08-10-2005, 02:25 PM
வெளிநாட்டில் வசிக்கும் தங்கை, தனது மகளுடன் கொழும்புக்கு வந்து அக்காவின் வீட்டில் தங்கினார்.
ஒரு நாள் அக்கா, தனது தங்கையின் மகளைக் கூப்பிட்டு,"பிள்ளை! எனக்கு அசதியாக இருக்கிறது. ஒரு தேநீர் தயாரித்து வாரும்" என்று சொன்னார்.
அருகில் நின்ற தங்கை, "அவளுக்கு தேநீர் போடத் தெரியாதே!" என்று பெருமையாகச் சொன்னதும் அக்காவுக்கு வந்ததே கோபம்!
"வெளிநாட்டில் இப்படித்தான் பிள்ளையை வளர்க்கிறாயா? நாளை குடும்பப் பெண்ணான பின் ஹோட்டலிலா சாப்பிடுவாள்? அவளுக்கு சமையல் கலையைக் கற்றுக் கொடு" என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.
அத்துடன், நின்று விடாமல் சமையலறைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று தேநீர் தயாரிக்கும் முறையைக் காண்பித்தார். "நான் சமையல் செய்யும் போது நீ வந்து அதை அவதானிக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.
மகள்மாருக்கு அளவு கடந்த செல்லம் கொடுத்து பொத்திப் பொத்தி வளர்க்கும் தாய்மாருக்கு இது உறைக்க வேண்டும்.
Thanks:Thinakural

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............