08-08-2005, 11:05 PM
எல்லா நாடுகளும் தமது பொருளாதாரத்தையும் வளமான எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ள அரசியல் இராஜதந்திர இராணுவ நகர்வுகளை தூர நோக்கோடு மேற்கொள்ளுவது வழமை. அமெரிக்காவை பொறுத்தவரை தனது உலகின் முதலாவது பொருளாதாரம் மற்றும் அதிவல்லரசு (hyper-power) என்ற நிலையை பேணவேண்டும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அமெரிக்காவின் பொருளாதார பலம் இராணுவ பலம் தொழில்நுட்ப்ப பலம் அரசியல்-இராஜதந்திரப் பலம் என்பன ஒன்றையொன்று தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன. ஜா.நா தனது முக்கிய அன்பளிப்பாளரின் கைகளில் சிக்குண்டு தவிப்பது இதன் ஒரு அங்கம்.
இவை அனைத்திற்கும் அடிப்படையான வளம் ஒன்று உண்டு அது தான் மனிதவளம். பொருளாதார வழர்ச்சி கண்ட இயந்திர வாழ்கை நடத்தும் சமுதாயங்களில் சனத்தொகை குன்றுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இந்தியா சீனாவின் மொத்த சனத்தொகை இன்று உலக சனத்தொகையின் கிட்டத்தட்ட 66 வீதம். இவ்விரு நாடுகளும் தற்பொழுது அனுபவித்து வரும் பொருளாதார வழர்ச்சி எதிர்காலத்தில் கணிசமான அளவு நுகர்வோர் சந்தையாக மாறும்பட்சத்தில் உலகின் சக்திமிக்க பொருளாதாரங்களாக மாறப்போகின்றன. அது மட்டுமல்ல அவர்களுடைய மனிதவளங்கள் அந்நாடுகளின் தொழில்நுட்பவளர்சி மற்றும் உற்பத்தித்திறனின் அத்திவாரங்களாக இருக்கப்போகின்றன. எற்கனவே மேற்குலக நாடுகளின் பல கீள்மட்ட தொழில்வாய்ப்புக்கள் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் குறைந்த செலவில் செய்ய அனுப்பப்பட்டன, இப்பொழுது சில பெறுமதிமிக்க நுட்பமான (skilled & high value)தொழில்களிலும் பல இந்தியா சீன போன்ற நாடுகளினால் இலக்குவைக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மேற்குலக நாடுகளில் சில தொழில்துறையையே முற்றாக கேள்விக்குறியாக்கும் வேகத்தில் நடைபெறுகின்றன.
மேற்குலக நாடுகள் தமது முதன்மைத்துவத்தை படிப்படியாக சீனா விற்கு இழப்பதென்பது தவிர்கமுடியாததொன்று. அமெரிக்காவைப் பொறுத்த வரை சீனாவின் எதிர்கால பொருளாதார அரசியல் ஆதிக்கத்தை எதிர்கொள்ள தனது வழமையான அரசியல்-இராஜதந்திர நண்பரான பிரித்தானியாவையோ பொருளாதார பங்காளியான யப்பானையோ (தற்பொழுது உலகின் இரண்டாவது பொருளாதாரம்) நம்பியிருக்க முடியாது. அதற்குத் தகுதியுடைய நாடு இந்தியாவே. இரண்டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டு போட்டு அழித்த யப்பானை மீளக்கட்டியெழுப்புவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. யப்பான் இன்று தொழில்நுட்பத்தில் முன்நிலையில் இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் இருப்பது மனிதவளம் மட்டுமே, இயற்கை வளத்தை பொறுத்தவரை ஒரு வறிய நாடு என்று கூறுவார்கள். இயற்கை வளங்கள்; என கனிமங்கள் உலோகங்கள் எண்ணை வாயு, நிலக்கரி அல்லது விவசாயரீதியில் விசேடமாக எதையும் பயிர்ச் செய்கை செய்து எற்றுமதி செய்து நாட்டின் வருவாயை தேடக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தமது மனித வளங்கள் மூலம் பெறுமதியைக்கூட்டி நுகர்வுப்பொருட்களாக ஏற்றுமதி செய்வதில் தான் நாட்டின் வருமான தங்கியுள்ளது. பிரித்தானியாவும் ஒருவகையில் இயற்கை வளங்களைப் பொறுத்தவரை வறிய நாடு என கூறுவர் சிலர். அதனால் தான் முகாமைத்துவம் பண்டமாற்று தொழில்நுட்பம் போன்று மனித வளத்தை அடிப்படையாக கொண்ட துறைகளில் இவர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள், அப்படியான தேவையும் இருக்கிறது.
யப்பான் உலக யுத்தத்தில் ஈடுபடக்காரணம் ஆக்கிரமிப்பு மூலம் தனது ஏற்றுமதி சந்தைகளை விருத்தி செய்யவும் தேவையான மூலப்பொருட்களை வழங்கலை உறுதி செய்யவுமே. மீள்கட்டியெழுப்பலில் உதவி செய்த அமெரிக்கா யப்பானில் செய்த முதலீடுகள் மூலம் தனக்கு பொருளாதாரரீதியில் (இரணுவரீதியில் விசப்பல் பிடுங்கப்பட்ட பாம்பாகத்தான் இரண்டாம் உலகயுத்த சரணடைவு விதிகளின் படி இன்றுவரையுள்ளது) ஒரு சவாலாக வராமல் பாத்து கொள்கிறது. யப்பானின் பொருளாதார மீள்ட்சியில் முழுக்கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இல்லாது போனாலும் தற்போது சீனாவின் வளர்ச்சியில் இருக்கும் எந்தவித கட்டுப்பாடற்ற நிலையில் இருக்கவில்லை. இன்நிலையில் ஒரு தகுந்த பங்காளியை அரவணைத்து சில சலுகைகளை வழங்கி ஒப்பந்தங்களை தூரநோக்கிய சிந்தனையோடு எற்படுத்தினால் தனது மறைமுக ஆளமையின் கீள் எதிர்காலத்தில் கொண்டுவரலாம்.
யுத்தத்தினால் அழிவுற்ற யப்பானிற்கு பொருளாதார தொழில்நுட்ப்பத் தேவைகள் இருந்தது. இந்தியாவிற்கு சில தொழிநுட்ப்பத்தேவைகள் இருக்கு அதைவிட முக்கியமாக உலகின் சக்தி மிக்க வல்லரசுகளில் ஒன்றென்ட அந்தஸ்த்து அங்கீகாரம் தேவை. ஆனாலும் இந்தியாவின் வளர்ச்சியும் ஆதிக்கமும் எதிர் காலத்தில் தனது நிலையை கேள்விக்கூறியாதவாறு அமெரிக்கா பாத்துக் கொள்ளும். இந்தியாவை திருப்திப்படுத்தி நம்பிகையை அதிகரிக்கும் தேவைக்காகவே தமிழ் ஈழ விடுதலைப்போராட்டம் பயன்படுத்தப்படலாம். இந்தியாவை எதிர்காலத்தின் ஒரு முக்கிய பங்காளியாக பார்ப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துவிட்டால் திருகோணமலைத்துறைமுகம் அமெரிக்காவிடம் இருந்தால் என்ன இந்தியாவிடம் இருந்தால் என்ன? அமெரிக்காவின் தமிழ் ஈழ விடுதலைப்போராட்டம் மீதான அண்மைக்கால அனுதாபப் பார்வையை இப்படி ஒரு பின்னணியோடு பார்க்கலாம் என நினைக்கிறேன் உங்கள் கருத்துக்கள் என்ன?