06-21-2003, 09:53 AM
இப்பொழுது
ஊர் நினைவுகளை
அடிக்கடி தூசு தட்டுகிறேன்
ஞாபகப் பக்கங்களை
அடிக்கடி புரட்டுகின்றேன்.
அப்பொழுதெல்லாம்
அந்நினைவுகளின் அடுக்குகளில்
இடறி விழுகிறேன்
அதில்
எனக்கு அலாதிசுகம்
வாய்க்காலில் குளித்தது
பழைய நினைவு அது
நினைக்கையில் இப்போதும்
மூச்சுத்திணறுகிறது
ஆம், எனக்கு
அப்போது நீந்தத்தெரியாது.
கற்ற பள்ளிபற்றி எண்ணுகையில்
சுள்ளென்று பிரம்படிபட்டதாய்
இன்றும்
இதயம் வலிக்கிறது.
முருகனின்
ஆலய மணிஒலி
இதய ஒலிப்பேழையிலிருந்து
அழிக்கமுடியாததொன்றாகிவிட்டது
இப்படி இந்த
நினைவுகள் தந்த ஈரம்
எந்தக் காற்றாலும் உலராது
இருப்பிட வேரறுந்ததால்
வேறிடத்தில்
வேர்கொள்ள முடியாததால்
என்னின் மனிதனைக் காண
அடிக்கடி
ஊர் நினைவுகளை
தூசு தட்டுகிறேன்.
தி. றமணன்
ஊர் நினைவுகளை
அடிக்கடி தூசு தட்டுகிறேன்
ஞாபகப் பக்கங்களை
அடிக்கடி புரட்டுகின்றேன்.
அப்பொழுதெல்லாம்
அந்நினைவுகளின் அடுக்குகளில்
இடறி விழுகிறேன்
அதில்
எனக்கு அலாதிசுகம்
வாய்க்காலில் குளித்தது
பழைய நினைவு அது
நினைக்கையில் இப்போதும்
மூச்சுத்திணறுகிறது
ஆம், எனக்கு
அப்போது நீந்தத்தெரியாது.
கற்ற பள்ளிபற்றி எண்ணுகையில்
சுள்ளென்று பிரம்படிபட்டதாய்
இன்றும்
இதயம் வலிக்கிறது.
முருகனின்
ஆலய மணிஒலி
இதய ஒலிப்பேழையிலிருந்து
அழிக்கமுடியாததொன்றாகிவிட்டது
இப்படி இந்த
நினைவுகள் தந்த ஈரம்
எந்தக் காற்றாலும் உலராது
இருப்பிட வேரறுந்ததால்
வேறிடத்தில்
வேர்கொள்ள முடியாததால்
என்னின் மனிதனைக் காண
அடிக்கடி
ஊர் நினைவுகளை
தூசு தட்டுகிறேன்.
தி. றமணன்

