Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்ரநெற் காதல்கள்
#2
<span style='font-size:25pt;line-height:100%'>கதை 2 : என்னைப் பற்றிய ரகசியம்</span>
சாட்ரூம்களிலும் ஐ.சி.க்யூ.விலும் (ICQ ஒரு சாட் புரோகிராம்) நான் பார்த்த ஆண்கள் எல்லாம் ரொம்ப மோசம். எடுத்த எடுப்பிலேயே வாரியா?' என்று கேட்கிற டைப். அப்படி வெளிப்படையாகக் கேட்காத ஆண்கள் கூட அநியாயத்திற்கு வழிகிறார்கள். ஆண்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இதையும் மீறி எனக்கு இன்டர்நெட் நண்பர்கள் நிறைய பேர் உண்டு, தோழிகளை விட அதென்னவோ பையன்களுக்கு என்னை ரொம்ப சீக்கிரம் பிடித்துப் போய்விடுகிறது. நான் பாட்டுக்கு என் காதல் கதையை சொல்வதை விட்டுவிட்டு வளவள என்று பேசிக் கொண்டிருக்கிறேன்.

நான் பார்த்தவர்களில் மிகவும் வித்தியாசமானவன் விக்கி'. இது அவனுடைய சாட் nickname ஒரு நாள் ரொம்ப போரடித்து ஐ.சி.க்யூ.வில் vicky என்ற பெயருடைய ஆட்களைத் தேடினேன். 60 பேரோ என்னவோ வந்தார்கள். அதில் யார் ஆன்லைன் என்று பார்த்தேன். அதில் முதல் விக்கி'க்கு ஒரு instant message அனுப்பினேன். ஐ.சி.க்யூ. மற்ற சாட் புரோகிராம்களைப் போல live கிடையாது. ஒரு மெசேஜ் அனுப்பினால் அது போய்ச் சேர ஒரு நிமிடம் ஆகும். அதைப் படித்துவிட்டு நம் ஃப்ரெண்ட் பதிலுக்கு மெசேஜ் அனுப்புவார். ஆனால் இது டென்னிஸ் ஆடுவது போல் ஜாலியாக இருக்கும்.

விக்கியிடமிருந்து உடனே வந்த மெசேஜ் "ஹாய் ரியா நான் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன். தப்பா நெனைச்சிக்காதே. நாம அப்புறம் பேசலாம். குட்நைட்!" என்றது. இந்த விக்கிக்குப் பிறகு லிஸ்ட்டில் இன்னும் 26 விக்கிகள் ஆன்லைனில் இருந்தார்கள். ஆனால் இவன் ரொம்ப நாசூக்கான ஆளாகத் தெரிந்தான். மற்றவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது இவனைப் பிடித்துக் கொள் என்று என் அனுபவம் சொன்னது. விக்கி என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் குட்நைட் சொன்னதும் எனக்குப் பிடித்திருந்தது. ஓ.கே. அட்லீஸ்ட் என் நண்பர்கள் லிஸ்ட்டில் உன் பெயரை சேர்த்துக் கொள்ள எனக்கு அனுமதி கொடு.


நாம் அப்புறம் பேசலாம்' என்றேன். அவன் பதில் எதுவும் பேசாமல் அனுமதி கொடுத்தான். மறுநாள் அவன் ஆன்லைனில் இருந்ததைப் பார்த்து "ஹாய் விக்கி" என்றேன். "ஹாய் ரியா, எப்படி இருக்கே?" என்றான். அதற்குப் பிறகு அவன் பேச்சே வேறு மாதிரி இருந்தது.

அவன் அன்றைக்கு என்ன மூடில் இருந்தானோ தெரியவில்லை. நான் என்ன சொன்னாலும் அதற்குக் கிண்டலாக ஒரு பதிலைத் தயாராக வைத்திருந்தான். சரிதான், இந்தப் பையன் கேடியாக இருப்பான் போலிருக்கிறது உஷாராக இருக்க வேண்டும், என்று முடிவு செய்தேன். அவனுடன் சாட் செய்யும்போது யாராவது என்னைப் பார்த்தால் ஹசரியான லூஸ்' என்று நினைத்துக் கொள்வார்கள். அவன் எப்போதும் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். என்னைப் போல் அவனும் சென்னையில்தான் இருக்கிறான். அவன் என்னைப் பற்றி அதிகம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.

