08-13-2005, 05:54 AM
ஏ-9 சாலைவழியான போக்குவரத்து சிறிலங்கா படையினரால் தடை
ஏ-9 சாலைவழியான மக்கள் போக்குவரத்தினை சிறிலங்கா படையினர் இன்று தடுத்து நிறுத்தியுள்ளனர். இரவு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வைத்து அதன் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி சந்திரிகா அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
அதனையடுத்து யாழ். – வவுனியா நெடுஞ்சாலைவழியான போக்குவரத்தை படையினர் தடைசெய்துள்ளனர். இதற்கு போதிய காரணம் எதனையும் அவர்கள் தெரிவிக்காது மேலிடத்து உத்தரவு என்பதை மட்டும் கூறிவருகின்றனர். முகமாலை சோதனைச் சாவடி ஊடாக இதுவரை போக்குவரத்து எதுவும் இடம்பெறவில்லை. ஓமந்தை சாவடி வழியாக வவுனியாவுக்குள் நுழைவதற்கு மட்டும் படைத்தரப்பு அனுமதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி இணைப்பு வட்டன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>