Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலத்து புரட்டுக்கள்
#2
அண்மையிலை தினக்குரலிலை ஒரு கட்டுரை ஒண்டு படிக்க கிடைத்தது அதை இங்கே தருகிறேன் எழுதியிருந்தவர் சாந்தி ரமேஸ்
உலகின் வளர்ச்சிப்போக்கையும் உலகின் முக்கிய தீர்மானங்களையும் முடிவெடுக்கும் உரிமையையும் ஆழுமையையும் பெற்றிருக்கும் சாதனங்களாக இணையம் இ தொலைக்காட்சி இ வானொலிகளின் பங்கு கணிசமான அளவில் ஆழுமை செலுத்துவதை யாரும் இல்லையென்று மறுத்துவிட முடியாதளவு இவை கணிசமான அளவு பங்கினைச் செலுத்துகின்றன.

இவ்வுூடகங்களின் வருகையும் இவற்றின் பயன்பாடுகளும் நம்மவர்கள் மத்தியில் எத்தகைய பங்களிப்பினைச் செய்கின்றன என்பதையும் இ குறிப்பாக இளையோர் இ பெண்கள் மத்தியில் இந்த சாதனங்களின் பயன்பாடுபற்றியும் சொல்லியாயிற்று. இன்று பொதுவாகச் சொல்லப்பட்ட விடயங்களையும் தாண்டி ஆண் இ பெண் உறவுகளில் இந்த சாதனங்கள் செலுத்தும் ஆழுமையும் இ இதனால் அழிந்து கொண்டிருக்கும் எமது குடும்ப உறவுகள் இ குழந்தைகள் எதிர்காலம் பற்றிய அறிதலுமாகிறது.

உலகின் நிகழும் சகலத்தையும் முன்னேற்றம் முதலாக அரசியல் உள்ளிட்ட பல்துறைசார்ந்த முடிபுகள் இ தலைமைகளையே தேர்ந்தெடுக்கும் வல்லமையைக்கூடப் பெற்றிருக்கின்ற இந்த வானொலி இ தொலைக்காட்சி இ இணையங்களின் பயன்பாடானது நம்மவர் மத்தியில் குடும்ப உறவுகளில் ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்களானது நிமிடத்துக்கு நிமிடம் பரவிக்கொண்டிருக்கும் கணணி வைரஸ்களை விட மோசமாகிக் கொண்டு வருவதை யார்தான் கவனிக்கிறோமோ இல்லையோ இத்தகைய கேடுகளால் மனநோயாளர்களையும் இ வதையுறும் இளையோரையும் நிறைவே காணக்கிடைக்கின்றது.

கடந்த எட்டு வருடங்களுக்குள் ஐரோப்பியப் பரப்பில் துளி;ர்விடத் தொடங்கிய வானொலி இ தொலைக்காட்சிகளின் வருகையில் 1997 காலப்பகுதியில் ஆரவாரத்துடனும் இ ஆவலுடனும் இந்த ஊடகங்களை வரவேற்று இந்த ஊடகங்கள் ஊடாக நிறைந்த தேடலை இ அறிதலை இ அறிவிப்பு இ நிகழ்ச்சித்தயாரிப்பு வரையும் என்னை நானே செதுக்கிக் கொள்ள வழிதிறந்து விட்டிருந்த வானொலிகளுக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளும் இதேவேளை இந்த ஊடகங்களின் வருகையில் சிதைந்து போயுள்ள எம்மவர் குடும்பச் சிதைவுகளுக்கான காரணியாக நானும் இருந்து விட்டேனோ என்ற உறுத்தல் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. தவறுகளைக் கேட்கத் திராணியற்று மௌனியாகி அறிவிப்பை இ நிகழ்ச்சித்தயாரிப்பைச் செய்ததில் பயனென்ன கண்டேன் என்ற கேள்வி பலமுறை பல சம்பவங்கள் கேள்வியுற்ற போது எழுந்து ஓய்ந்திருக்கின்றன.