எனக்கு ஐ.சி.க்யூ. விலேயே நிறைய நண்பர்களும் நண்பிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்களில் முக்கால்வாசிப்பேர் நான் தினமும் காலேஜில் சந்திக்கும் நண்பர்கள்தான். விக்கியுடன் பேசுவதற்காக நான் மற்றவர்களுக்கு டிமிக்கி கொடுத்தேன். விக்கியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் சரியான போர் மாதிரித் தெரிந்தார்கள். விக்கி என் மற்ற இன்டர்நெட் நண்பர்களைப் போல் "ஸ்வீட்டி, பேபி" என்று என்னிடம் வழியவில்லை. ஆனால் விக்கி என்னிடம் வழிந்திருந்தால் நான் அதை ரசித்திருப்பேன்.

விக்கி எப்போதுமே தன்னை சூப்பர்மேன் என்று சொல்லிக்கொள்வான். கிளம்பும் நேரம் வந்து விட்டால் "ஓ.கே. ரியா, எங்கேயோ ஒரு அழகான பெண்ணுக்கு ஆபத்து போலிருக்கிறது. நான்தான் போய்க் காப்பாற்றவேண்டும். சீ யூ டுமாரோ!" என்பான். ஒரு நாள் இதே மாதிரி என்னிடம் சொன்னபோது என்னால் பொறுக்க முடியவில்லை. "அதை விட அழகான பெண் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். அவளை விட்டுப் போகப் பார்க்கிறாயே, உனக்கு அறிவிருக்கா?" என்றேன். சில நொடிகளுக்கு அவனிடமிருந்து பதில் இல்லை. பிறகு "ஸாரி டார்லிங்இ மறந்துட்டேன்!" என்று பதில் அனுப்பினான். ரொமான்ஸை நான்தான் அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியிருந்தது.

நான் பச்சை சிக்னல் காட்ட வேண்டும் என்தற்காகவே காத்திருந்தது போல விக்கி அதற்குப் பிறகு ரொமான்ஸில் கலக்கினான்! தினமும் ஒரு வெப்சைட்டிலிருந்து காதல் வாழ்த்து அட்டை அனுப்புவான் - விளையாட்டாகத்தான். என்னை ஆன்லைனில் பார்த்தால் "SWEETHEART!!!" என்று கொட்டை எழுத்தில் கத்துவான். இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தன.

ஒரு நாள் விக்கிஇ "ஸ்வீட்டி, ரியா என்பது உன் நிஜப் பெயரா?" என்றான். இல்லை என்றேன். "அப்படி என்றால் உன் நிஜப் பெயரைச் சொல்!" என்றான் விக்கி. சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினேன். "என் பெயரைத் தெரிந்து கொண்டு என் செய்யப் போகிறாய்?" என்றேன். "இதோ பார் பேபி, இவ்வளவு நாள் பழகியிருக்கிறோம். உன் பெயர் கூட எனக்குத் தெரியவில்லை என்றால் அசிங்கம்" என்றான் அவன். போகட்டும் என்று என் பெயரைச் சொன்னேன். அவன் தன் பெயரை எனக்கு எப்போதோ சொல்லிவிட்டான்.

