Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக???
#1
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக வாழுமா எங்கள் தமிழினம்???

யாழ்குடா நாட்டில் உள்ள அச்சுவேலி எண்டெரு இடத்துக்கு பக்கத்தில் சில கிராமங்களில் (தம்பாளை, பத்தமேனி, இடைக்காடு) ஒரே பதபதட்டம்.. காரணம் அங்கே தம்பாளை கூட்டம், இடைக்காட்டு இளைஞன் ஒருவரை மிகக்கொடுரமான முறையில் காட்டி மீராண்டி தன முறையில் கொலைசெய்தது..

பிரச்சினை என்ன???

இந்த இரு ஊருக்கும் பல காலமாக வாய் சண்டை நடந்திருக்கின்றது, இரு ஊருக்கும் என்பதை விட இரு ஊரில் உள்ள இளைஞர் கூட்டங்களுக்கும். அச் சண்டை சில வேளைகளில் வாய் சண்டை, சாதரன கைச்சண்டை, அதுவே செல்வச்சன்னதி கோயில் கொடியேற்றத்துடன் விசுபரூபம் எடுத்தது, காரணம் தொண்டமான்ற்றில் உள்ள பாலம் இராணுவ நடவடிக்கையில் சேதமடைந்து அது திருத்தபடமல் இருந்து வந்தது. அதை இடைக்காட்டு மக்கள் தாங்கள் திருத்துகின்றோம் எண்டு சொன்னதிற்கு தம்பாளை மக்கள் மறுத்துவந்திருக்கிறார்கள்....

இடைக்காடு, தம்பாளை உறவு எப்படி??

பலாலியில் இருந்து அச்சுவேலி செல்லவேண்டுமெனில், வசாவிளான், வளலாய், இடைக்காடு, தம்பாளை, பத்தமேனி அச்சுவேலி..உண்மையில் இடைக்காட்டு மக்கள் தம்பாளை மக்களை விட வசதி படைத்தவர்கள், காரணம் அவர்கள் சொந்தமாக விவசாய கானிகளை வைத்து விவசாய செய்பவர்கள், அத்துடன் அங்கே வாழும் குடும்பங்களில் குறைந்த பட்சம் ஒரு அங்கத்தவர் புலத்திலே வாழுகின்றனர். ஆனால் தம்பாளை மக்களிடம் அவ் வசதி இல்லை, அவர்கள் இடைக்காட்டு மக்களிடம் வந்து கூலிக்கு வேலை செய்வார்கள். ஆனாலும் அந்த இரு கிராமத்து மக்களிடம் சுமுகமான உறவு நிலவிவருகிறது, ஆனால் அந்த இரு கிரமாத்து இளைஞர்கள்தான் இவ் பிரச்சினைக்கு அத்திவாரம் இட்டவர்கள்.

என்ன பிரச்சினை..

தம்பாளை இளைஞர்கள் தங்களுக்கு பொழுது போகாவிட்டால் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் புதிய மோட்டார்சைக்கிளில்களில் கூட்டம் கூட்டமாக வந்து இடைக்காட்டு பெண்களை சைட் அடிப்பார்கள். அதுவே பின்பு சண்டைக்கு வழிவகுக்கும்,, இப்படி சிறிய சிறிய சண்டை தொண்டமானாறு பாலம் சம்பந்தபட்ட பிரச்சினையும் தம்பாளை இளைஞர்கள் சிலரை எரிச்சலடைய வைத்திருக்கின்றது.. ஆனால் இங்கே கவனிக்கபடவேண்டிய முக்கியவிடயம் இடைக்காட்டு இளைஞர்கள் தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு எண்டு இருப்பார்கள், காரணம் அவர்கள் விவசாயம் செய்பவர்கள், ஓவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பயிர்களை செய்து அதை ஏற்றுமதி செய்வார்கள்

என்ன நடந்தது???

பல முறை இடைக்காட்டு இளைஞர்களுடன் சண்டை போட்டு தம்பாளை இளைஞர்கள் தோற்று உள்ளார்கள். இதனால் இம்முறை தோற்ககூடாது என்று என்னி யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சில இளைஞர்களை பிடித்து இவ் பாரிய சாதனையை செய்திருக்கிறார்கள்.. இடைக்காட்டில் பெரும்பாலும் படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றார்கள்.. அப்படி இருப்பவர்களில் 28 வயது நிரம்பிய இளைஞர் அவர் பெயர் ஆனந்தன் ஆங்கில ஆசிரியாராக பணியாற்றும் இவர் இயற்கையிலே மிகவும் பண்பானவர், எந்தவித வம்புகளுக்கும் செல்லாதவர்,அதிலும் ஆசிரியர் எண்டு சொன்னால் எப்படி எண்டு சொல்லத்தேவையில்லை..

ஆனந்தனுக்கு என்ன நடந்தது.. கவனீங்க இதை காட்டுமிராண்டியிலும் விட காட்டுமீராண்டிக்கூட்டம் என்னம் பூமியில் உயிரோடு இருக்கிறது,

ஆனந்தன் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு அலுவல் காரணமாக அச்சுவேலிக்கு சென்று, இருள்ப்பட்டதும் தம்பாளை வழியாக சைக்கிளில் இடைக்காடு வந்துகொண்டு இருந்தார், அப்பொழுது தம்பாளையில் வைத்து அதுவும் பின்னால் வந்து அவரின் தலையில் (முள்முருங்கை கொட்டனில் பெரிய ஆணிகளை இறுக்கி அந்த கொட்டனால் உச்சந்தலையில் பல முறை ஓங்கி அறைந்துள்ளனர்,,) ஆனந்தன் அப்படியே அடிபட்டு மயங்கு பொழுது கவனீங்க மிளகாய்த்தூளை எடுத்து கண்ணுக்குள் தூவவில்லை கொட்டி இருக்கிறார்கள், விட்டார்களா?? சாரயத்தை பருக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்கள்.. அவரை றோட்டில் கன்னுற்ற சிலர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் கோமாவில் கிடந்திருக்கிறார்,,, பின்னர்?????

அதன் பின்னர் நடந்தது என்ன?? தொடரும்...


இவற்றில் கற்பனை ஏதுமில்லை,, தேவையெனில் அச்சுவேலிக்கு சென்று விசாரிச்சுப்பாருங்கள்.. நிகழ்ந்த கொடுரத்தை.. Idea
[b]

,,,,.
Reply


Messages In This Thread
தமிழீழம் கிடைத்தால் ஒற்றுமையாக??? - by selvanNL - 08-10-2005, 11:11 AM
[No subject] - by narathar - 08-10-2005, 11:24 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:43 AM
[No subject] - by selvanNL - 08-10-2005, 11:52 AM
[No subject] - by Niththila - 08-10-2005, 01:01 PM
[No subject] - by eelapirean - 08-10-2005, 01:06 PM
[No subject] - by tamilini - 08-10-2005, 03:17 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 03:32 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 03:53 PM
[No subject] - by vasisutha - 08-10-2005, 04:08 PM
[No subject] - by அருவி - 08-10-2005, 04:36 PM
[No subject] - by selvanNL - 08-10-2005, 04:45 PM
[No subject] - by poonai_kuddy - 08-10-2005, 04:47 PM
[No subject] - by narathar - 08-10-2005, 07:39 PM
[No subject] - by Thala - 08-10-2005, 08:17 PM
[No subject] - by அருவி - 08-11-2005, 06:23 AM
[No subject] - by sinnappu - 08-12-2005, 08:18 AM
[No subject] - by தூயவன் - 09-30-2005, 06:14 AM
[No subject] - by Rasikai - 09-30-2005, 06:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)