கவிதைகள் இ கதைகள் இ கட்டுரைகள் என எனது உலகைக் குறுக்கியிருந்திருக்கலாமோ எனக்கூட பலசமயம் எண்ணிய கணங்களும் உண்டு. இடிபாடு இ கடிபாடு என்ற கனத்த சோதனைகளும் இ குழிபறிப்புகள் இ பழிவாங்கல்கள் என ஊடக உலகு தந்த காயங்களை விட நிறைந்த அனுவத்தையே தந்துவிட்டதெனச் சொல்லிவிடும் அளவிற்கு இந்த ஊடகங்களானது எனக்குள்ளும் தனது ஆழுமையைச் செலுத்தியிருந்திருக்கிறது என்பதை இல்லையென்று பொய்யுரைக்காமல் உண்மையென்று மெய்யுரைத்து இந்தச் சாதனங்களின் சாபங்கள் பற்றிச் சிலபக்கங்களைச் சொல்லி விடுகிறேன்.

இலங்கை வானொலியில் ஒரு பாடல் கேட்பதற்கே பலமாதம் தவமியற்றி அஞ்சலட்டையை அனுப்பிவிட்டுக் காத்திருந்ததும் இ இசையும் கதையும் கேட்பதற்கு இந்திய இராணுவ காலங்களில் உந்துருளியின் சில்லின் உயிர் எடுத்ததும் இ எங்களுக்கு எட்டாத தொலைவாய் இருந்த வானொலியானது தற்போது எல்லோருக்கும் பொதுவானதாகிய பின்னர் எழுந்த பிரச்சனைகளைப் பார்க்கின்ற போது எட்டாப்பழமாக இந்த ஊடகங்கள் இருந்திருக்கலாமோ எனவே எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு அறிவிப்பின் புனிதம் ஆண்கள் பெண்களை அசத்துதல் இ பெண்கள் ஆண்களை அசத்துதல் என்ற நிலைக்குக் கீழிறங்கியிருக்கிறது.

ஆர்வமேலீட்டால் தம்மைத்தாமே தீட்டிக்கொண்ட அறிவிப்பாளர்கள் இ தயாரிப்பாளர்களே இன்றைய வானொலிகள் முதல் தொலைக்காட்சி வரையிலான வல்லமையைப் பெற்றிருப்பதுஇ திறமைகளுக்கு என்றும் வேலிகள் இல்லையென்பதை மெய்ப்பித்தாலும் வேதனைகளையே ஐரோப்பியப்பரப்பில் தந்துவிட்டிருக்கிறது.

ஒருகாலம் சினிமாக்காரர்களை நேசித்த அளவுக்கு அறிவிப்பாளர்கள் மீதும் நேசிப்பைச் செலுத்தத் தொடங்கி சினிமாபோலவே வாழ்வையும் மாற்றி எதிர்கால சந்ததியின் எதிர்காலத்தையே எரியுூட்டும் அளவுக்கு ஏன் மனநோயாளர்களர்கள் மலிந்தார்கள் ?

பெற்ற பிள்ளையே விலக்கிவிட்டுப் பிரியமான அறிவிப்பாளர் பின்னால் செல்லத் துணிந்துவிட்ட தந்தையர்கள் இ தாய்மார்கள் எப்படி உருவானார்கள் ? குரல்களை ரசிப்பது அல்லது நட்புடனான நேசித்தலை விடுத்து ஆண் பெண் உறவுகளைக் கூட ஐரோப்பிய கலாசாரம் என ஐரோப்பியர்களை எங்களுக்கு சாட்டாக்குவது ஏன் ?

உரில் நாங்கள் கண்ட காதல் என்பது பாடசாலைகளில் இ தொழில் செய்யும் இடங்களில் இ கோவில் திருவிழாக்களில் இ நம்மத்தியில் நடைபெறும் கொண்டாட்டங்களிலே துளிர்த்தது. இதில் வெற்றியை விட தோல்விகளும் தற்கொலைகளும் நிகழ்ந்திருப்பினும் காதல் என்ற வார்த்தைக்கும் அப்பால் விரிந்து கிடந்த வாழ்வை நேசித்து மீண்டோரை எங்கள் ஊர்களுக்குள் இன்றும் காணலாம். இந்த நிலைமாறி இன்று இளங்காதலைவிட கிழங்களின் காதல் புலமெங்கும் பெருகிப்போய்க் கிடக்கிறது.

