Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணுவிலில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு
#31
<span style='font-size:25pt;line-height:100%'><b>பதற்றத்தை தணித்து அமைதிபேண படை அதிகாரிகளுக்கு பணிப்பு
திருமலையிலிருந்து படையினர் அனுப்பிவைப்பு; ஊரடங்கு நீக்கம் </b>
(கிருஷ்ணி கந்தசாமி)

யாழ்ப்பாணம் இணுவில் சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணித்து நாட்டில் தொடர்ந்து அமைதியைப் பேண நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மேற்படி, சம்பவத்தையடுத்து முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் உயரதிகாரிகளை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இந்த அவசர பணிப்பை விடுத்துள்ளார்.

நாட்டில் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, தற்பொழுது யுத்தநிறுத்தம் அமுலிலுள்ளபோது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இரு தரப்பினருக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இணுவில் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்களையும் அதனோடு தொடர்புடையவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேற்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இணுவில் சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இணுவில் பிரதேசத்தின் பாதுகாப்புக் கருதி, திருகோணமலையிலிருந்து மேலதிக துருப்புகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் கருத்து

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,இணுவில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தற்பொழுது இணுவில் பகுதிக்கு விரைந்துள்ளது.பொலிஸ் திணைக்களத்தில் நீண்ட காலம் சேவையாற்றிய சிரேஷ்ட அதிகாரி சார்ள்ஸ் விஜயவர்த்தன கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை பொலிஸ் திணைக்களத்துக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.இத்தகைய சம்பவங்களில் பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தமை தவறான செயலாகும். சட்டத்தை கையில் எடுக்க மக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.இணுவில் சென்றுள்ள விசேட பொலிஸ் குழு பூரண விசாரணைகளை நடத்தும். இணுவில் பகுதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

இதேவேளை, மேற்படி சம்பவத்தையடுத்து நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் அமைதியை நிலைநாட்டும் வகையில், தேடுதல் வேட்டைகளும் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரையான பிரதான வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</span>

-Veerakesari
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 08-04-2005, 02:24 PM
[No subject] - by tamilini - 08-04-2005, 02:26 PM
[No subject] - by வெண்ணிலா - 08-04-2005, 02:34 PM
[No subject] - by Danklas - 08-04-2005, 02:36 PM
[No subject] - by hari - 08-04-2005, 02:48 PM
[No subject] - by Danklas - 08-04-2005, 02:52 PM
[No subject] - by hari - 08-04-2005, 02:57 PM
[No subject] - by hari - 08-04-2005, 03:00 PM
[No subject] - by hari - 08-04-2005, 03:06 PM
[No subject] - by வன்னியன் - 08-04-2005, 03:11 PM
[No subject] - by வெண்ணிலா - 08-04-2005, 03:17 PM
SSP kidnapped &amp; killed - by AJeevan - 08-04-2005, 04:01 PM
[No subject] - by Danklas - 08-04-2005, 04:12 PM
[No subject] - by THAVAM - 08-04-2005, 06:49 PM
[No subject] - by கறுணா - 08-04-2005, 07:08 PM
[No subject] - by வினித் - 08-04-2005, 07:24 PM
[No subject] - by வியாசன் - 08-04-2005, 07:37 PM
[No subject] - by Niththila - 08-04-2005, 07:42 PM
[No subject] - by மின்னல் - 08-04-2005, 11:17 PM
[No subject] - by ஊமை - 08-05-2005, 01:06 AM
[No subject] - by hari - 08-05-2005, 02:19 AM
[No subject] - by hari - 08-05-2005, 02:21 AM
[No subject] - by மின்னல் - 08-05-2005, 06:16 AM
[No subject] - by Danklas - 08-05-2005, 07:06 AM
[No subject] - by AJeevan - 08-05-2005, 09:05 AM
[No subject] - by தமிழரசன் - 08-05-2005, 10:09 AM
[No subject] - by hari - 08-05-2005, 01:30 PM
[No subject] - by hari - 08-05-2005, 02:49 PM
[No subject] - by AJeevan - 08-05-2005, 10:44 PM
[No subject] - by AJeevan - 08-05-2005, 10:51 PM
[No subject] - by Rasikai - 08-05-2005, 11:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)