06-21-2003, 09:56 AM
-நாமகள்
ஒரு கணம்தான்
அதிலும்
குறைவாகக் கூட இருக்கலாம்.
யாருமே எதிர்பாராமல்,
அது நிகழ்ந்தது.
அந்தச் சந்தியை
கடந்து கொண்டிருந்தவர்கள்,
தேநீர்க் கடையினுள்ளே
அமர்ந்திருந்தவர்கள்,
மண்ணெண்ணெய்க்காய்
வரிசையில் நின்றவர்கள்
எல்லோரையும் தாண்டி
அவனுக்கு முன்பாய்
நிகழ்ந்த வெடிப்பு.
மேலே விமானங்கள் இல்லை;
ஸெல்தான்.
அவன்
ஒரு முறை மேலெழும்பி
கீழே வீழ்ந்தான்.
எந்தச் சத்தமுமில்லை.
கத்த நினைப்பதற்குள்
அவன் இறந்திருக்க வேண்டும்.
வெடிப்பின் அதிர்வில்
அவன் கத்தல்
கேட்காமலும் போயிருக்கலாம்.
எதுவும் சொல்வதற்கில்லை
சனங்கள்
திடீரென ஒதுங்கிப் போனார்கள்
தேநீர்க் கடையின் பாட்டுக்கூட
நின்று போயிருந்தது.
வெறிச்சோடிய வீதியில்
அவன் மட்டும்
தனியாகக் கிடந்தான்.
கையொன்று
வீதியின் மறுகரையில்
விரல்களை நீட்டியபடி
யாரையோ
குற்றஞ் சாட்டுவதாய்லு}
சில நிமிஸங்கள் தான்.
'அம்புலன்ஸ்' வந்து
எல்லாவற்றையும்
அள்ளிக்கொண்டு போனது,
எஞ்சியதாய்
கொஞ்சமாய் அவனது இரத்தம்
ஒன்றிரண்டு
சைக்கிள் கம்பிகள்
ஸெல் துண்டுகள்
அவ வளவுதான்.
வாகனங்கள்
அவற்றையும்
துடைத்துக்கொண்டே கடந்தன.
வீதியில்
இப்போது எதுவுமேயில்லை.
எல்லாமே
பழையபடி.
மண்ணெண்ணெய் வரிசை
முன்பை விட நீண்டிருக்கிறது
தேநீர்க் கடையிலும்
புதிதாய்
ஒரு பாட்டு ஆரம்பமாகியிருக்கிறது
சனங்கள்
விரைந்து கொண்டிருக்கிறார்கள்
எதுவுமே நிகழாத மாதிரி.
ஒரு கணம்தான்
அதிலும்
குறைவாகக் கூட இருக்கலாம்.
யாருமே எதிர்பாராமல்,
அது நிகழ்ந்தது.
அந்தச் சந்தியை
கடந்து கொண்டிருந்தவர்கள்,
தேநீர்க் கடையினுள்ளே
அமர்ந்திருந்தவர்கள்,
மண்ணெண்ணெய்க்காய்
வரிசையில் நின்றவர்கள்
எல்லோரையும் தாண்டி
அவனுக்கு முன்பாய்
நிகழ்ந்த வெடிப்பு.
மேலே விமானங்கள் இல்லை;
ஸெல்தான்.
அவன்
ஒரு முறை மேலெழும்பி
கீழே வீழ்ந்தான்.
எந்தச் சத்தமுமில்லை.
கத்த நினைப்பதற்குள்
அவன் இறந்திருக்க வேண்டும்.
வெடிப்பின் அதிர்வில்
அவன் கத்தல்
கேட்காமலும் போயிருக்கலாம்.
எதுவும் சொல்வதற்கில்லை
சனங்கள்
திடீரென ஒதுங்கிப் போனார்கள்
தேநீர்க் கடையின் பாட்டுக்கூட
நின்று போயிருந்தது.
வெறிச்சோடிய வீதியில்
அவன் மட்டும்
தனியாகக் கிடந்தான்.
கையொன்று
வீதியின் மறுகரையில்
விரல்களை நீட்டியபடி
யாரையோ
குற்றஞ் சாட்டுவதாய்லு}
சில நிமிஸங்கள் தான்.
'அம்புலன்ஸ்' வந்து
எல்லாவற்றையும்
அள்ளிக்கொண்டு போனது,
எஞ்சியதாய்
கொஞ்சமாய் அவனது இரத்தம்
ஒன்றிரண்டு
சைக்கிள் கம்பிகள்
ஸெல் துண்டுகள்
அவ வளவுதான்.
வாகனங்கள்
அவற்றையும்
துடைத்துக்கொண்டே கடந்தன.
வீதியில்
இப்போது எதுவுமேயில்லை.
எல்லாமே
பழையபடி.
மண்ணெண்ணெய் வரிசை
முன்பை விட நீண்டிருக்கிறது
தேநீர்க் கடையிலும்
புதிதாய்
ஒரு பாட்டு ஆரம்பமாகியிருக்கிறது
சனங்கள்
விரைந்து கொண்டிருக்கிறார்கள்
எதுவுமே நிகழாத மாதிரி.

