08-12-2005, 04:16 PM
Nitharsan Wrote:காதலே வாழ்வென்று-பல
காளைகள் கருதுகின்றார்கள்
கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!
கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் நிதர்சன்.
காதலே வாழ்க்கை என்று காளைகள் மட்டுமல்ல பல கன்னியரும் தான் நினைக்கின்றார்கள். காதலே வாழ்க்கை என்று இருக்கும் போது வாழ்வின் மற்றய இலட்சியங்கள் அடிபட்டு போகும் வாய்ப்பு உண்டு. அதனால் காதலே வாழ்க்கையாக இல்லாமல் வாழ்கை காதலுடன் இருக்க வேண்டும். அந்த காதல் தரும் தன்னம்பிக்கையுடன் உத்வேகத்துடன் நம்முடைய மற்றய இலட்சியங்களை இலகுவாக அடைய முடியும். வாழ்க்கையில் காதல் என்ற வசந்தகாலம் நிச்சயம் வரவேண்டும் அப்படி வரவில்லை என்றால் துரதிஸ்டன் தான், அது தவிர காதலை ஆண்கள் தான் மதிக்கிறார்கள் பெண்கள் கனவாக நினைக்கிறார்கள் என்று குற்றம் சாட்ட முடியாது. காதலை உயிரிலும் உயர்வாக நினைப்பவர்களும் பொழுதுபோக்காக நினைப்பவர்களும் இருபக்கமும் நினைக்கிறார்கள், அப்படி இருக்கும் போது ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. ஒரு ஆண் காதலால் ரணப்பட்டவுடன் அதனை வெளி உலகிற்கு வெளிக்காட்டுவதால் ஆண்கள் தான் காதலால் காயப்படுவது போல் ஒரு தோற்றம் உருவாகின்றது, ரணப்பட்ட பெண்களோ அதனை மனதில் வைத்து அவர்களுக்குள்ளேயே வேதனைப்படுவதால் அவர்களுடைய வேதனைகள் வெளியில் தெரிவதில்லை. அவ்வளவு தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

