08-06-2005, 09:33 AM
Quote:வாழ்க்கையே நம்பிக்கைதானே?!ஒருவர் ஏமாற்றிவிட்டு சொன்றார் என்றா? அது நம்பிக்கைக்கு மாறான செயல் தானே. ஏமாந்தவர் எண்ணியிருப்பாரா இவர் ஏமாற்றிட்டு போவார் என்று. அங்கை நம்பிக்கை தானே அடிப்படி. திருமணம் என்று பார்க்கையில் அங்க நிறைய விடயங்கள் தடையாக இருக்கும் நம்பிக்கையையும் தாண்டி. சுற்றம் சூழல் பெற்றார் பிள்ளைகள் என்று பலவற்றை சிந்திப்பினம். காதல் என்றது அப்படியா யாரைப்பற்றியும் சிந்தியாயினம். வாறதும் ஈசி போறதும் இலகு. ஒரு நம்பிக்கையின் பேரில இருக்கிற காதல் தான் கடைசிவரை உறுதியா நிக்கும். :wink:
காதல் என்பது நம்பிக்கையில்மட்டும் தங்கியிருப்பதில்லை என நினைக்கிறேன். உதாரணமாக, ஆணோ பெண்ணோ காதலித்து ஏமாறும்போது, ஏமாற்றுபவரைக் குறை கூற மனதில்லாது அவரையே மனதில் நிறுத்தி வாழுகிறார்களே! அதை காதல் என்று கூறலாமோ?!
Quote:அடிப்படையில நம்பிக்கை என்பது கொடுத்து வாங்குவது ஆனால் காதல் அப்படியில்லையே அன்பை பகிர்வது தானே காதல்அன்பை பகிர்வது மட்டும் தான் காதல் என்றால்? எங்கள் மேல அன்பை வைச்சிருக்கிற நாங்கள் அன்பை செலுத்திற எல்லார் மேலையும் காதல் வருமே?? அம்மா அப்பா அண்ணன் தம்பி நண்பன் நண்பி. என்று பட்டியல் நீண்டிட்டு போகுமே? அப்படியா? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

