08-13-2005, 02:32 AM
<b>லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பான தடயம் கண்டுபிடிப்பு.</b>
உயர் வலயப் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காமர் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீட்டின் மேல் மாடியில் இருந்தே சினைப்பர் தாக்குதல் நாடாத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்கு இடமான வீட்டில் மேல்மாடிக் கூரையில் சினைப்பர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் தோட்டாவின் வெற்றுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கொலையாளிகள் மேல்மாடியில் இருந்தபடியே நீச்சல் தடாகத்தில் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழையும் போது சுடப்பட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.
லக்மன் கதிர்காமர் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து சந்திரிகா குமாரதுங்கா, பிரதமந்திரி ராஜபக் மற்றும் அமைச்சர்கள் பலர் முக்கிய தலைவர்கள் பார்வையிட்டதுடன் தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு நகர் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு கொழும்பு உயர் பாதுகாப்பு வலையங்களில் பாதுகாப்புப் படையினர் இராணுவ வாகனங்களில் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
கொழும்பு முழுவதும் படையினரால் தேடுதல் நடவடிக்கை முடிக்கி விடுப்பட்டுள்ளது கொழும்புக்குள் நுழையும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு இராணுவச் சோதனைச் தடைகள் போடப்பட்டு கொலையாளிகள் தேடப்படுகின்றனர்.
பரா வெளிச்ச குண்டுகள் வான்நோக்கி ஏவப்பட்டு உலங்கு வானூர்திகள் மூலம் தேடுதல் நடவடிக்கை நாடாத்தப்படுகிறது. அத்தோடு கொடுப்பில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தகநிலையங்களுக்குள் படையினர் சென்று தேடுதல் நடவடிக்கையை முடுக்கி விட்டதோடு தமிழ் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழுப்பு மாவட்டம் தற்பொழுது அவரசரகால நிலை பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமுலில் இருப்பது போன்று காட்சியளிக்கிறது. வீதிகளில் வாகன நடமாட்டமோ மக்கள் நடமாட்டமோ இல்லாது குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாது காட்சியளிக்கிறது.