08-05-2005, 10:44 PM
<b>இணுவில் பகுதியில் ஊரடங்கு நீக்கம்</b>
நேற்று வன்செயல்களின் போது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வன்முறைகளையடுத்து நேற்றிரவு அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று பகல் நீக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று காலை முதல் தடைபட்டிருந்த முகமாலை இராணுவச் சோதனைச்சாவடி ஊடான பொது போக்குவரத்து இன்று பிற்பகலில் வழமைக்குத் திரும்பியதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்றைய வன்முறையின்போது கலகத்தில் ஈடுபட்டவர்களினால் கொல்லப்பட்ட யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தனவின் சடலம் அவரது சொந்த ஊராகிய குருநாகலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இணுவில் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் சம்பந்தப்பட்டதற்காகக் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவச் சிப்பாய்களையும் வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி இளங்கோவன் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இணுவில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-BBC