08-04-2005, 10:35 PM
ஜிஜி பொன்னம்பலத்தாரிண்ட இன்னொரு கதை நாபகம் வருகுது,அத்தக் காலத்தில பானுக்கு கட்டுப் பாட்டு விலை இருந்திச்சல்லோ அப்ப ஜிஜின்ட கட்சிக்காரர் பாணக் கூட விலைக்கு வித்து மாட்டுப்பட்டுப் போனார்.கோட்டில வாங்கின பாணோட வந்தார் எங்கட சிறி லன்கா போலீசுக்காரர் முத்து பண்டா, நீதிபதீட்ட பாணக்காட்டி சேர் இந்தப் பாணை 50 சதத்துக்கு விக்காம 60 சதத்துக்கு விக்கிறார் எண்டார், அப்ப எங்கட் ஜிஜியார் நீதிபதியப் பாத்து ,சேர் எண்ட கட்சிக்காரர் பாணை 50 சதத்துக்குத்தான் வித்தவர்,மீதி 10 சதம் இந்தப் பாண் சுத்திருக்கிற பேப்பருக்கு எண்டார்.முத்துப் பண்டா திகச்சுப் போனார்.

