08-10-2005, 06:14 PM
அங்கம் இரண்டு
திரை விலகுகிறது
மன்னர் அந்தபுரத்தில் கட்டிலில்படுக்கவைக்கபட்டிருக்கிறார் மகாராணியாரோ பதைபதைத்தபடி நடந்து திரிகிறர் மற்றவர்கள் எல்லோரும் சோகமாக சுற்றிவர நிக்கிறனர்
மகாராணி: யாரங்கே உடனே அரண்மனை வைத்தியர் சோழியனை கூட்டிவாருங்கள்
(வைத்தியர் சேழியன் தனது நீண்டதாடியை தடவியபடி தனது முலிகை பெட்டியுடன் வந்து மன்னரின் நாடித்துடிப்பை பாக்க கையை பிடிக்கிறார்)
வைத்தியர் : அட மன்னர் பலமாதங்களாக முழுகாமல் இருக்கிறார்
(எல்லோரும் வைத்தியரை ஆச்சரியமாக பார்க்க )
மகாராணி : என்ன வைத்தியரே உமக்கென்ன லூசா மன்னர் எப்படி கர்ப்பமாக முடியும்
வைத்தியர்: மன்னிக்கவும் மகாராணி நான் அதை சொல்லவில்லை மன்னர் பலமாதங்களாக குளித்து முழுகாததால் அவர் உடலில் ஊத்தை படை படையாக பிடித்திருப்பதால் நாடித்துடிப்பை அறிய முடியவில்லை அதைத்தான் சொன்னேன்
தளபதி மதன் : ஒ அதுவா நாம்தான் இப்போ எங்கும் படையெடுப்பது இல்லையேஅதனால் ஊத்தையாவது படையெடுக்கட்டும் என்று மன்னர் விட்டிட்டார்
(வைத்தியர் சில முலிகைகளை பிழிந்து மன்னரின் காதில் ஊற்ற மன்னர் விழிக்கிறார்)
மன்னர்: ஆஆ நான் எங்கிருக்கிறேன் என்ன நடந்தது
மகாராணி: தாங்கள் ஏதோ பத்துநாளாய் சாப்பிடாதவர் மாதிரி பாணை பறத்து உண்டதால் மயங்கிவிட்டீர்கள் மன்னா அரண்மனை வைத்தியர் சோழிதான் பால சோலிகளிற்கிடையிலும் உங்களை காப்பாற்றினார்
மன்னர்: ஓ அப்படியா நன்று அவரிற்கு நான் ஏதாவது பரிசு கொடுக்கவேண்டுமே(மன்னர் கழுத்தில் கையை வைக்கிறார் அங்கு அவரது மணிமாலையை காணாது திடுக்கிட்டு) ஆ எனது விலை மதிப்பற்ற மணி மாலையை காணவில்லையே நான் மயங்கிய சமயத்தில் யாரோ சுட்டுவிட்டார்கள்
தளபதி : அப்படியா மன்னா ஆணையிடுங்கள் நாட்டுமக்கள் எல்லோரையும் சோதனை போட்;டு கண்டு பிடித்துவிடுகிறேன் வெற்றிவேல் வீரவேல்
மன்னர்: யோவ் தளபதி அறிவிருக்கா
தளபதி :ஏன் மன்னா உங்களிற்கு வேண்டுமா?
