08-11-2005, 09:50 PM
muniyama Wrote:.
ஒருகாலம் சினிமாக்காரர்களை நேசித்த அளவுக்கு அறிவிப்பாளர்கள் மீதும் நேசிப்பைச் செலுத்தத் தொடங்கி சினிமாபோலவே வாழ்வையும் மாற்றி எதிர்கால சந்ததியின் எதிர்காலத்தையே எரியுூட்டும் அளவுக்கு ஏன் மனநோயாளர்களர்கள் மலிந்தார்கள் ?
பெற்ற பிள்ளையே விலக்கிவிட்டுப் பிரியமான அறிவிப்பாளர் பின்னால் செல்லத் துணிந்துவிட்ட தந்தையர்கள் தாய்மார்கள் எப்படி உருவானார்கள் ? குரல்களை ரசிப்பது அல்லது நட்புடனான நேசித்தலை விடுத்து ஆண் பெண் உறவுகளைக் கூட ஐரோப்பிய கலாசாரம் என ஐரோப்பியர்களை எங்களுக்கு சாட்டாக்குவது ஏன் ?
உரில் நாங்கள் கண்ட காதல் என்பது பாடசாலைகளில் தொழில் செய்யும் இடங்களில் கோவில் திருவிழாக்களில் நம்மத்தியில் நடைபெறும் கொண்டாட்டங்களிலே துளிர்த்தது. இதில் வெற்றியை விட தோல்விகளும் தற்கொலைகளும் நிகழ்ந்திருப்பினும் காதல் என்ற வார்த்தைக்கும் அப்பால் விரிந்து கிடந்த வாழ்வை நேசித்து மீண்டோரை எங்கள் ஊர்களுக்குள் இன்றும் காணலாம். <b>இந்த நிலைமாறி இன்று இளங்காதலைவிட கிழங்களின் காதல் புலமெங்கும் பெருகிப்போய்க் கிடக்கிறது</b>
<b>போதைவஸ்த்துக்கு அடிமையானோர் போல புலம்பெயர் தமிழ் அறிவிப்பாளர்களுக்கு அடிமையாகி குடும்பங்களைத் தொலைத்து இ குழந்தைகளைத் தொலைத்து இ தங்கள் உழைப்பையே இத்தகைய கொள்ளையர்களுக்குக் கொட்டிக் கொடுத்து இ தனியே அழைத்துக் காதல் செய்து களவு பிடிபட்டு வாழ்வை நரகமாக்கி எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்வியாகியிருக்கிறது ?</b>
வானலையில் விவாகரத்தை எதிர்த்துக் கொண்டு வருகின்ற நேயர்களை 2வது 3வது 4வதாகக் கள்ளக்காதல் செய்து தற்கொலைகள் வரையும் முற்றிப்போயிருக்கிறது இக்கால வானாலிக்காதல். மணம்செய்து கொள்ள ஒருத்தியும் இ காதலிக்க ஒருத்தியும் இ தேவைகள் தீர்த்துக்கொள்ள ஒருத்தியும் என பல அறிவிப்பாளர்களுக்குப் பலியாகிய பல பெண்களின் துயர் தோய்ந்த பக்கங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. <b>ஆயினும் பலியாகும் பெண்களும் ஆண்களும் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.</b>
புலத்து தமிழரைப் பற்றி இப்படி ஏதாவது கிடைத்தால் தினக்குரலுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல இருக்கும்.
வானொலி அறிவிப்பாளரின் வலையில் பெண்கள்
விழுகிறார்களாம்...ஏன் அவர்களுக்கு புத்தி எங்கமாடு மேய்க
போய்விடுகிறதா? :evil:
புலம் பெயர் தமிழர் எல்லாம் வானொலி அடிமைகள் போலவும் அதில் பலர் குடும்பம் குட்டிகளை விட்டுவிட்டு வானொலி அறிவிப்பாளருடன் சென்று குடும்பம் நடத்துவது போலவும் எழுதியுள்ளது.
வானொலியா அப்படி ஒன்று இருக்கா என கேட்கும் தமிழர்களும் இருக்கிறார்கள்.
புலம் பெயர்ந்த தமிழரில் 100% க்கு 20% வீதமானவர்கள் தான் வானொலி நிகழ்சிகளை கேட்பவர்கள்
என நினைக்கிறேன்.
எல்லா வானொலிகளிலுமே பாடல் கேட்கவோ போட்டி நிகழ்சியில் பங்குபெறவோ குறிப்பிட்ட சிலரே வருகின்றனர்.
அநேகமானவர்கள் செய்திகளோடு சரி.
எனவே அந்த ஒரு சிலரை வைத்துக் கொண்டு
எப்படி எல்லா புலம் பெயர் தமிழ் மக்கள் குடும்பங்களையும்
குற்றம் சாட்டலாம். :?:
ஒரு வானொலியில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரை என நினைக்கிறேன். ஆனால் எழுதப்பட்ட விதம் புலத்தில் உள்ள எல்லா வானொலிகளையும் அறிவிப்பாளர்களையும் எல்லா தமிழ் மக்களையும் தாக்கி நிற்கிறது.
மொத்தத்தில் கட்டுரை எனக்கு மிகைப்படுத்தப் பட்டதாகவே
(நடந்த சம்பவங்கள் உண்மையாக இருந்தாலும்)தோன்றுகிறது. :roll:

