08-09-2005, 08:40 AM
<b>டிஸ்கவரியின் தரை இறக்கம் தாமதம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40665000/jpg/_40665380_disc_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
டிஸ்கவரி
அமெரிக்க விண்கலமான டிஸ்கவரி தரையிறங்கும் புளோரிடாவில் மேகமூட்டம் அதிகமாக இருப்பதாலும், கடும் மழையினாலும், டிஸ்கவரி விண்கலம் பூமிக்கு திரும்பி வருவது 24 மணி நேரத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
விண் வெளியில் இருந்து பூமிக்குத் திரும்புகையில் காற்று மண்டலத்தின் ஊடாக பயணிப்பது விண்கலத்திற்கு சோதனையான கட்டம் என்று கூறலாம்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கொலம்பியா விண்கலமானது இவ்வாறு விண்ணில் இருந்து காற்று மண்டலத்தின் ஊடாக பூமிக்குத் திரும்புகையில் உடைந்து சிதறிப் போனது.
கொலம்பியா பூமியில் இருந்து வானிற்கு செல்லும் போது உண்டான சிதிலங்கள் விண்கலத்தின் முக்கிய பகுதியினைத் தாக்கி சேதப்படுத்தியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது.
இதே போல டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவப்படும் போதும் சிறிய சேதம் ஏற்பட்டது ஆனால் விண்வெளி வீரர்கள் வானில் மிதந்த நிலையிலேயே கோளாறைச் சரி செய்தனர்.
இந்த முறை விண்வெளி ஓடம் எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் பத்திரமாகத் தரையிறங்கும் என விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.