06-21-2003, 09:53 AM
உயிர் ததும்பத் ததும்ப
உருவிரியும் கோடுகள்
இயல்பான முறிவுகளும்
லாவகமான வளைவுகளும்
உணர்வுகளின் முடிச்சவிழ்க்கும் ஓவியம்
வண்ணங்களைக் கலந்து கலந்து
உனக்கு இதமான வண்ணம் காண
காதலுற்று உழைத்தாய்.
எத்தனை கொடூரமாய் இடறியது காலம்?
சிதறிய வண்ணங்கள்
உன் பிரிய முகங்களில்
விகாரமாய் வழிய வழிய
உனது பாத்திரங்களை வெறுமை கவ வியது.
இராணுவக் காலணியின் திகிற்சுவடுகள்
வண்ணக்குழம்பெங்கும் விரிந்து
குரூரமாய் பல்லிளித்தன.
அவற்றின் நெரிசல் இடுக்குகளில்
கிருஸ்ண ஜெயந்திப் பாதங்கள் திணறின.
ஒளிப்பொட்டும் ஊடுருவா வதைநிலத்தில்
கோடுகள் சிதைந்த ஓவியம்
கரும்பாசி படரக் கிடக்கிறது.
உனது பாத்திரங்களை
தடவித் தடவி
தவித்தலைகின்றன விடாயுற்ற உறவுகள்.
ஓவியங்கள் வெறித்து வெறித்து
ஏங்கும் முகங்களில்
கருவண்ணம் தீற்றும்
காலத்து}ரிகையின் சிலிர்ப்பொடுங்கா மிருக உரோமங்கள்.
-எஸ். உமாஜிப்ரான்
உருவிரியும் கோடுகள்
இயல்பான முறிவுகளும்
லாவகமான வளைவுகளும்
உணர்வுகளின் முடிச்சவிழ்க்கும் ஓவியம்
வண்ணங்களைக் கலந்து கலந்து
உனக்கு இதமான வண்ணம் காண
காதலுற்று உழைத்தாய்.
எத்தனை கொடூரமாய் இடறியது காலம்?
சிதறிய வண்ணங்கள்
உன் பிரிய முகங்களில்
விகாரமாய் வழிய வழிய
உனது பாத்திரங்களை வெறுமை கவ வியது.
இராணுவக் காலணியின் திகிற்சுவடுகள்
வண்ணக்குழம்பெங்கும் விரிந்து
குரூரமாய் பல்லிளித்தன.
அவற்றின் நெரிசல் இடுக்குகளில்
கிருஸ்ண ஜெயந்திப் பாதங்கள் திணறின.
ஒளிப்பொட்டும் ஊடுருவா வதைநிலத்தில்
கோடுகள் சிதைந்த ஓவியம்
கரும்பாசி படரக் கிடக்கிறது.
உனது பாத்திரங்களை
தடவித் தடவி
தவித்தலைகின்றன விடாயுற்ற உறவுகள்.
ஓவியங்கள் வெறித்து வெறித்து
ஏங்கும் முகங்களில்
கருவண்ணம் தீற்றும்
காலத்து}ரிகையின் சிலிர்ப்பொடுங்கா மிருக உரோமங்கள்.
-எஸ். உமாஜிப்ரான்

