08-08-2005, 10:48 PM
<b>உலகத் தரவரிசையில் 48 ஆவது இடத்தைப் பிடித்தார் சானியா மிர்ஸா</b>
''இந்த ஆண்டு இறுதிக்குள் உலகத் தரவரிசையில் 50 இடங்களுக்குள் இடம் பிடிக்க வேண்டும்'' என்ற இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவின் கனவு நனவாகியுள்ளது.
இந்த வாரம் வெளியிடப்பட்ட உலக பெண்கள் தர வரிசையில் சானியா மிர்ஸா சென்ற வாரம் இடம் பெற்றிருந்த 59 ஆவது இடத்திலிருந்து 11 இடங்களை அனாயாசமாகக் கடந்து 48 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை ஒருவர் உலகத் தரவரிசையில் 50 இடங்களுக்குள் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
சான்டியாகோவில் நடைபெற்ற அகூரா க்ளாசிக் டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்குப் பரிசாக சானியா மிர்ஸாவுக்கு இந்த தர வரிசை உயர்வு கிடைத்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே நன்றாக விளையாடி வரும் 18 வயது சானியா மிர்ஸா, உலக அளவில் பிரபலமாக உள்ள அனைத்து வீராங்கனைகளையும் எதிர்த்து விளையாடி, அவர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற செரினா வில்லியம்ஸ், சானியாவை எதிர்த்து விளையாடிய பின், ''சானியாவுக்கு மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது'' என்று புகழ்ந்துரைத்தார்.
இந்தியாவில் ஆண்கள் பிரிவில் 1980 ஆம் ஆண்டு விஜய் அமிர்தராஜ் 16 ஆம் இடம் பெற்றதும், 1985 ஆம் ஆண்டு ரமேஷ் கிருஷ்ணன் 25 ஆம் இடம் பிடித்ததும்தான் இதுவரை சாதனையாக இருந்துவந்தது.
ஆனால் இப்போது சானியா மிர்ஸா பெண்கள் பிரிவில் முதல் முறையாக 48 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது, இந்தியாவில் டென்னிஸ் ரசிகர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்
vikatan.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>