08-05-2005, 02:15 AM
காதலில் உண்மையாக இருப்பவர்கள் ஆண்கள் மட்டும் தான் என்றோ அல்லது பெண்கள் மட்டும் தான் என்றோ வரையறுத்துக் கூற முடியாது....ஆண்களில் ராமன்களும் இருக்கிறார்கள் கோவலனும் இருக்கிறார்கள்... பெண்களில் கண்ணகிகளும் இருக்கிறார்கள் மாதவிகளும் இருக்கிறார்கள்.....அதனால் காதல் என்பதை புனிதமாகப் பார்ப்பாவர்கள் காதலை உண்மையாகப் பார்ப்பார்கள்...காதலைப் பொழுதுபோக்காகப் பார்க்கும் ஆணோ பெண்ணோ பொழுதுபோக்காகத் தான் பார்ப்பார்கள்.. அன்பின் அடிப்படையில் காதல் பிறக்கும் போது உண்மை அங்கு நிலைத்து நிற்கும்...இந்தக்கால காதலுக்கு அன்றைய கால நிலை இல்லை என்றே சொல்லாம்.....காதலை பண்டமாற்றாக பார்க்கும் நிலை இருக்கிறதே இந்த நவீன யுகத்தில்....அதனால் உண்மைக் காதல் என்பது தனிய ஆண்களிடமோ அல்லது தனிய பெண்களிடமோ இருக்கும் என்று நினைப்பது தவறு...அது ஒவ்வொரு உள்ளத்தையும் பொறுத்தது..... :wink:
" "
" "
" "