போதைவஸ்த்துக்கு அடிமையானோர் போல புலம்பெயர் தமிழ் அறிவிப்பாளர்களுக்கு அடிமையாகி குடும்பங்களைத் தொலைத்து இ குழந்தைகளைத் தொலைத்து இ தங்கள் உழைப்பையே இத்தகைய கொள்ளையர்களுக்குக் கொட்டிக் கொடுத்து இ தனியே அழைத்துக் காதல் செய்து களவு பிடிபட்டு வாழ்வை நரகமாக்கி எத்தனை குடும்பங்களின் எதிர்காலம் கேள்வியாகியிருக்கிறது ?

வானலையில் விவாகரத்தை எதிர்த்துக் கொண்டு வருகின்ற நேயர்களை 2வது 3வது 4வதாகக் கள்ளக்காதல் செய்து தற்கொலைகள் வரையும் முற்றிப்போயிருக்கிறது இக்கால வானாலிக்காதல். மணம்செய்து கொள்ள ஒருத்தியும் இ காதலிக்க ஒருத்தியும் இ தேவைகள் தீர்த்துக்கொள்ள ஒருத்தியும் என பல அறிவிப்பாளர்களுக்குப் பலியாகிய பல பெண்களின் துயர் தோய்ந்த பக்கங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. ஆயினும் பலியாகும் பெண்களும் ஆண்களும் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

கணவனுக்குத் தெரியாமல் மனைவியும் இ மனைவிக்குத் தெரியாமல் கணவனும் தங்கள் உழைப்பையே தாங்கள் விரும்பும் அறிவிப்பாளர்கள் இ பணிப்பாளர்களுக்கு தங்கமாகஇ வட்டியாக இ செய்மதிக்கட்டணங்களாகக் கொடுத்து விட்டு வங்கிக் கடன்களில் சிக்குப்பட்டுத் தவிக்கும் எத்தனையோ நேயர்களின் சோகங்கள் இந்த ஒரு பக்கத்தில் எழுதிவிட முடியாத எத்தனையோ துயர் நிறைந்த கதைகள் இந்த நாடுகளில் நிறையவே.

அறிவிப்பாளர்கள் என்ற திரைக்குள் நின்று பல குடும்பங்களின் வாழ்வைப் பலியெடுக்கும் மனநோயாளர்களை நமது வனொலிகளும் இ தொலைக்காட்சிகளும் இன்னும் ஏணியில் வைத்துப் புூசிப்பது ஏனென்றே புரியவில்லை ? நல்ல குரல்வளமும் இ திறனும் இருந்துவிட்டால் அவர்கள் எப்படியான மோசமானவர்களாக இருந்தாலும் புூசித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது ?

புலம் பெயர் நாடுகளில் ஊடகங்களின் வருகையே எங்கள் எதிர்காலச் சிறார்களின் நலனில் அக்கறை என்று சொல்லிக் கொண்டு அந்தச் சிறார்களையே அனாதைகளாக்கி அம்மாக்களையும் இ அப்பாக்களையும் வசீகரிக்கும் வெறியர்களை உருவாக்கியது எது ? இத்தகையை மோசக்காரர்களை இன்னும் நேசிக்கும் மனிதத்தை ஏன் இன்னும் வரவேற்கிறோம் ? கேள்விகளே தொடர்ந்து எழுகின்றன. இத்தகைய மோசம் நமது ஐரோப்பியத் தமிழ் ஊடக உலகுக்குள் ஊன்றிப்பதிந்து கொண்டிருக்கிறது. இவைபற்றிக் கேட்க எழுவோர் எதிரிகளாக்கப்பட்டு ஊடகத்தையே விட்டு ஒதுங்கும் அளவு உபத்திரவம் கொடுக்கப்படுகிறது.

