதலை நடத்தியவர்களைப் படையினர் உடனடியாகப் பிடித்திருக்க முடியும், ஏனெனில் தாக்குதலிலிருந்து தப்புபவருக்கு குண்டுகள் எங்கிருந்து பாய்ந்து வருகின்றன என்ற திசை தெரியும். ஆனால், இந்தத் தாக்குதலில் இரு குண்டுகளும் கதிர்காமரை உடனடியாகவே மிக மோசமாகத் தாக்கிவிட்டதால் அவர் அவ்விடத்திலேயே சுயநினைவின்றி வீழ்ந்து விட்டார். அதேநேரம், கதிர்காமரின் அருகில் வந்த மனைவிக்கே என்ன நடந்ததெனத் தெரியாதளவிற்கு தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

கதிர்காமர் மயங்கி வீழ்வதாகவே முதலில் மனைவி நினைத்துள்ளார். அருகில் சென்று பார்த்த போதுதான் அவரது தலையிலும், மார்பிலும் குண்டு துளைத்தது தெரிய வந்தது.

இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சினைப்பர்கள் மிக நவீனமானவையாகவும், குண்டு புறப்படும்போது மிகக் குறைந்த சத்தத்தையே வெளியிடுபவையாகவும் இருக்கலாமென்றும் கருதப்படுகிறது.

இரவு நேர பார்வைக் கண்ணாடியும் (நைற் விஷன்) `சூம்' லென்ஸும் பொருத்தப்பட்ட சினைப்பரே பயன்படுத் தப்பட்டுள்ளது.சுட்டவர்களுக்கும் கதிர்காமருக்குமிடையே 300 மீற்றர் தூர இடைவெளி இருந்துள்ளது.

கதிர்காமரின் இல்லம் இருக்குமிடம் மிகவும் அமைதியான சூழலில் இருப்பதால் சிறு சத்தம் கூட அவரது மெய்ப்பாதுகாவலர்களுக்கும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் துல்லியமாகக் கேட்டிருக்கும். ஆனால், இது எவருக்குமே கேட்கவில்லை.

அதேநேரம் கதிர்காமர் குண்டுகள் துளைத்து வீழ்ந்த நிலையில் அவரைக் காப்பாற்றவேண்டும்,ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லவேண்டுமென்ற முனைப்பிலேயே அவரது மெய்ப்பாதுகாவலர்களும், படையினரும் இருந்ததால் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி துப்பாக்கிதாரிகள் இருவரும் விரைந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.

அத்துடன் அவ்வாறான சந்தர்ப்பத்திலும் அவர்கள் எப்படி அந்தச் சினைப்பர்களைக் கொண்டு சென்றார்களென்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது. தாக்குதலை இருந்து நடத்திய வீட்டின் மேல்மாடியிலிருந்து இறங்கி, நீண்ட சினைப்பரை பாகம் பாகமாகக் கழற்றி எவரது கண்களிலும் சிக்காமல் அவர்கள் எப்படித் தப்பிச் சென்றார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டு துப்பாக்கி நபர்களை ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடும் முயற்சியும் நடந்தது. சக்திமிக்க வெளிச்சத்தை வெளிப்படுத்தும் விளக்குகள் பொருத்தி ஹெலிகொப்டர்கள் தேடுதல் நடத்தியும் துப்பாக்கி நபர்களைப் பிடிக்க முடியாததாலேயே, அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக வடக்கு - கிழக்கில் புலிகளின் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன.

இதேநேரம், இந்தத் தாக்குதலை புலிகள்தான் நடத்தினார்களென்றால், கொழும்பில் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்படும் மிக முக்கிய தலைவர் ஒருவருக்காக முதல் தடவையாக சினைப்பர் தாக்குதல் நடத்தியுள்ளரெனலாம். இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். பின் (வரதர் அணி) முக்கியஸ்தரான ரி.சுபத்திரன் அவரது அலுவலகத்தின் மேல் மாடியில் உடற்பயிற்சியிலீடுபட்டிருந்த வேளை சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

புலிகளைப் பொறுத்தவரை எட்டமுடியாத இலக்குகளைத் தாக்க தற்கொலைக் குண்டுதாரிகளையே பயன்படுத்துவர். மிக நெருங்கி கிட்டத்திலிருந்து துல்லியமாக நடத்தப்படுவது தற்கொலைக் குண்டுத்தாக்குதல். மிக எட்டத்திலிருந்து மிகத் துல்லியமாக நடத்தப்படுவது சினைப்பர் தாக்குதல். புலிகள்தான் இதனைச் செய்தார்களென்றால் அவர்களது தாக்குதல் பாணி மாறுகின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதேநேரம், நாட்டில் ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவரை இந்தளவு தூரம் உளவு பார்த்துள்ளதும் இந்தத் தாக்குதலின் மூலம் தெரியவந்துள்ளது. தற்காலிக வாசஸ்தலம், நிரந்தர வாசஸ்தலமென இரு வாசஸ்தலத்தைக் கொண்டிருந்த மிக மிக முக்கிய புள்ளியொருவரை எவ்வாறு இவ்வளவு துல்லியமாக உளவு பார்த்துள்ளார்களென்ற கேள்வியும் எழுகிறது.

