Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
vikadan
#1
எல்லா ஆண்களும் கெட்டவர்களும் அல்ல! எல்லாப் பெண்களும் நல்லவர்களும் அல்ல! சில பெண்கள் வெளியில் எல்லோரிடமும் சர்க்கரையாகப் பேசித் தேனொழுக நடிப்பார்கள். கணவனிடம் மட்டும் தன் பிசாசு குணத்தை காட்டுவாள். மற்றவர்கள் அவள் பெயரைச் சொன்னாலே. அவளாÕ தங்கமான பெண் ஆச்சே! இப்படியரு மனைவி அமைய... அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! மடையன்! வாழத் தெரியாதவன் என்று விமர்சிப்பார்கள்.

இப்படிப்பட்ட ஒரு பெண்ணை நான் சந்தித்து இருக்கிறேன். ஏன் இப்படி எல்லோரிடமும் இருக்கிறாள்? கணவனிடம் இந்த அன்பைக் காட்டக் கூடாதா? என்று எண்ணியிருக்கிறேன். உண்மையில் அவள் நல்ல பெண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவள் பெற்றோர்! அவளை வற்புறுத்தி.. கிராஜுவேஷன் முடிக்கும் முன்பே திருமணம் முடித்து விட்டனர்.

நான் சம்பாதித்து கொஞ்ச நாள் ஜாலியாக இருந்துவிட்டு பின் கல்யாணம் செய்துக்க இருந்தேன். என் அப்பா அம்மா கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துட்டாங்க! என்றாள் அவள். அந்தப் பெண்ணின் அம்மாவிட மிருந்து நீ இப்போ செய்துக்கலேனா... நான் விஷம் சாப்பிட்டு செத்துடுவேன் என்ற பயமுறுத்தல் வேறு. (இது அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்ப கதை!)

அந்தப் பெண்ணின் அம்மாவுக்குத் தன் ஜம்பம்தான் பெரிது. ஆஹா! திலகத்தை பார்! எப்படி... கரெக்டா பெண் கல்யாணத்தை முடிச்சுட்டா! அவ.. எப்படி நவராத்திரி கொலு வைக்கிறாள்! என்று அவளைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்கள் பேச வேண்டும். இதுதான் அவளது ஆன்ம திருப்தி. நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டும்! என்ற எண்ணம் இல்லாத இவர்கள் அமெரிக்காவில் இருந்தால் என்ன... ஐயம்பேட்டையில் இருந்தால்தான் என்ன? இதில் பாதிக்கப்பட்டது அந்தக் குடும்பத்து மாப்பிள்ளை பையன்தான்.

வாழ்க்கை கிடைத்தவரைதான். அதில் இந்த இளமை இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். இந்தியாவில் இந்த இளமைக் காலத்தில் ஓடியாடி அலுத்துப் போய் பணம் சேர்த்து திரும்பி பார்த்தால் முதுமை வாசல்படி ஆரம்பத்தில் நிற்கும்.

ஆனால் அந்த அமெரிக்கத் தம்பதிகளுக்கு இளமையும் இருக்கிறது. வசதிகள் இருக்கிறது! ஆனால்... பெற்றவர்கள் பெண் பெயரில் வாங்கிய கடனை மாப்பிள்ளை பையனை கட்டச் சொல்கிறார்கள். இதில் ஆரம்பித்த அவர்கள் சண்டை இன்னும் ஓயவில்லை. இதில் அந்தப் பெண்ணோ கணவனை உணராமல் என் அப்பா கடனை கட்டு! என்று அடம்பிடிக்கிறாள். அவனோ... நான் இதற்காகவா யூ.எஸ். வந்தேன். இது சீட்டிங்! மாப்பிள்ளையிடம் வரதட்சணை கேட்கிறீர்களா? என்று சொல்கிறான்.

அவன் பேச்சில் நிறைய நியாயம் இருக்கிறது. அந்தப் பெண்ணாவது அவள் அம்மா பேச்சை கேட்காமல் நல்ல ஒழுக்கம் உத்தியோகம் உள்ளவனைக் கல்யாணம் செய்துள்ளோம். நம் வாழ்க்கையை நாம் காப்பாற்றிக் கொண்டு கணவனிடம் அன்பாக இருந்து சந்தோஷத்தை அனுபவிப்போம் என்று எண்ண வேண்டும். குரங்கு கையில் கொடுத்த ரோஜாப்பூ மாலைபோல வாழ்க்கை அவளிடம்... சீர் கெட்டுக் கிடக்கிறது.

பெற்றவர்களாவது... நாம் வாழ்ந்து முடிச்சாச்சு! அவர்கள் இளமையான இல்லற வாழ்க்கையை இன்பமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல் பெண் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். இதற்கு பெயர் விதி அல்ல! திமிர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கும் இப்படிப் பெற்றவர்களால் சீரழிந்து... இளமையை தீய்த்து கொண்ட இளம் தம்பதியர் எத்தனையோ பேர்! இவர்கள் விழித்துக் கொண்டால்தான் விடியும்.
Reply


Messages In This Thread
vikadan - by arun - 10-19-2003, 04:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)