08-07-2005, 07:02 PM
<b>உலகெங்கும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் டிஸ்கவரி இன்று பூமி திரும்புகின்றது </b>
அமெரிக்கா மட்டுமல்ல அகில உலகமும் பரபரப்புடன் எதிர்நோக்கும் டிஸ்கவரி விண்வெளி ஓடம் மீண்டும் இன்று பூமி திரும்புகின்றது.
ஆனால் அதற்கு முன்பாக டிஸ்கவரி பல்வேறு ஆபத்துகளைக் கடக்க வேண்டியுள்ளது. விண்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்தில் டிஸ்கவரி நுழையும் தருணம் மிக முக்கியமானது. அதை பட படக்கும் இதயங்களுடன் நாசாவின் பொறியியலாளர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட கொலம்பியா விண்வெளி ஓடம் பூமியின் வலி மண்டலத்தில் நுழையும் போது தான் வெடித்து சிதறியது 7 பேர் இறந்தனர்.
திடீரென வளிமண்டலத்துக்குள் நுழையும் போது உராய்வினால் ஏற்படும் 1,650 டிகிரி வெப்பத்தை டிஸ்கவரி விண்வெளி ஓடம் தாங்கியாக வேண்டும். சுற்றுப் பாதையிலி ருந்து புறப்பட்ட 32 நிமிடங்களில் புவியின் வளி மண்டலத்தை டிஸ்கவரி எட்டிவிடும் அதைத்தொடர்ந்து அடுத்த 31 நிமடங்களில் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கேப் கனவொராவில் தரை இறங்கிவிடும். டிஸ்கவரி விண்வெளி ஓடம் மணிக்கு 29 ஆயிரம் கி. மீ. வேகத்தில் பயணம் செய்யும். ஆனால் புவி வளிமண்டலத்தில் நுழையும் போது இந்த வேகத்தை கட்டாயமாகக் குறைக்க வேண்டும். அப்போதுதான் பய ணம் பாதுகாப்பானதாக அமையும். பின் னோக்கியும் மேலும் கீழும் பறந்து வேகத்தை டிஸ்கவரி குறைக்கும்.
வணிகரீதியிலான விமானங்களை விட வேகமாகவும் செங்குத்தாகவும் டிஸ்கவரி தரையிறங்கும் நிலத்தைத் தொடும்போது ஒரு பாரசூட் விரிந்து அதன் வேகம் முற்றிலும் தடைபடும்.
டிஸ்கவரியில் மேற்கொள்ளப்பட்ட பழுது நீக்கும் பணிகளுக்குப் பின்னர் ஆபத்து ஏதும் இல்லை. பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என உறுதி செய்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். இருந்தாலும் படபடக்கும் மனதுடன் உலகம், டிஸ்கவரிக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது
veerakesari