Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்ரநெற் காதல்கள்
#4
[size=18]கதை 3 : ஈ-மெயிலில் வளர்ந்த உறவு

அப்போதுதான் நான் காலேஜில் சேர்ந்திருந்தேன். அங்கே நான் புதிதாக யாரைப் பார்த்தாலும் "உன் ஈ-மெயில் ஐ.டி. என்ன?" என்ற கேள்வியைக் கேட்டார்கள். எனக்கு இன்டர்நெட் என்றாலே என்னவென்று தெரியாது.

என் தோழி ஒருத்தி சரியான இன்டர்நெட் பைத்தியம். அவள் பெயர் லிசா என்று வைத்துக் கொள்வோம். அவள் உதவியுடன் எனக்கென்று ஒரு ஈ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொண்டேன். ஆனால் பல நாள் ஆகியும் எனக்கு யாரும் ஈ-மெயில் அனுப்புகிற மாதிரி இல்லை.

லாகின் செய்தால் ஈ-மெயிலுக்கே நேரம் சரியாக இருக்கிறது என்று லிசா ஸ்டைலாக அலுத்துக் கொள்ளும்போதெல்லாம் எனக்குப் பொறாமையாக இருக்கும். ஒரு நாள் என் பரிதாப நிலையைப் புரிந்துகொண்டு அவள் ஒரு டேட்டிங் சைட்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

டேட்டிங் சைட் என்றால் அதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தந்து நண்பர்கள், காதலர்கள் வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். லிசாவின் வற்புறுத்தல் தாங்காமல் 20 டாலர் கட்டி அந்த சைட்டில் உறுப்பினர் ஆனேன்.

பெரும்பாலான ஆண்கள் தங்களைப் பற்றி வேடிக்கையாக எழுதியிருந்தார்கள். அத்தனை பேரில் டோனி வில்சன் என்பவனின் விவரங்கள் என்னைக் கவர்ந்தன.தன்னைப் பற்றி அவன் அடக்கமாக, தமாஷாக, தெளிவாக எழுதியிருந்த விதம் என்னை யோசிக்க வைத்தது. சரி, இவன் சரியான ஆம்பிளை, இவனுக்கு ஈ-மெயில் அனுப்பிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

டோனி, அமெரிக்காவின் தென்கோடியில் இருந்தான். நான் வடக்கில் இருந்தேன். இவ்வளவு பாதுகாப்பான தூரத்தில் இருந்ததால் நான் அவனோடு ரொம்ப இன்வால்வ் 'ஆகிவிட மாட்டேன் என்று நினைத்தேன். அவன் ஒரு சைக்கோவாக இருந்தால் கூட அவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு என்னை ஒன்றும் செய்ய முடியாது.

ஹாய் சொல்லி ஒரு ஈ-மெயில் அனுப்பினேன். டோனியும் அந்த சமயத்தில் இன்டர்நெட்டில் இருந்திருக்கிறான் போலிருக்கிறது. நான் அனுப்பிய சில நிமிடங்களில் அவனிடமிருந்து பதில் வந்தது. டோனி புத்தகம் படிப்பானாம். சீரியஸ் படங்கள் நிறைய பார்ப்பானாம். இப்படி தன்னைப் பற்றி விலாவாரியாக எழுதினான் டோனி. நான் என் ரசனைகள் பற்றி எழுதினேன். இவ்வளவு பரிவான ஆளை நான் பார்த்ததில்லை.

சில மாதங்களுக்குள் நாங்கள் ரொம்ப அன்னியோன்யமாகிவிட்டோம். அவன் என்னை ஒரு நல்ல நண்பியாகக் கருதி தன் பிரச்னைகளைப் பற்றி சொன்னான். எனக்கு அவன் மேல் காதல் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. நீ யாரையாவது காதலிக்கிறாயா?' என்று யாராவது கேட்டால் நான் இல்லை என்று சொல்வேன். ஆனால் எனக்கு அவன் ஞாபகம்தான் வரும்.

