Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணுவிலில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு
#26
<b>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறையில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் கொலை</b>

யாழ் காங்கேசன்துறை வீதி இணுவில் சந்தியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் இடம்பெற்ற இராணுவத்தினரின் துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டு, இன்னுமொருவர் காயமடைந்த சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்ற
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804160235ssp203.jpg' border='0' alt='user posted image'>
யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன ஆத்திரமுற்ற கும்பலினால் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனை இலங்கையின் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இணுவிலுக்கும் சுதுமலைக்கும் இடையில் உள்ள பாலாவோடை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இவருடைய சடலத்தைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இணுவில் சந்தியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு சிகை அலங்காரம் நடைபெற்றதாகவும், அப்போது வாயிலில் காவலுக்கு நின்றிருந்த இன்னுமொரு சிப்பாயின் கையில் இருந்த துப்பாக்கியிலிருந்தே வேட்டுக்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804162728inuvil1203aa.jpg' border='0' alt='user posted image'>
சிகையலங்கார நிலையச் சம்பவத்தை அடுத்து இணுவில்லில் வன்முறைகள்

இச்சம்பவத்தில் சிகை அலங்கார நிலையத்தினுள் இருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் சிகையலங்கார நிலைய ஊழியராகிய ஜெயசீலன் சாந்தரூபன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவராகிய லோகதாஸ் என்ற மற்றவர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, வாயிலில் நின்றிருந்த இராணுவச் சிப்பாய் தப்பியோடியதாகவும், இவரை அங்கு குழுமியவர்கள் துரத்திச் சென்றபோது அவர் இணுவில் இராணுவ முகாமுக்குள் ஓடிச் சென்றதையடுத்து துரத்திச் சென்றவர்கள் கல்வீச்சு நடத்தியதுடன் வீதி மறியலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

தற்செயலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எனக் கூறப்படுகின்ற இந்தச் சம்பவத்தையடுத்து, காங்கேசன்துறை வீதியில் சென்ற இரண்டு இராணுவ வாகனங்கள் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிசாரும் இராணுவத்தினரும் அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீதி மறியலில் ஈடுபட்டு டயர்களைக் கொளுத்தியவர்களைக் கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடிப் பிரயோகமும் செய்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகல்வகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவ இடத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றபோதே யாழ் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜேவர்தன வழியில் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையில் இணுவில் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி இளங்கோவன் அங்கு நேரடியாகச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இணுவில் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reply


Messages In This Thread
[No subject] - by hari - 08-04-2005, 02:24 PM
[No subject] - by tamilini - 08-04-2005, 02:26 PM
[No subject] - by வெண்ணிலா - 08-04-2005, 02:34 PM
[No subject] - by Danklas - 08-04-2005, 02:36 PM
[No subject] - by hari - 08-04-2005, 02:48 PM
[No subject] - by Danklas - 08-04-2005, 02:52 PM
[No subject] - by hari - 08-04-2005, 02:57 PM
[No subject] - by hari - 08-04-2005, 03:00 PM
[No subject] - by hari - 08-04-2005, 03:06 PM
[No subject] - by வன்னியன் - 08-04-2005, 03:11 PM
[No subject] - by வெண்ணிலா - 08-04-2005, 03:17 PM
SSP kidnapped &amp; killed - by AJeevan - 08-04-2005, 04:01 PM
[No subject] - by Danklas - 08-04-2005, 04:12 PM
[No subject] - by THAVAM - 08-04-2005, 06:49 PM
[No subject] - by கறுணா - 08-04-2005, 07:08 PM
[No subject] - by வினித் - 08-04-2005, 07:24 PM
[No subject] - by வியாசன் - 08-04-2005, 07:37 PM
[No subject] - by Niththila - 08-04-2005, 07:42 PM
[No subject] - by மின்னல் - 08-04-2005, 11:17 PM
[No subject] - by ஊமை - 08-05-2005, 01:06 AM
[No subject] - by hari - 08-05-2005, 02:19 AM
[No subject] - by hari - 08-05-2005, 02:21 AM
[No subject] - by மின்னல் - 08-05-2005, 06:16 AM
[No subject] - by Danklas - 08-05-2005, 07:06 AM
[No subject] - by AJeevan - 08-05-2005, 09:05 AM
[No subject] - by தமிழரசன் - 08-05-2005, 10:09 AM
[No subject] - by hari - 08-05-2005, 01:30 PM
[No subject] - by hari - 08-05-2005, 02:49 PM
[No subject] - by AJeevan - 08-05-2005, 10:44 PM
[No subject] - by AJeevan - 08-05-2005, 10:51 PM
[No subject] - by Rasikai - 08-05-2005, 11:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)