பிறகு என் ஃபோன் நம்பரைக் கேட்டான். "விக்கி, நீ ரொம்ப ஓவராகப் போகிறாய். ஃபோன் நம்பர் எல்லாம் ரொம்ப பர்சனல்!" என்றேன். விக்கி உடனே ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டான். "I understand. உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை" என்றான். இதென்னடா வம்பாகப் போய்விட்டது என்று நான் அவனை சமாதானப்படுத்த முயன்றேன். "அப்படி இல்லை விக்கி, நாம் இன்டர்நெட்டில் ஃப்ரெண்ட்ஸ். நாம் தினமும் ரொம்ப நேரம் சாட் பண்ணுகிறோம். அப்புறம் ஃபோன் நம்பர் எதற்கு?" என்றேன். "ஓ.கே. டியர், நான் கிளம்பவேண்டும். பிறகு பேசுவோம்" என்று சொல்லிவிட்டு உடனே ஐ.சி.க்யூ. விலிருந்து வெளியேறிவிட்டான். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விக்கி சரியான கோபத்தில் இருப்பது தெரிந்தது.

அடுத்த நாள் அவன் வருவதற்காக வீணாகக் காத்திருந்தேன். அதற்கு மறு நாளும் அவன் வரவில்லை என்றதும், "டேய் இடியட், உனக்கு என்ன ஆச்சு? மரியாதையாக ஐ.சி.க்யூ. வில் வா" என்று ஈ-மெயில் அனுப்பினேன். பதில் இல்லை. அதற்குப் பிறகு இன்னொரு முறை மெயிலும் மெசேஜும் அனுப்பிப் பார்த்தேன். அதற்கும் அவன் மசியவில்லை. சரிதான் போடா என்று விட்டுவிட்டேன். உண்மையில் அவன் எப்போது ஐ.சி.க்யூ. வில் வருவான் என்று காத்திருந்தேன். ஐ.சி.க்யூ.வில் invisible mode ஒன்று இருக்கிறது. நாம் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கலாம். விக்கி invisible mode ல் இருக்கலாம்.

ஒரு வாரம் கழித்து பொறுமை கெட்டுப்போய் அவனுக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பினேன். "விக்கி உனக்கு ஏன் என்னிடம் கோபம்? நீ என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?" என்று சுருக்கமாக எழுதினேன். என் ஈ-மெயில்களை எல்லாம் அவன் படிக்கிறான் என்று எனக்குத் தெரியும். இதற்கு அவனிடமிருந்து கண்டிப்பாக பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

பதில் வரவில்லை. ஆனால் விக்கி ஐ.சி.க்யூ.வில் வந்தான். வந்துவிட்டு சும்மாதான் இருந்தான். நான்தான் அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். "உனக்கு என்ன ஆச்சு?" என்று. ஹலோஇ ஹெள ஆர் யூ எல்லாம் இல்லாமல் நேரடியாகப் பேசினான் விக்கி. "என் மேல் நம்பிக்கை இல்லாதவர்களுடன் நான் பேச முடியாது. என்னை நம்பவில்லை என்றால் அது எனக்குப் பெரிய இன்சல்ட்" என்றான் அவன். "நீ ஏன் அதை அப்படி எடுத்துக்கொள்கிறாய்? நாம் எவ்வளவு நல்ல ஃப்ரெண்ட்ஸாக இருந்தோம். ஒரு ஃபோன் நம்பருக்காக நீ நம் ஃப்ரெண்ட்ஷிப்பை அறுக்கப் பார்க்கிறாயே!" என்றேன்.

"உன் ஃபோன் நம்பரைக் கூட எனக்கு சொல்ல மாட்டாய் என்றால் நீ என்ன ஃப்ரெண்ட் எனக்கு? ஓ.கே. நான் கிளம்புகிறேன். எனக்குக் கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது" என்றான் விக்கி. எனக்கு மனசு ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. "விக்கிஇ எனக்கு ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போ. நாம் ஃப்ரெண்ட்ஸா இல்லையா?" என்றேன். "நான் உன்னை ஃப்ரெண்டாக நினைக்கவில்லை. நான் உன்னை லவ் பண்ணுகிறேன். உன்னை நான் நேரில் பார்க்க வேண்டும். குறைந்தது ஃபோனிலாவது பேசவேண்டும். போதுமா?" என்றான் விக்கி!

