08-07-2005, 05:20 AM
என்ன கொடுமையிது!
கரகாட்டமாடி- உயிர்
பிழைக்கும் கன்னியவளுக்கு..
காசை கொடுப்பது இப்படியா?
கடற்கரை சுடுமணலில்..
கன்னியிவள் கிடந்து
வாயினால்...
வயிற்றுக்காய் பணமெடுக்கும் காட்சியிது
வள்ளல்கள் மனதை
உலுக்கவில்லை?
நாயாக கலையை மதிக்கும்
நரிகள் இவர்கள்..
நகைப்புக்கா கரகமிங்கு? -தலையில்
ஏற்றிய கரககுடத்தை
இறக்காமல்..
ஈனர் இரந்து விட்ட
பணமதை எடுக்கும்..
சோதரியே! -உன்
கனவுகள் பொய்திடாது
தொடர்ந்து நீ உழைத்திடு
உயர்வாய் பலருக்கு நீ
கொடுப்பாய் தர்மம்....
கரகாட்டமாடி- உயிர்
பிழைக்கும் கன்னியவளுக்கு..
காசை கொடுப்பது இப்படியா?
கடற்கரை சுடுமணலில்..
கன்னியிவள் கிடந்து
வாயினால்...
வயிற்றுக்காய் பணமெடுக்கும் காட்சியிது
வள்ளல்கள் மனதை
உலுக்கவில்லை?
நாயாக கலையை மதிக்கும்
நரிகள் இவர்கள்..
நகைப்புக்கா கரகமிங்கு? -தலையில்
ஏற்றிய கரககுடத்தை
இறக்காமல்..
ஈனர் இரந்து விட்ட
பணமதை எடுக்கும்..
சோதரியே! -உன்
கனவுகள் பொய்திடாது
தொடர்ந்து நீ உழைத்திடு
உயர்வாய் பலருக்கு நீ
கொடுப்பாய் தர்மம்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

