10-18-2003, 12:42 PM
அதிகாரத்திலுள்ளவர்கள் எப்போது தான் அப்படி இருக்கவில்லை? அப்பாவிகளின் தோளிலே சவாரிவிடுவது அவர்களின் சுக போக வாழ்வுக்குத் தானே? அதற்காக பொங்குதமிழிற்கு அவர்கள் வந்தார்கள் என்று பொங்குதமிழை குற்றம் சாட்டுவது என்ன நியதி. வந்தவர்கள். அவர்களையோ அல்லது அவர்களின் குடும்பத்திலுள்ளவர்களோ சத்துணவு இல்லாமல் கஸ்டப்படுகின்றார்கள் என்றா சொன்னார்கள். வடகிழக்கில் வாழும் சிறுவர் சிறுமியரைப்பற்றித் தானே கூறியிருந்தார்கள். அது அவர்களின் வாயால் வந்தது என்ன தப்பு. அதிகாரத்தில் உள்ளவர்களின் வாயாலாவது அங்குள்ள நிலைமை வெளிப்படட்டுமே. அதற்கு இப்படிப் பொறிவது நியாயமா? ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை கழுத்தி;ல் பட்டிகட்டிக் கொண்டிருப்பவர்கள் கதையையும் அதிகார வர்க்கத்தின் பித்தலாட்டங்களையும் தானே செவிமடுக்கின்றனர். அவர்களின் வாயல் இவைகள் வெளிவரட்டும். அப்போதாவது அவர்களின் காதுகளில் விழுகின்றதா என்று பார்ப்போம். யார் கத்தினாலும் அதனால் அங்குள்ள குருத்துகளுக்குப் பயன் கிடைத்தால் மகிழ்ச்சிதானே.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