நாங்கள் பழகி சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கும். ஒரு நாள் ஈ-மெயிலில் "நாம் நேரில் சந்திப்போமா?" என்று கேட்டான் டோனி எனக்கு லேசாக அதிர்ச்சியாக இருந்தது. வேண்டாம் என்று சொன்னால் தப்பாக நினைத்துக்கொண்டுவிடுவானோ என்று பயமாக இருந்தது. "வாட் டு யூ மீன்?" என்று எதிர்க் கேள்வி கேட்டேன். "ஏன் பயப்படுகிறாய்?" நேரில் சந்திப்போமா என்றால் சாட் செய்வோமா என்று அர்த்தம்! என்றான் டோனி. எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எனக்கு சாட் செய்யத் தெரியாது. எங்கே போகவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்றெல்லாம் டோனிதான் சொல்லிக் கொடுத்தான். சாட் அற்புதமாக இருந்தது! எனக்கு ஃபோனில் பேசுவதை விட சாட் பிடித்தது. நானும் டோனியும் அன்றைக்கு விடிய விடியப் பேசினோம்! என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள் அது.

ஒரு நாள் சாட் செய்துகொண்டிருக்கும்போது டோனி, "உன்னிடம் ஒரு விஷயம் சொல்லவேண்டும்" என்றான். "என்ன?" என்றேன், ஒரு வித எதிர்பார்ப்புடன். "நான் ஒரு பெண்ணுடன் பழக ஆரம்பித்திருக்கிறேன்" என்றான். எனக்கு அதைக் கேட்டு ஏமாற்றமாக இருந்தது. அப்போதுதான் நான் அவனைக் காதலிக்கிறேன் என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

ஆனால் அவன் சொன்னதை நான் முழுசாக சொல்லவில்லை. அவனுக்கும் அவன் பழகும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் சுவாரஸ்யமாக எதுவும் உருவாகவில்லை என்றான் டோனி. "கவலைப்படாதே டோனி, உனக்கென்று ஒருத்தி எங்காவது காத்துக் கொண்டிருப்பாள். Just keep your eyes open என்று ஆறுதல் சொன்னேன். அத்தனை சந்தோஷமாக நான் யாருக்கும் ஆறுதல் சொன்னதில்லை.

ஆனால் நான் முடிவு செய்தேன். இனிமேலும் தாமதிக்காமல் அவனிடம் நேரடியாகப் பேசிவிடவேண்டும். அடுத்த சாட்டில் அவனோடு கொஞ்சம் சீரியஸாகப் பேசினேன். அவனுக்கு இன்டர்நெட் காதலில் நம்பிக்கை இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் எல்லாம் கேட்டேன். அவன் புரிந்துகொண்டிருப்பான்.

சில வாரங்கள் கழித்து அவனே என்னை நேரில் பார்க்கவேண்டும் என்று சொன்னான். அப்போது எங்களுக்கு அது வித்தியாசமாகப் படவில்லை. நாங்கள் அவ்வளவு நெருக்கமாகியிருந்தோம். டோனி பல நூறு மைல்கள் கடந்து என்னைப் பார்க்க வருகிறான் என்பதை நினைக்கும்போதே எனக்கு சிலிர்ப்பாக இருந்தது.

எங்கள் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலில் தங்கினான் டோனி. ஹோட்டலுடன் இணைந்திருந்த திறந்தவெளி ரெஸ்ட்டாரன்ட்டில் சந்திப்பதாகப் பேசி வைத்துக்கொண்டோம். அது கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள்.அவன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே நான் அங்கே போய்விட்டேன். அவனுக்கு என்னைப் பார்த்தால் பிடிக்காமல் போய்விடுமா, எனக்கு அவன் முகம் பிடிக்குமாஇ அவன் நேரில் வேறு மாதிரிப் பழகுவானா என்றெல்லாம் யோசித்தபடி அந்த அரை மணி நேரம் நான் தவித்த தவிப்பு எனக்குத்தான் தெரியும்!நேரம் நெருங்கியபோது என் டேபிளை நோக்கி ஒரு இளைஞன் தயக்கமாக நடந்து வந்தான். அது டோனிதான். அவனைப் பார்த்ததுமே அசந்து போனேன். சூப்பர் மாடல் மாதிரி இருந்தான் அவன்! அடுத்த கேள்விஇ அவனுக்கு என்னைப் பிடிக்குமா என்பதுதான்.

