08-05-2005, 09:36 PM
Thala Wrote:ஒரு நாள் காலமை வாசகசாலைக்குப் போட்டுவாறன் எண்டு சொல்லிப்போட்டு முகத்தார் படலயால வெளிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சு கொஞ்சத்தூரத்தில ஒரு குரல் நில் முகத்தான் நில் , முகத்தார் நிண்டு திரும்பிப்பாக்கவும் ஒருவர் நிண்டு சொன்னவாறு இருந்தார் முன்னால போனா அந்த தென்ன மரத்துக் தென்னங்குலை உன்ர தலயில விழும். அவர் சொல்லிவாய் மூடமுன் தென்னங்குலை ஒண்டு கீழே விழுந்து தேங்காய்கள் சிதறி ஓடிச்சு. முகத்தார் உண்மையிலேயே வெலவெலத்துப்போனார்.
அந்த ஆளுக்குப் பக்கத்தில போன முகத்தார் "என்ர உயிரக் காப்பாத்தின நீங்கள் யார் ஐயா"? .அதுக்கு அவர் "என்னத் தெரியேல்ல நாந்தான் உன்ர குலம் காக்க வந்த உன்ர குல தெய்வம்". முகத்தார் ஒன்றும் பேசாம நடந்துபோய் விழுந்த தெங்காய் ஒன்ரை எடுத்து கோவம்மாய் அவரின் மேல் எறிந்து போட்டு கோவம் அடங்காமல் கத்தினார்...."நாசமாப்போனவனே நாப்பது வருசத்துக்கு முதல்ல எனக்கு கலியாணம் ஆச்சு அப்ப எங்க போனனீ "..........
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
.