சிறந்த ஒரு அறிவிப்பாளரை நிறுத்துவதற்கே உள்ளுக்கால் சதிசெய்து உதறிவிட்டுத் தப்பித்துவிடும் வல்லோரையெல்லாம் இந்த ஊடகங்கள் உள்ளிழுத்து வைத்தி;ருப்பது உண்மையான உணர்வாளர்கள் இ எதிர்காலத்தில் வரவேண்டிய சிறந்த அறிவிப்பாளர்களையெல்லாம் அழித்துவிடும் நிலையையே உருவாக்கிவிடப் போகிறது. உரியவர்கள் இவ்விடயங்களில் கவனமெடுப்பதும் சில செல்வாக்குக்களுக்காக சீர்கேடுகளை ஊக்குவிப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் மேலும் தவறுகளுக்கான தளங்களை ஏற்படுத்திக் கொடுப்பதைத் தவிர்த்து எதிர்காலத்தில் எங்கள் இளைய சமூகத்தை தமிழுடன் இ தமிழ் ஊடகத்துறையுடன் ஒட்ட வைத்திருத்தலுக்கான பிடிமானத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவதற்குமான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதால் நன்மைகள் பல நமக்கே ஒழிய மாற்றாருக்கு இல்லை.

இந்த நாடுகளில் வளர்கின்ற எங்கள் பிள்ளைகளிடம் சுூது இல்லை இ குழிபறிக்கும் குணமில்லை உண்மையை இ நேர்மையை நேசிக்கும் நெஞ்சுள்ளவர்கள். இவர்களை உள்வாங்கி இ எங்கள் பிள்ளைகள் எக்காலமும் தமிழர்களாக இருக்கத் தளம் அமைப்போம். எத்தனையோ விவேகானந்தர்கள் எங்களுக்குள் இருக்கிறார்கள். அவர்களை இந்த ஊடகங்கள் இனங்கண்டு புதிய உலகைச் சமைக்கப் புலத்து ஊடக வாசலைப் புனிதப்படுத்தட்டும்.

தமிழ்க்குரல்களையே கேட்க முடியாது இருந்த எங்களுக்குத் தமிழ் வானொலி இ தொலைக்காட்சி வரையுமான வளர்ச்சியைக் காணும் வளியைத் தந்த செய்மதிகளுக்கும் இ செய்மதி நிறுவனங்களுக்கும் ஆழுக்கொரு வானொலியை இ தொலைக்காட்சியை உருவாக்கி எம்மவர் வருந்தியுழைக்கும் உழைப்பை வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கொட்டுவதில் கரைவது எம்மவர் உழைப்பு என்ற எண்ணம் இல்லாமல் ஆளுக்கொரு வானொலி உருவாக்க காசுமரங்களாகியிருக்கும் எம்மவர் புத்தி சிறக்க இ தனியாழுமை செலுத்தும் பணிப்பாளர்களை விலக்கி புதிய வருகைகள் இ மாற்றங்கள் உருவாக மனங்களைத் தயார்படுத்துவோம்.ஜஃஙரழவநஸ

Reply


Messages In This Thread
[No subject] - by muniyama - 08-11-2005, 09:08 PM
[No subject] - by muniyama - 08-11-2005, 09:09 PM
[No subject] - by vasisutha - 08-11-2005, 09:11 PM
[No subject] - by muniyama - 08-11-2005, 09:12 PM
[No subject] - by muniyama - 08-11-2005, 09:14 PM
[No subject] - by muniyama - 08-11-2005, 09:43 PM
[No subject] - by vasisutha - 08-11-2005, 09:50 PM
[No subject] - by narathar - 08-12-2005, 12:00 AM
[No subject] - by sri - 08-12-2005, 07:34 AM
[No subject] - by tamilini - 08-12-2005, 08:47 AM
[No subject] - by sri - 08-12-2005, 11:05 AM
[No subject] - by sathiri - 08-12-2005, 03:05 PM
[No subject] - by tamilini - 08-12-2005, 03:08 PM
[No subject] - by sathiri - 08-12-2005, 04:15 PM
[No subject] - by kurukaalapoovan - 08-12-2005, 08:10 PM
[No subject] - by sri - 08-17-2005, 08:12 AM
[No subject] - by Thala - 08-17-2005, 08:18 AM
[No subject] - by sri - 08-17-2005, 08:21 AM
[No subject] - by sri - 08-22-2005, 08:32 AM
[No subject] - by sathiri - 08-22-2005, 03:23 PM
[No subject] - by Anandasangaree - 08-22-2005, 03:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)