08-05-2005, 11:53 PM
இணுவில் சம்பவத்திற்கு சிறிலங்கா அரசுத் தலைவர் கண்டனம்!
[கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
யாழ். இணுவில் பகுதியில் நேற்று காவல்துறை அத்தியட்சகர் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
முடிதிருத்தும் நிலையத்திற்கு சென்றிருந்த இராணுவ வீரர்களில் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றுமொரு பொதுமகன் காயமடைந்திருந்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் நிலவிய பதற்ற நிலையைக் கட்டுப்படுத்தச் சென்ற காவல்துறை அத்தியட்சகர் ஆத்திரமடைந்த மக்களினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசுத் தலைவர் உயிரிழந்த பொதுமகனின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 5 இராணுவ வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தயா ரட்நாயக்க தெரிவித்தார்.
முடிதிருத்தும் நிலையத்திற்கு சில இராணுவ வீரர்கள் சென்றதாகவும் அதன்போது இராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இராணுவ வாகனங்களின்மீது கற்களை வீசி சேதமாக்கியுள்ளதாகவும் கூறினார்.
காவல்துறை அத்தியட்சகர் நிலைமையைக் கட்டுப்படுத்தவே சம்பவ இடத்திற்கு சென்றார் என்றும் எனினும் மக்களின் ஆத்திரம் அவர்மீது திரும்பியிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆத்திரமடைந்த மக்கள் அவரது வாகனத்தை செல்லவிடாது தடுத்து நிறுத்தியதோடு வாகனத்திலிருந்து இறங்கியதும் அவரின் வாகனத்தை கடத்தியுள்ளனர் என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்தார்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் ஊடாக அவரைக் காப்பாற்ற முயற்சிக்கப்பட்ட போதிலும் அவரின் சடலத்தையே கண்டுபிடிக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.
அனைவரையும் அமைதியைக் கடைபிடிக்குமாறு அரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 5 இராணுவத்தினரும் காவல்துறை விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் உதவியின்றி யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெற்றிருக்க முடியாதென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் தயா ரட்நாயக்க வன்முறையைத் தூண்டுவதாக விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியுள்ளார்.
புதினம்

<b> .. .. !!</b>