Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிரடிப்படையினர் அடாவடித்தனத்துக்கு இருபுலிகள் பலி
#2
அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று - பொத்துவில் வீதி காஞ்சிரங்குடா சந்தியில் இன்று காலை 7.45 மணியளவில் விடுதலைப் புலிப் போராளிகள் இருவர் சிறிலங்கா காவல்துறை சீருடையணிந்த துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.


ரமேஸ் மற்றும் சுஜிவேந்தன் ஆகிய போராளிகளே இந்த துப்பாக்கிதாரிகளினால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்னர்.

கொல்லப்பட்ட போராளிகள் இருவரும் பாவட்டாவில் உள்ள செயலகத்திலிருந்து அரசியல் பணிக்காக தம்பிலுவில் உள்ள மாவட்ட அரசியல்துறை காரியாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த சமயம் காஞ்சிரங்குடா விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் வழிமறித்த துப்பாக்கிதாரிகள்இ மோட்டார் சைக்கிளிலிருந்து இவர்களை இறக்கி கைகளை கட்டிய பின்பு சுட்டுக்கொன்றதோடு மோட்டார் சைக்கிளையும் தமது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் உடும்பன்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வீரமணி செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்இ

துப்பாக்கிதாரிகள் காவல்துறை சீருடை தரித்து காணப்பட்டமையினால் சிறிலங்கா காவல்துறையினர் தான் வாகனத்தை நிறுத்துகின்றார்கள் எனக்கருதியே தமது போராளிகள் அந்த இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த வேண்டியேற்பட்ட்து.

இச்சம்பவத்திற்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் தேச விரோத ஆயுதக் குழுக்களே பொறுப்பு. கொலையாளிகளின் வாகனம் காஞ்சிரங்குடாஇ திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம்கள் வழியாகவே தப்பிச் சென்றுள்ளன. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் விசேட அதிரடிப்படை முகாம் உள்ளது

இப்படியான நிலையில் இச்சம்பவமானது விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடனேயே இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கான பொறுப்பை இப் பிரதேசத்தின் பாகாப்பிற்கு பொறுப்பான சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் தான் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட இரண்டு போராளிகளின் வித்துடல்கள் தற்போது தங்களால் தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் இச்சம்பவத்தையடுத்து திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள். தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அப்பிரதேசத்தில் கடைகள் யாவும் தற்போது மூடப்பட்டுள்ளன.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by வியாசன் - 08-10-2005, 07:55 AM
[No subject] - by வியாசன் - 08-10-2005, 07:57 AM
[No subject] - by vasisutha - 08-10-2005, 02:21 PM
[No subject] - by vijitha - 08-11-2005, 06:10 AM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)