அதி உயர்பாதுகாப்பு வழங்கப்படும் ஒருவரின் ஒரு வாசஸ்தலத்தை மையமாக வைத்து உளவுபார்ப்பதென்பது சாதாரண விடயமல்ல. அவ்வாறிருக்கையில் அவரது இரு வாசஸ்தலத்தையும் ஒரே நேரத்தில் உளவு பார்ப்பதென்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாததொன்று.

ஆனாலும், துல்லியமான உளவுத் தகவல்கள்தான், வெள்ளிக்கிழமை இரவு கதிர்காமர் அங்கு வருவாரென்பதை உறுதிப்படுத்தி துப்பாக்கி நபர்கள் அடுத்த வீட்டின் மேல்மாடியில் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் காரியத்தை நிறைவேற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கதிர்காமரின் புல்லர்ஸ் லேன் வாசஸ்தலத்தில் நீச்சல் தடாகமிருப்பதும் அவர் இரவு நேரத்தில் அங்கு வருவதும் உளவுத் தகவல்கள் மூலம் தெளிவாகியுள்ளது. பகல் வேளைகளில் கூட சிலநேரம் நீச்சல் தடாகத்திற்கு அவர் வந்து செல்வதை உளவுத் தகவல்கள் மூலம் துப்பாக்கிதாரிகள் அறிந்திருந்தாலும், தாங்கள் தப்பிச் செல்வதற்கு இரவு நேரமே பொருத்தமென்பதால் இரவுப் பொழுதிற்காக காத்திருந்திருக்கலாம்.

அதேநேரம், வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் புத்தக வெளியீட்டிற்குச் செல்வதும் பின்னர் கதிர்காமர் நீச்சல் தடாகத்திற்கு வரப்போவதும் உளவுத் தகவல்கள் மூலம் அறியப்பட்டு துப்பாக்கிதாரிகள் காத்திருந்துள்ளனர்.

இந்த வாசஸ்தலத்தின் பாதுகாப்பைவிட விஜயராம மாவத்தையிலுள்ள கதிர்காமரின் நிரந்தர வாசஸ்தலத்தின் பாதுகாப்பு மிகவும் அதிகம். அதனால் கதிர்காமரை அங்கு வைத்து இலக்கு வைப்பதென்பது மிக மிகக் கடினமென்பதாலேயே பாதுகாப்பு குறைந்த இந்த இடம் அவர்களுக்கு வசதியாகப் போனது.

அதேநேரம், நாட்டின் மிக மிக முக்கியமான தலைவரொருவரை இந்தளவிற்கு உளவு பார்த்து அவரை, அவருக்கு அருகிலிருந்தே சினைப்பர் தாக்குதல் மூலம் கொல்ல முடியுமென்பதை தாக்குதல்காரர்கள் உணர்த்தும் அளவிற்கு அவரது பாதுகாப்பில் பெரும் ஓட்டை இருந்துள்ளது.

அதைவிட, அருகிலிருந்த வீட்டில் அவர்களுக்கும் தெரியாது நுழைந்து நீண்ட நாட்கள் காத்திருந்து உளவு பார்த்து சம்பவதினம் அல்லது அதற்கு முன்பே சினைப்பர்களைக் கொண்டு வந்து சேர்த்து மிகவும் துல்லியமாகத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை அரசை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேற்படி வீட்டின் பின்புறத்தில் வெற்றுக் காணியுள்ளது. அங்கு சிறு பற்றைகளுமுள்ளன. அதனூடாகவே தாக்குதல்காரர்கள் உளவு பார்க்க வந்தும் தாக்குதல் நடத்த வந்துமுள்ளதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர். தாக்குதலின் பின் அதனூடாகவே தப்பிச் சென்றுமுள்ளனர்.

நேற்றுக் காலை அந்தக் காணிக்குள் தேடுதல் நடத்தப்பட்டபோது, கிரனைட் லோஞ்சர் ஒன்றும் அதற்கான குண்டுகளும் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், சினைப்பர் தாக்குதலுக்கு வாய்ப்பில்லாது போனால் கதிர்காமரின் கார் மீது கிரனைட் லோஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

இவ்வாறு, நாட்டின் முக்கிய தலைவரொருவர் மிக இலகுவாக இலக்கு வைக்கப்பட்டமை படைத் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமரைப் புலிகள் தாக்குவதாயின் தற்கொலைக் குண்டுதாரிகளையே பயன்படுத்துவார்களென்ற மிகுந்த முன்னெச்சரிக்கையால், கதிர்காமருக்கு அருகே எவரும் நெருங்காமல் படையினர் பாதுகாக்க, கதிர்காமருக்கு மிகவும் தூரத்திலிருந்தே தாக்குதல்காரர்கள் அவரைத் தாக்கிவிட்டுச் சென்று விட்டனர்.

thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 08-12-2005, 06:27 PM
[No subject] - by cannon - 08-12-2005, 06:31 PM
[No subject] - by கறுணா - 08-12-2005, 06:40 PM
[No subject] - by narathar - 08-12-2005, 06:45 PM
[No subject] - by Nitharsan - 08-12-2005, 06:46 PM
[No subject] - by narathar - 08-12-2005, 06:50 PM
[No subject] - by kavithaa - 08-12-2005, 06:53 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 07:04 PM
[No subject] - by வினித் - 08-12-2005, 07:05 PM
[No subject] - by கறுணா - 08-12-2005, 07:09 PM
[No subject] - by Mohan - 08-12-2005, 07:12 PM
[No subject] - by narathar - 08-12-2005, 07:13 PM
[No subject] - by அனிதா - 08-12-2005, 07:14 PM
[No subject] - by narathar - 08-12-2005, 07:18 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 07:23 PM
[No subject] - by Thala - 08-12-2005, 07:28 PM
[No subject] - by கீதா - 08-12-2005, 07:34 PM
[No subject] - by shanmuhi - 08-12-2005, 07:50 PM
[No subject] - by Sriramanan - 08-12-2005, 08:29 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 08:33 PM
[No subject] - by Sriramanan - 08-12-2005, 08:34 PM
[No subject] - by adsharan - 08-12-2005, 09:14 PM
[No subject] - by tamilini - 08-12-2005, 09:14 PM
[No subject] - by AJeevan - 08-12-2005, 09:36 PM
[No subject] - by வன்னியன் - 08-12-2005, 09:37 PM
[No subject] - by AJeevan - 08-12-2005, 09:46 PM
[No subject] - by vasisutha - 08-12-2005, 09:51 PM
[No subject] - by Niththila - 08-12-2005, 09:53 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 08-12-2005, 10:06 PM
[No subject] - by eelapirean - 08-12-2005, 10:31 PM
[No subject] - by muniyama - 08-12-2005, 10:48 PM
[No subject] - by kurukaalapoovan - 08-12-2005, 11:22 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 08-12-2005, 11:24 PM
[No subject] - by anpagam - 08-12-2005, 11:49 PM
[No subject] - by hari - 08-13-2005, 01:54 AM
[No subject] - by hari - 08-13-2005, 02:32 AM
[No subject] - by lankan - 08-13-2005, 04:27 AM
[No subject] - by Nitharsan - 08-13-2005, 05:54 AM
[No subject] - by jeya - 08-13-2005, 05:55 AM
[No subject] - by Thala - 08-13-2005, 06:26 AM
[No subject] - by sinnappu - 08-13-2005, 06:51 AM
[No subject] - by MUGATHTHAR - 08-13-2005, 06:52 AM
[No subject] - by sinnappu - 08-13-2005, 06:54 AM
[No subject] - by வியாசன் - 08-13-2005, 07:14 AM
[No subject] - by sinnappu - 08-13-2005, 07:54 AM
[No subject] - by வியாசன் - 08-13-2005, 08:12 AM
[No subject] - by narathar - 08-13-2005, 08:43 AM
[No subject] - by வன்னியன் - 08-13-2005, 08:44 AM
[No subject] - by narathar - 08-13-2005, 09:09 AM
[No subject] - by narathar - 08-13-2005, 09:13 AM
[No subject] - by vijitha - 08-13-2005, 10:42 AM
[No subject] - by Mathuran - 08-13-2005, 11:17 AM
[No subject] - by Thala - 08-13-2005, 11:43 AM
[No subject] - by Birundan - 08-13-2005, 09:40 PM
[No subject] - by hari - 08-14-2005, 02:48 AM
[No subject] - by hari - 08-14-2005, 03:07 AM
[No subject] - by Vaanampaadi - 08-14-2005, 04:53 AM
[No subject] - by Mathan - 08-14-2005, 10:08 AM
[No subject] - by Mathan - 08-14-2005, 10:10 AM
[No subject] - by AJeevan - 08-14-2005, 01:26 PM
[No subject] - by AJeevan - 08-14-2005, 06:21 PM
[No subject] - by Danklas - 08-14-2005, 07:30 PM
[No subject] - by kirubans - 08-14-2005, 08:02 PM
[No subject] - by kirubans - 08-14-2005, 08:52 PM
[No subject] - by Danklas - 08-14-2005, 09:20 PM
[No subject] - by AJeevan - 08-14-2005, 09:42 PM
[No subject] - by kurukaalapoovan - 08-15-2005, 04:20 PM
[No subject] - by AJeevan - 08-15-2005, 06:25 PM
[No subject] - by kirubans - 08-15-2005, 07:42 PM
[No subject] - by sinnakuddy - 08-15-2005, 09:21 PM
[No subject] - by Danklas - 08-17-2005, 02:21 PM
[No subject] - by narathar - 08-17-2005, 02:46 PM
[No subject] - by hari - 08-17-2005, 03:18 PM
[No subject] - by vasisutha - 08-17-2005, 03:26 PM
[No subject] - by cannon - 08-17-2005, 09:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)