டோனியின் குரல் கூட ஒரு பாடகனின் குரல் போல கம்பீரமாகவும், மிருதுவாகவும் இருந்தது. இவனுக்கு ஜோடி ஆக இப்போது ஆசைப்பட்டால் அது பேராசையாகத்தான் இருக்கும். அவனோ என்னைப் பற்றி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தது போல் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தான். காதல் என்பது அவன் மனதில் கொஞ்சம் கூட இல்லையோ என்னவோ என்று எனக்குத் தோன்றியது.

பேசிக்கொண்டிருந்தபோது, "உன் குடும்பத்தினரை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்க மாட்டாயா?" என்றான் டோனி. நான் சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். சிறிது நேரம் அங்கே பேசிவிட்டு என் வீட்டுக்குப் போனேன்.

என் பெற்றோர் முதலில் அவனை விநோதமாகப் பார்த்தாலும் பிறகு அவர்களுக்கு அவனைப் பிடித்துப் போனது. அங்கிருந்து அவன் ஹோட்டல் ரூமுக்குப் போனான். மறு நாள் சந்திப்போம் என்று முடிவு செய்தோம். மறு நாள் மாலைதான் அவன் திரும்பிப் போவதாக இருந்தது.

அன்று மாலை வழக்கம் போல் ஈ-மெயில் பார்த்தபோது அவனிடமிருந்து ஒரு வாழ்த்து அட்டை வந்திருந்தது. கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன டோனிஇ கூடுதலாக ஒரு வரி சேர்த்திருந்தான் "Will you marry me?" எனக்குக் கத்தவேண்டும் போல் இருந்தது! உடனே பதிலுக்கு நான் ஒரு அட்டை அனுப்பினேன்

அடுத்து ஒரு மணி நேரம் நாங்கள் ஃபோனில் உருகி உருகிப் பேசிக்கொண்டிருந்தோம்! என் பெற்றோரிடமும் எங்கள் விஷயத்தை சொன்னேன். கடைசியில் என் காலேஜ் படிப்பு முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும் என்று முடிவானது.

இப்போதெல்லாம் என் பெற்றோர் டெலிஃபோன் பில் பற்றிக் கவலைப்படுவதில்லை. நானும் டோனியும், ஈமெயில், சாட், ஃபோன் என்று எது கிடைத்தாலும் விடுவதில்லை. நான் மட்டும் இன்டர்நெட்டில் நுழைந்திருக்கவில்லை என்றால் என் வாழ்க்கை எப்படிப் போயிருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இன்டர்நெட் என் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது!



நன்றி : வெப்உலகம்

................
Reply


Messages In This Thread
[No subject] - by arun - 10-20-2003, 09:15 PM
[No subject] - by ganesh - 10-21-2003, 06:09 PM
[No subject] - by arun - 10-21-2003, 09:46 PM
[No subject] - by Paranee - 10-22-2003, 05:23 AM
[No subject] - by shanthy - 10-22-2003, 08:08 AM
[No subject] - by veera - 10-22-2003, 09:19 AM
[No subject] - by ganesh - 10-22-2003, 05:48 PM
[No subject] - by nalayiny - 10-22-2003, 06:21 PM
[No subject] - by arun - 10-22-2003, 07:30 PM
[No subject] - by Mathivathanan - 10-22-2003, 07:44 PM
[No subject] - by arun - 10-22-2003, 07:50 PM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 08:19 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 11:54 AM
[No subject] - by nalayiny - 10-23-2003, 03:37 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 03:48 PM
[No subject] - by arun - 10-23-2003, 07:29 PM
[No subject] - by arun - 10-23-2003, 08:26 PM
[No subject] - by arun - 10-23-2003, 08:27 PM
[No subject] - by Kanani - 10-24-2003, 08:30 AM
[No subject] - by arun - 10-26-2003, 07:55 PM
[No subject] - by arun - 10-26-2003, 08:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)