Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண்கள் ஏமாற்றிய காலம் பெண்கள் ஏமாற்றும் காலம் இது.
#1
நிச்சயதார்த்தம் முடிýந்த பெண் கொழும்பிலிருந்து சென்னை ஊடாக காதலனிடம் லண்டன் செல்ல முயற்சி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துதர நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இலங்கையிலிருந்து காதலனுடன் விமானம்மூýலம் சென்னைக்கு வந்து, இங்கிருந்து லண்டனுக்குச் செல்ல முயன்ற இளம் பெண்ணை சென்னை விமானநிலையப் பொலிஸார் மீட்டு மீண்டும் இலங்கைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூýறியதாவது:

இலங்கையைச் சேர்ந்த வாலிபரொருவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னையை அடுத்த வேளைச்சேரியில் தங்கியிருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினரான பெண்னுக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. இலங்கையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் வாலிபரும் கலந்து கொண்டார். ஆனால், மணமகள் லண்டனில் வசித்து வரும் இளைஞரொருவரைக் காதலித்து வந்த காரணத்தினால் அவருக்கு நிச்சயதார்த்தத்தில் உடன்பாடு இல்லை. இருப்பினும், நிச்சயதார்த்தத்துக்கு அவர் சம்மதித்தார்.

நிச்சயதார்த்தம் முடிýந்தவுடன் மணமகன் சென்னை திரும்பிவிட்டார். இந்நிலையில் லண்டனிலுள்ள தனது காதலனுடன் தொடர்பு கொண்ட பெண் திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவலைக் கூýறினார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதலன் தனது நண்பருடன் லண்டனிலிருந்து கொழும்பிற்கு வந்தார். அங்கு தனது காதலியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து பெண் காதலன் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூýவரும் சென்னை வரத் திட்டமிட்டனர். பின்னர் திட்டமிட்ட படிý கொழும்பில் தனது வீட்டிýல் இருந்து வெளியேறிய பெண், கொழும்பு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு காதலனும், அவரது லண்டன் நண்பனும் இணைந்து கொள்ள மூýவரும் இந்தியன் எயர்லைன்ஸ் விமானம் மூýலம் புதன் இரவு சென்னை மீனம்பாக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

இதற்கிடையில், கடைக்குச் சென்று விட்டு வருவதாகக் கூýறிவிட்டுச் சென்ற மகள் மீண்டும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரின் தாயார், மகள் அநேகமாக சென்னைதான் வந்திருக்க வேண்டுமெனக் கருதி அது குறித்த தகவலை சென்னையில் தங்கியிருக்கும் மணமகனுக்கு தொலைபேசி மூýலம் கூýறினார். இந்தத் தகவல் கிடைத்ததும் வியாழன் காலை சென்னை மீனம்பாக்க விமான நிலையத்துக்கு வந்த மணமகன் இலங்கையிலிருந்து சென்னை வந்து சேரும் விமானங்களில் இருந்து வெளிவரும் பயணிகளை கண்காணிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், வியாழன் இரவு கொழும்பிலிருந்து சென்னை வந்து சேரும் இந்தியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பெண் தனது காதலன் மற்றும் அவரது நண்பர் வருகின்றனர் என்ற தகவல் அறிந்து அவர்களுக்காக மணமகன் விமான நிலையப் பார்வையாளர் பகுதியில் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அனுர்pயா உட்பட மூýவரும் விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்தனர். அப்போது அவர்களுக்கும் காத்திருந்த மணமகனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலையப் பொலிஸார் நடந்த சம்பவங்கள் குறித்து அறிந்தனர். பின்னர், அவர்களை சமாதானமாகப் போகும்படிý எச்சரித்த பொலிஸார் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டனர். அப்போதுதான் மீண்டும் கொழும்பிலுள்ள தனது தாயாரிடம் செல்ல திரும்புவதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் கூýறினார். இதைத் தொடர்ந்து விமான நிலையப் பொலிஸார் உடனடிýயாகச் செயற்பட்டு வியாழன் காலை சென்னையிலிருந்து கொழும்பு சென்ற இந்தியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பெண்ணை ஏற்றி கொழும்பிற்கு அனுப்பி வைத்தனர்.
Reply


Messages In This Thread
ஆண்கள் ஏமாற்றிய காலம் - by kayanmathi - 10-20-2003, 11:43 PM
[No subject] - by mohamed - 10-21-2003, 03:03 PM
[No subject] - by Paranee - 10-21-2003, 03:13 PM
[No subject] - by mohamed - 10-21-2003, 03:18 PM
[No subject] - by பாரதி - 10-21-2003, 03:29 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 03:34 PM
[No subject] - by P.S.Seelan - 10-23-2003, 12:39 PM
[No subject] - by Mathivathanan - 10-23-2003, 10:31 PM
[No subject] - by Kanani - 10-24-2003, 08:28 AM
[No subject] - by kuruvikal - 10-24-2003, 09:06 AM
[No subject] - by P.S.Seelan - 10-24-2003, 12:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)