10-21-2003, 03:29 PM
இங்கு பெற்றோர் தான் நன்றாக ஏமாந்துள்ளார்கள். தமது குழந்தையின் மனசறிந்து அவர்களால் நடக்க முடியவில்லையே. நிச்சயதாற்தம் செய்துகொண்ட ஆண் விட்டு விலகுவது நல்லது. சேர்ந்து வாழ்வது என்பது இனி பல சங்கடங்கைள தரலாம். பெண்ணை அவளது காதலனோடு சேற்து வைப்பது நன்மை. இதை அந்த பெற்றோரும் நிச்சயதாற்தம் செய்து கொண்ட அந்த இளைஞனும் சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் அந்தந்த மனநிலையில் நின்று சிந்தித்தால் இத்தகைய பிரச்சனைகளிற்கு தீர்வு கை கிட்டும். கடைசித்தருணத்தில் எடுத்த முடிவை நிச்சயதார்த்தத்திற்கு முதலே அந்த பெண் எடுத்திருந்தால் இத்தகையதொரு சிக்கல் தோன்றியிராது. அறுதி முடிவெடுத்தல் என்பது சற்று காலதாமதமாகி உள்ளது அவ்வளவு தான். இத்தகைய சம்பவங்கள் இனிமேல் காலத்தின் மற்றய அனைத்து சமூக அங்கத்தவர்களிற்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பது உண்மை.
நட்புடன்
பாரதி.
நட்புடன்
பாரதி.

