Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிரடிப்படையினர் அடாவடித்தனத்துக்கு இருபுலிகள் பலி
#1
அம்பாறை மாவட்டம் பாவட்டையில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து அரசியற் பணிகளில் ஈடுபட இன்று காலை 7.30 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிககுள் சென்ற இரு போராளிகள் காஞ்சிரங்குடா பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். (திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:

காலை 7.30 மணியளவில் பாவட்டை சமாதான செயலகத்திலிருந்து படையினரின் ஆக்கிரமிப்புப் பகுதியில் அரசியல் பணியில் ஈடுபடுவதற்காய் உந்துருளி ஒன்றில் சென்ற இரு போராளிகளும், காஞ்சிரங்குடா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து 400 மீற்றர்கள் தொலைவில் உள்ள பகுதியை சென்றடைந்தபோது வெள்ளை நிற ரவுன் ஏசி; ரக வாகனத்தில் சாதாரண உடையில்; காத்திருந்த சிறப்பு அதிரடிப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். இதில் ஒரு போராளி அந்த இடத்திலேயே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாகவும் மற்றைய போராளியின் கைகளை பின்புறமாகக் கட்டிவிட்டு சுட்டுக்கொன்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்;.சங்கதி

இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் குறிப்பிட்ட வாகனத்தில் ஏறி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்குள் சென்றதை தாம் கண்டதாக மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் சின்னக்கடையைச் சேர்ந்த வெள்ளையன் ரமேஸ் (அகவை 32) மற்றும் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சுஜிவேந்தன் (அகவை 18) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாக அம்பாறை மாவட்ட அரசியற்துறையினர் எமக்கு அறியத் தந்துள்ளனர்.சங்கதி

தற்போது இப்போராளிகளின் வித்துடல்கள் விடுதலைப் புலிகளி;ன் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பிற்பகல் 2.00 மணிக்கு அவரிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.சங்கதி

இதேவேளை படையினரின் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டுவருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.சங்கதி

:
Reply


Messages In This Thread
அதிரடிப்படையினர் அடாவடித்தனத்துக்கு இருபுலிகள் பலி - by வன்னியன் - 08-10-2005, 06:31 AM
[No subject] - by வியாசன் - 08-10-2005, 07:55 AM
[No subject] - by வியாசன் - 08-10-2005, 07:57 AM
[No subject] - by vasisutha - 08-10-2005, 02:21 PM
[No subject] - by vijitha - 08-11-2005, 06:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)