மன்னர்: மன்னர் மயங்கி விழுந்து மணி மாலை களவு போய்விட்ட தென்று மற்றைய நாட்டரசர்கள் அறிந்தால் காறி துப்ப மாட்டார்களா? பேசாமல் எமது ஒற்றர் தலைவன் டண்கனை வரச்சொல்லும் அவர்முலம் துப்பறிந்து இரகசியமாக பிடிக்கலாம்
தளபதி: ஆகட்டும் மன்னா வெற்றி வேல் வீரவேல்
மன்னர் : தளபதியே வாளை கையில் வைத்துக்கொண்டு எதுக்கையா வேல் வேல் எண்டு கத்துறீர்
தளபதி : அதுவா மன்னா வாள் வாள் என்று கத்தினால் அவ்வளவு நன்றாக இருக்காதல்லவா கழுதை என்று நினைத்து விடுவார்கள் அதனால்தான் வேல் வேல் எண்டு கத்துறன்
மன்னர் : ஏதோ கத்தி தொலையும் முதலில் போய் டண்கனை கூட்டிவாரும்
(ஒற்றர் தலைவன் டண் வருகிறார்)
டண்கன் : வணக்கம் மன்னா நீங்கள் கூட்டிவரச்சொன்னதாக தளபதி மதன் தும்புதடியுடன் வந்தார் என்னவிடயம்
மன்னர் :வாரும் எனது மணி மாலை திருடுபோய்விட்டது நீர்தான் இரகசியமாக கண்டுபிடித்து தரவேண்டும்
டண்கன் : ம்;;;;;;;;;;;;;;;;;;;;;;;.........ஆ சற்று முன்னர் எமது அரண்மனை சமையல்காரன் சின்னப்புதான் அவசரமாக இங்கிருந்த வெளியேறினான் அவன்தான் திருடியிருக்கவேண்டும்
மன்னர் :அப்படியா அவனை பிடித்து வாருங்கள்
டண்கன் : ஆகட்டும் மன்னா(வெளியேறுகிறார்)
(அப்போதுதான் மந்திரியார் உள்ளேவருகிறார்)
மந்திரி : வணக்கம் மன்னா வர வரஉங்களிற்கு சோம்பேறித்தனம் கூடிவிட்டது அந்தப்புரத்திலேயே அரசவையை கூட்டிவிட்டீர்களா??
மன்னர் : வாருமய்யா வாரும் இங்கை இவ்வளவு பிரச்சனை நடக்கிதே எதுவும் தெரியாமல் எங்கே என்னத்தை பிடிக்க போனனீர்(மன்னர் நடந்தவற்றை விளக்குகிறார்)
மந்திரி : மன்னிக்கவும் மன்னா அயல் நாட்டிலிருந்து ஒரு ஆடலழகி அல்லி என்றொரு அழகி வந்திருந்தாள் அவளை அழைத்துவர போயிருந்தேன் அதற்கிடையில் எல்லாம் நடந்த விட்டது
மன்னர் : சரி சரி எங்கே அந்த அழகி கூப்பிட்ட ஆட சொல்லும்
மந்திரி : அமைதி அமைதி இப்போ ஆடலழகி அல்லி ஆட போகிறார்(எல்லோரும் அமைதியாகின்றனர்)
அல்லி அங்கு வந்து : இந்த அழகி அல்லி ஆடவேண்டமானால் அழகு மன்னர் பாடவேண்டும்
மன்னர் : (மந்திரியிடம் இரகசியமாக) என்னய்யா வம்பை விலைக்கு வாங்கிந்திருக்கியியா இருக்கு உனக்கு
மந்திரி : அழகி அல்லியே மன்னர் நன்றாக பாடுவார் ஆனால் இண்று அவர் ஐஸ் கிறீம் குடித்ததால் தொண்டை சரியில்லை நீயே பாடி ஆடம்மா
(அல்லி ஆடத்தொடங்குகிறார் தை தா தை தா தை தா)
மன்னர் : மந்திரியாரே அந்தபெண் என்னத்தை தைமாதம் தரச்சொல்லி கேட்கிறார்
மந்திரி : தைமாதம் தரசொல்லி கேட்கவில்லை மன்னா அது தாள லயம்
மன்னர்: எனக்கு தெரிந்ததெல்லாம் குதிரை கட்டிற லயம்தான் எனக்கு விழங்கிற மாதிரி பாடி ஆட சொல்லுமய்யா
(மந்திரி அல்லியிடம் போய் காதில் ஏதோ சொல்ல அவள் பாடலை மாற்றுகிறாள்)
அல்லி : காத்தடிக்கிது காத்தடிக்கிது நீயும் நானும்
சேத்தடிக்கவே
போத்திகிட்டும் படுத்துக்கலாம்
படத்துகிட்டும் போத்திக்கலாம்
மன்னர் : ஆகா அருமை அருமை இதுவல்லவோ பாடல்
(அப்போது தோட்டகாரன் சின்னாவை ஒற்றர் தலைவன் டண்கன் கைது செய்த கட்ட பொம்மன் ஸரைலில் சங்கிலிகளால் பிணைத்து இழுத்து வருகிறான் ) திரை விழுகிறது

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/