Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகளுடன் பயணிக்க படையினருக்கு சிறிலங்கா அரசு உத்
#1
விடுதலைப் புலிகளுடன் பயணிக்க படையினருக்கு சிறிலங்கா அரசு உத்தரவு!
[திங்கட்கிழமை, 8 ஓகஸ்ட் 2005, 17:58 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் ஊடாக வடக்கிலிருந்து கிழக்கிற்கும், கிழக்கிலிருந்து வடக்கிற்கும் சென்று திரும்பும் விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் போது விடுதலைப் புலிகளுடன் படையினரும் பயணிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கம் படையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


விடுதலைப் புலிகள் பயணிக்கும் வாகனங்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்ற எண்ணிக்கைக்கு ஏற்ப வழித்துணையாக பயணிக்கும் படை அதிகாரிகளினதும் வீரர்களினதும் எண்ணிக்கை அமையும்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் ஊடாக பயணிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அவர்கள் பயணிக்கும் வாகனங்களில் பாதுகாப்புப் படையினரும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெலி ஓயா பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயணித்த வாகனம் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானதையடுத்து விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

வெலி ஓயா சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் காயமடைந்தமையும் அதனையடுத்து தமது பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரி விடுதலைப் புலிகள் 14 நாள் கால அவகாசம் சிறிலங்கா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சுட்டது புதினத்தில் இருந்து
[b]
Reply


Messages In This Thread
விடுதலைப் புலிகளுடன் பயணிக்க படையினருக்கு சிறிலங்கா அரசு உத் - by sinnappu - 08-09-2005, 07:06 AM
[No subject] - by MUGATHTHAR - 08-09-2005, 07:25 AM
[No subject] - by vijitha - 08-10-2005, 04:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)