08-12-2005, 03:01 PM
Quote:சரி யாழினி ஏதோ தெரியாமல் செய்திட்டார் இனி விடுவம் நாரதர் தவறு விடுவது எல்லாருக்கும் இயல்புதானே; ஆனால் அதை ஒத்துகொள்ளாமல் அம்டம்பிடிப்பதுதான் கூடாது யாழை எங்கள் தளமாக நினைத்து நல்லபடியாக நடத்தி செல்வோம் நாம் இரண்டுபட்டா வெளியிலை சில கூத்தாடியள் நிக்கினம் கொண்டாட யாரெண்டு சொல்ல தேவையில்லை.
எனது தரப்பில் இருந்து நான் ஏன் அந்த கருத்தினை நீக்கினேன் என்றதற்குரிய விளக்கத்தை தேவையான அளவிற்கு விளக்கி சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே இப்படிப்பட்ட தனிப்பட்டவர்களது அடையாளங்களை பயன்படுத்தியதால் சக உறவுகள் கண்டனம் தெரிவித்த சம்பவங்கள் நிறையவே உண்டு பல இடங்களில் நடந்திருக்கிறது. ஒரு வேளை நீங்கள் கவனிக்கவில்லையோ தெரியாது. அப்படிப்பட்ட தனிப்பட்ட மோதல்களை தவிர்க்கவே தனிப்பட்ட களஉறவுகள் பெயரை பாவிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. அதனால் தான் அந்த கருத்தும் நீக்கப்பட்டது. களஉறப்பினர்கள் யாவரும் ஒற்றுமையாக தான் கருத்தாடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா.? இல்லையே எங்கையோ ஏற்பட்ட மோதல்களை எல்லா இடங்களிலும் கொண்டு சென்று தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை களஉறுப்பினர்கள் மேற்கொள்ளாமல் விட்டு நான் பெயர்களை பாவிக்காதீர்கள் என்று சொல்லியோ அல்லது நீக்கியோ இருந்தால் களஉறுப்பினர்கள் எங்கள் மேல் குறைகூறலாம். முன்னால் நடந்ததை வைச்சே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் இப்ப கள உறுப்பினர்கள் தீர்வு கண்டிருப்பார்கள் என்று நினைக்கிறன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Yalini

