Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் அறிவிப்பாளர்கள் இருவர் கொழும்பில் சுட்டுக்கொலை
#1
<b>தமிழ் அறிவிப்பாளர்கள் இருவர் கொழும்பில் சுட்டுக்கொலை</b>
பிரபல பெண் அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா மற்றும் அவரது கணவர் சின்னத்துரை செல்வராஜா ஆகிய இருவரும் கொழும்பு வெள்ளவததையில் வைத்து இனந் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இவர்களுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு மற்றும் பயண முகவர் நிலையத்திற்கு சென்றிருந்த இனந் தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தைச் செய்துள்ளார்கள்.

கணவனும் மனைவியும் வழமை போல் தமது அலுவலகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரேலங்கி செல்வராஜா உள்நாட்டு திரைப்படமான தெய்வம் தந்த வீடு படத்தில் சிறுமியாக இருக்கும் போதே நாட்டியப் பெண்ணாக நடித்தவர். சிறிலங்கா அரச வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றி வந்தார்.

1990 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப் பகுதியில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் மணிக்குரல் சேவையிலும் பணியாற்றியுள்ளார். இவரது கணவரான செல்வராஜா முன்னர் புளொட் அமைப்பில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.




நன்றி புதினம்
.
Reply


Messages In This Thread
தமிழ் அறிவிப்பாளர்கள் இருவர் கொழும்பில் சுட்டுக்கொலை - by மட்டி - 08-12-2005, 10:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)