08-12-2005, 08:34 PM
சினைப்பர் தாக்குதலில் லக்ஸ்மன் கதிர்காமர் பலி
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் இன்று இரவு 11.30 மணியளிவில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 12.15 மணியளவில் உயிரிழந்துள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
கொழும்பு 07, விஜயராம மாவத்தையில் வைத்து து}ரத்திலிருந்து குறிபார்த்துச் சுடும் சினைப்பர் ரக சுடுகலன் மூலம் லக்ஸ்மன் கதிர்காமர் மீது தாக்குதல் நடாத்தப்பட்பட்டுள்ளது. இதனால் தலையிலும் கழுத்திலும் குண்டுகள் துளைக்கப்பட்டு படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் லக்ஸ்மன் கதிர்காமர் மருத்துவமனை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு அவசர சத்திர சிகிச்சைப்பிரிவில் பல வைத்திய நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் 12.15 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சினைப்பர் தாக்குதலை நடாத்தியவரைத் தேடி சிறீலங்காவின் முப்படைகள் மற்றும் காவல்துறையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதில் உலங்கு வானு}ர்திகளும் பயன்படுத்தப்படுவதுடன் வெளிச்சத்தைப் பெறுவதற்காக வெளிச்சக் குண்டுகளும் வானில் ஏவப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
சங்கதி

<b>
?
- . - .</b>
?
- . - .</b>