06-21-2003, 09:51 AM
தெருவே!
சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தம் புதைத்து
ஏதோ சொல்லத் துடிக்கிறாய்.
மனதின் சாளரங்கள் திறந்து வீசு
சொல்ல நினைக்கும் வார்த்தைகளை
நேற்று வரை யாருமற்றுக் கிடத்தாய்;
துகிலுரித்து துச்சாதனர்கள் மூலை நெரிக்க
நீ ஓலக் குரலிட்ட போது
கம்பன் புகழ்பாடும் இந்திரவிழாவில்
பத்மா சுப்பிரமணியம் பரதமாடிக்கொண்டும்
சேஸ கோபாலன் தில்லானா பாடிக்கொண்டுமிருந்தனர்
சதங்கை ஒலியிலும், சங்கீத ஸ்வரங்களிலும்
சபைக்குக் கேட்கவில்லை உன் சாக்குரல்.
உலகெங்கும் உலாப்போகும் அறிஞர்களும்
சாவுக்குப் பின்னும் ஜீவிக்கும் கனவில்
புத்தகங்கள் அச்சிட்டுக் கொண்டிருந்தனர்,
உனக்காக வார்த்தையுதிர்க்க
அவர்களுக்கெங்கே நேரமிருந்தது
கேட்க நாதியற்றுக் கிடந்தாய்.
வெள்ளைக்காரன் விட்டுப்போய் அம்பது வருடங்கள்
ஆயினுமென்ன?
அவன் போட்டுவிட்டுப் போன முடிச்சுகள்
இன றும்தான் இறுகிறது.
காலத்துக்கு வயதேற ஏறவும் தளர்வின்றி
கழுத்தைத் திருகி மூச்சுத் திணறவைக்கிறது முடிச்சு,
தேம்ஸ்நதி தன்தேவைக்கெனப் பெற்ற உன்னில்
மகாவலியும், கனகராயன் ஆறும்
மல்லுக்கட்டிப் புரண்டன நேற்று;
இருதயத்துக்குக் குருதிகொண்டோடும் நரம்பறுந்து போக
ஓமந்தையில் ஒட்டுப்போட்டது அதிகாரக் கொடிக கால்,
விளக்கு வைத்த குளம்கூட இருண்டிருந்தது,
ஒளிகொண்டுலவிய புலிவீரர்மட்டும் உன்னோடு.
ஊர்மனைகளை ஒட்டஇறைத்து எல்லோரும் போக
வழிமறித்திருந்த பிள்ளைகள் மட்டும் உன்னோடு,
தோலுரிந்து
எக்ஸிமா செதிலாகப் படையெழும்பி
படுக்கைப் புண்ணோடு நீ படுத்திருந்த போது
கதை முடிந்ததெனக் காற்றுரைக்கும் நாளுக்காக
காத்திருந்தனர் பலர்,
சிதையும் எரிந்து முடியட்டும் செலவுக்குப் போவோமென
நடந்தது வேறாகிப் போனது.
அம்பகாமத்தில் nஐயசிக்குறுவுக்கு அந்திரட்டி செய்தோம்
அன்று கொள்ளிவைக்க வராதவர்கள் கூட
இன்று பிண்டம்போடப் புறப்பட்டு வருகின்றனர்,
வென்று மீண்ட வீதியே!
புண்ணான மேனிக்கு புதூவும் கூத்து நடக்கிறது
ரணங்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை,
ஏறிவந்த யமருடன் பொருதி
முழத்துக்கு ஒருவராய் வீழ்ந்தவரை
எவர் நினைத்தார்?
புளியங் குளத்திலும், புதூர்ச் சந்தியிலும்
வழிமறித்திருந்த சோதரியரை எவர்வாய் பேசிற்று!
தடுத்தாட்கொண்ட தென்தமிழீழ மறவர்
கொடுத்த விலைக்கு எவர்தலை குனிந்தது!
பழையன மறக்கும் பண்பு இதிலுமா?
யு-9 தெருவே!
உனக்கு வாழ்வு வந்ததடி.
இன்று கரைமருங்கான கண்ணிகள் அகற்றி
முள்ளரண் தூர்த்து
பீரங்கி நிலைகள் பின் நகர்த்தி
துலாக்கால் தூக்கி
முதலில் சாமான் லொறிகளாம்
பின்னர்தான் "பெருங்குடிமக்களாம்"
காற்றின் திசையறிந்து நெல் தூர்த்தவும்
முதலில் போனவரென்ற முடிசூடவும்
ஆசனங்கள் அகப்பட்டால் அமரவும்
பங்குப்பணம் கேட்கவுமென
இனி எத்தனை "உறவுகள்" வந்துசேரும்,
கண்டிவீதியின் கரைமருங்குள்ள
காயமுற்ற மரங்களே!
குண்டுபட்டுக் குழியுண்ட வன்னி மண்ணே!
போய்வரப் போகும் உறவுகளுடன் பேசுங்கள்.
ஒளியேற்றிய வீரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு
சற்று விலகியிருப்பர்.
எம் பிள்ளைகளின் குருதிபடிந்த சுவடுகள்
இது இதுதான் என்று
உல்லாசப் பயணம் வரும் உறவுகளுக்குக்குக் காட்டுங்கள !
பார்த்து விட்டுப்போய்
கொழும்பில் பட்டிமன்றம் பேசட்டும்,
கவிதை எழுதி விற்கட்டும்.
மீண்டும் உன்னை மூடும் வரை
சொந்தங்களென உனக்கு ஆயிரம் போர்.
சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தம் புதைத்து
ஏதோ சொல்லத் துடிக்கிறாய்.
மனதின் சாளரங்கள் திறந்து வீசு
சொல்ல நினைக்கும் வார்த்தைகளை
நேற்று வரை யாருமற்றுக் கிடத்தாய்;
துகிலுரித்து துச்சாதனர்கள் மூலை நெரிக்க
நீ ஓலக் குரலிட்ட போது
கம்பன் புகழ்பாடும் இந்திரவிழாவில்
பத்மா சுப்பிரமணியம் பரதமாடிக்கொண்டும்
சேஸ கோபாலன் தில்லானா பாடிக்கொண்டுமிருந்தனர்
சதங்கை ஒலியிலும், சங்கீத ஸ்வரங்களிலும்
சபைக்குக் கேட்கவில்லை உன் சாக்குரல்.
உலகெங்கும் உலாப்போகும் அறிஞர்களும்
சாவுக்குப் பின்னும் ஜீவிக்கும் கனவில்
புத்தகங்கள் அச்சிட்டுக் கொண்டிருந்தனர்,
உனக்காக வார்த்தையுதிர்க்க
அவர்களுக்கெங்கே நேரமிருந்தது
கேட்க நாதியற்றுக் கிடந்தாய்.
வெள்ளைக்காரன் விட்டுப்போய் அம்பது வருடங்கள்
ஆயினுமென்ன?
அவன் போட்டுவிட்டுப் போன முடிச்சுகள்
இன றும்தான் இறுகிறது.
காலத்துக்கு வயதேற ஏறவும் தளர்வின்றி
கழுத்தைத் திருகி மூச்சுத் திணறவைக்கிறது முடிச்சு,
தேம்ஸ்நதி தன்தேவைக்கெனப் பெற்ற உன்னில்
மகாவலியும், கனகராயன் ஆறும்
மல்லுக்கட்டிப் புரண்டன நேற்று;
இருதயத்துக்குக் குருதிகொண்டோடும் நரம்பறுந்து போக
ஓமந்தையில் ஒட்டுப்போட்டது அதிகாரக் கொடிக கால்,
விளக்கு வைத்த குளம்கூட இருண்டிருந்தது,
ஒளிகொண்டுலவிய புலிவீரர்மட்டும் உன்னோடு.
ஊர்மனைகளை ஒட்டஇறைத்து எல்லோரும் போக
வழிமறித்திருந்த பிள்ளைகள் மட்டும் உன்னோடு,
தோலுரிந்து
எக்ஸிமா செதிலாகப் படையெழும்பி
படுக்கைப் புண்ணோடு நீ படுத்திருந்த போது
கதை முடிந்ததெனக் காற்றுரைக்கும் நாளுக்காக
காத்திருந்தனர் பலர்,
சிதையும் எரிந்து முடியட்டும் செலவுக்குப் போவோமென
நடந்தது வேறாகிப் போனது.
அம்பகாமத்தில் nஐயசிக்குறுவுக்கு அந்திரட்டி செய்தோம்
அன்று கொள்ளிவைக்க வராதவர்கள் கூட
இன்று பிண்டம்போடப் புறப்பட்டு வருகின்றனர்,
வென்று மீண்ட வீதியே!
புண்ணான மேனிக்கு புதூவும் கூத்து நடக்கிறது
ரணங்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை,
ஏறிவந்த யமருடன் பொருதி
முழத்துக்கு ஒருவராய் வீழ்ந்தவரை
எவர் நினைத்தார்?
புளியங் குளத்திலும், புதூர்ச் சந்தியிலும்
வழிமறித்திருந்த சோதரியரை எவர்வாய் பேசிற்று!
தடுத்தாட்கொண்ட தென்தமிழீழ மறவர்
கொடுத்த விலைக்கு எவர்தலை குனிந்தது!
பழையன மறக்கும் பண்பு இதிலுமா?
யு-9 தெருவே!
உனக்கு வாழ்வு வந்ததடி.
இன்று கரைமருங்கான கண்ணிகள் அகற்றி
முள்ளரண் தூர்த்து
பீரங்கி நிலைகள் பின் நகர்த்தி
துலாக்கால் தூக்கி
முதலில் சாமான் லொறிகளாம்
பின்னர்தான் "பெருங்குடிமக்களாம்"
காற்றின் திசையறிந்து நெல் தூர்த்தவும்
முதலில் போனவரென்ற முடிசூடவும்
ஆசனங்கள் அகப்பட்டால் அமரவும்
பங்குப்பணம் கேட்கவுமென
இனி எத்தனை "உறவுகள்" வந்துசேரும்,
கண்டிவீதியின் கரைமருங்குள்ள
காயமுற்ற மரங்களே!
குண்டுபட்டுக் குழியுண்ட வன்னி மண்ணே!
போய்வரப் போகும் உறவுகளுடன் பேசுங்கள்.
ஒளியேற்றிய வீரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு
சற்று விலகியிருப்பர்.
எம் பிள்ளைகளின் குருதிபடிந்த சுவடுகள்
இது இதுதான் என்று
உல்லாசப் பயணம் வரும் உறவுகளுக்குக்குக் காட்டுங்கள !
பார்த்து விட்டுப்போய்
கொழும்பில் பட்டிமன்றம் பேசட்டும்,
கவிதை எழுதி விற்கட்டும்.
மீண்டும் உன்னை மூடும் வரை
சொந்தங்களென உனக்கு ஆயிரம் போர்.