எனக்கு இதை ஜீரணிக்க முடியவில்லை. அவன் என் பதிலுக்காகக் காத்திருந்தான். ஆனால் எனக்கு ஆன்லைன் காதலில் நம்பிக்கை இல்லை. அவன் தனக்கு என் மேல் காதல் என்று தன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு அவன் மேல் காதலும் இல்லை. அதே சமயம் நான் அவனை இழக்க விரும்பவில்லை. "விக்கிஇ நான் உன்னைக் காதலிக்கவில்லை. நான் உன்னுடன் இன்டர்நெட்டில் ஃப்ரடெண்டாகத்தான் இருக்க விரும்புகிறேன்" என்றேன்.

"எந்த உறவும் ஒரு கட்டத்திற்கு மேல் வளர வேண்டும் ரியா. நாம் அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம். நீ என்னைக் காதலிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களாக இருப்போம் என்கிறேன்" என்றான் விக்கி. சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திருக்காமல் போய்விட்டான்.

அடுத்து ஒரு வாரம் ஐ.சி.க்யூ.வில் தொடர்ந்து பேசினோம். ஆனால் விக்கி ரொம்ப சீரியஸாக இருந்தான். நான் ஜோக் அடிக்க செய்த முயற்சிகள் வீணானது. விக்கியிடம் முன்பிருந்த விளையாட்டெல்லாம் போய்விட்டது. இது வேறு விக்கி. ஆனால் எனக்கு மறுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நாங்கள் நேரில் சந்தித்தால் அவனுக்கு என்னைப் பிடிக்காமல் போகலாம். அல்லது எனக்கு அவனைப் பிடிக்காமல் போகலாம். இன்டர்நெட் நண்பர்கள் ஆன்லைனில் இருப்பது போல் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. அவனிடம் இதைப் புரிய வைக்கப் பார்த்தேன். விக்கி அதை மறுத்தான். எனக்கு உன்னை நிச்சயம் பிடிக்கும் என்றான்!

ஒரு வாரம் கழித்து மீண்டும் காணாமல் போனான் விக்கி. அதற்குப் பிறகு அவனுக்கு மெசேஜ்களும் ஈ-மெயில்களும் அனுப்பிக் கொண்ட இருந்தேன். இது வரை அவனிடமிருந்து பதில் இல்லை. எனக்கும் நம்பிக்கை போய்விட்டது. இப்போது தோன்றுகிறது, ஃபோன் நம்பர் கொடுத்து ரிஸ்க் எடுத்துப் பார்த்திருக்கலாம் என்று. May be எனக்கு அவன் மேல் அளவுக்கு அதிகமான ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. அதனால்தான் அவனைப் பிரிந்த பிறகு எனக்கு எதுவும் பிடிக்காமல் போனது. நான் ரொம்ப எச்சரிக்கையாக இருந்திருக்கக் கூடாது தான்...



நன்றி : வெப்உலகம்

................
Reply


Messages In This Thread
[No subject] - by arun - 10-20-2003, 09:15 PM
[No subject] - by ganesh - 10-21-2003, 06:09 PM
[No subject] - by arun - 10-21-2003, 09:46 PM
[No subject] - by Paranee - 10-22-2003, 05:23 AM
[No subject] - by shanthy - 10-22-2003, 08:08 AM
[No subject] - by veera - 10-22-2003, 09:19 AM
[No subject] - by ganesh - 10-22-2003, 05:48 PM
[No subject] - by nalayiny - 10-22-2003, 06:21 PM
[No subject] - by arun - 10-22-2003, 07:30 PM
[No subject] - by Mathivathanan - 10-22-2003, 07:44 PM
[No subject] - by arun - 10-22-2003, 07:50 PM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 08:19 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 11:54 AM
[No subject] - by nalayiny - 10-23-2003, 03:37 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 03:48 PM
[No subject] - by arun - 10-23-2003, 07:29 PM
[No subject] - by arun - 10-23-2003, 08:26 PM
[No subject] - by arun - 10-23-2003, 08:27 PM
[No subject] - by Kanani - 10-24-2003, 08:30 AM
[No subject] - by arun - 10-26-2003, 07:55 PM
[No subject] - by arun - 10-26-2003, 08:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)