08-07-2005, 06:59 PM
<b>லண்டன் குண்டு வெடிப்புக்குப்பின்னர் பிரி. பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41381000/jpg/_41381379_blair203.jpg' border='0' alt='user posted image'>
லண்டன்,
லண்டன் குண்டு வெடிப்புக்குப் பின்னர், பிரிட்டிஷ் பிரதமர் பிளேயர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரின் செல்வாக்கை உயர்த்தியுள்ளன என அரசியல் அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.
இனி பயங்கரவாதத்தை முறியடிப்பது, முஸ்லிம்களுடன் நல்லுறவை உருவாக்குவது ஆகியவற்றைப் பொறுத்தே இச்செல்வாக்கு நீடிக்குமா? நீடிக்காதா? என்பதை அனுமானிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
""நாட்டின் சார்பாக தீவிரவாதத்துக்கு பிளேயர் பதிலடி அளித்த விதத்தைப் பார்த்து, வலிமை, பொறுமை, உறுதிப்பாடு ஆகியவற்றோடு அவர் செயல்பட்டுள்ளார் என மக்கள் கருதுகின்றனர்'' என பிரிட்டிஷ் போலிங் இன்ஸ்டிட்யூட்பொப்புலிஸ் இயக்குநர் அன்ரூ கூப்பர் குறிப்பிடுகின்றார்.
""இந்த தன்மைகளையே மக்கள் தம் தலைவர்களிடத்தில் எதிர்பார்க்கிறார்கள். பிளேயர் செயல்படாதவர் என்ற விமர்சனங்கள் தற்போது மாறிவிட்டன'' என்றும் அவர் கூறுகின்றார்.
""வரலாற்று ரீதியாக நோக்கும் போது கூட, நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படும் போதும், பிரச்சினைகள் எழும்போதும் ஆட்சியில் இருப்பவர்களை மக்கள் ஆதரித்திருக்கிறார்கள் என்பது தெட்டத் தெளிவு என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
Veerakesari